ஈழத்தில் தமிழர்களின் ஆதரவோடு வாழும் தெலுங்கர்கள்,
மலையாளிகள், கன்னடர்கள் நலன் குறித்து தென் மாநில முதல்வர்களை சந்திப்பு.
—————————————————-
இலங்கையில் கடந்த நூற்றாண்டில் மலையகத்துக்குத் தமிழர்கள் சென்றது போல, ஆந்திரத்திலிருந்து தெலுங்கர்களும் அங்கே சென்று மலையகத்தில் வாழந்தனர். அதை போலவே மலையாளிகள், கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு கன்னட மொழி பேசும் மக்கள் அங்கு உள்ளனர். ஈழம் மற்றும மலையக தமிழர்களிடன் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஏறத்தாழ இருபது, இருபத்தைந்து கிராமங்களில் தெலுங்கு பேசும் மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டாக அங்கே குடியிருக்கின்றனர். அவர்களுடைய பிரச்னைகள் குறித்து தெலங்கானா முதல்வரிடம் பேச ஹைதராபாத் வந்துள்ளேன் . இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மற்றும் என். சந்திரபாபு நாயுடுவையும் சந்திக்க உள்ளோம். மேலும் கேரள முதல்வர், கர்நாடக முதல்வரையும் சந்திக்க வேண்டும்.
இலங்கையில் தெலுங்கைத் தாய்மொழியாகப் பேசும் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. நிரந்தரமாக ஒரே இடத்தில் இல்லாது இடம்பெயர்ந்து வாழும் இவர்களைப் பல தொண்டு நிறுவனங்கள் குடியமர்த்தி வருகின்றன. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழ்ந்தாலும், வடக்கு-கிழக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பேர் வாழ்கின்றனர். தமிழ்,தெலுங்கு பேசுகின்றனர்.
#ksrpost
29-10-2022.
No comments:
Post a Comment