Monday, July 29, 2024

தனது நிலத்தில் எதை விளைவிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை ஒரு உழவனுக்குதான் இருக்க வேண்டும்.


 தனது நிலத்தில் எதை விளைவிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை ஒரு உழவனுக்குதான் இருக்க வேண்டும்.          தாம் எந்த வகையான உணவை உண்ண வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை குடிமக்களுக்குத்தான் இருக்க வேண்டும். இதுதான் ஒரு விவசாய நாட்டின் இறையாண்மை. ஆனால் நாம் எதை விதைக்க வேண்டும், எதை உண்ண வேண்டும் என்பதை இங்கு ஒரு அந்நியன் தான் தீர்மானிக்கிறான். என்ன ஒரு அவலம் இது??? 

••••


ஒரு பயிர் தனக்கு வேண்டிய சத்துக்களை பஞ்சபூதங்கள் வழியாகவே எடுத்துக் கொள்கிறது.


நீர், நிலம் காற்று நெருப்பு வானம் என ஐந்தின் வழியாக பெருகிறது.


இதில் மண்ணின் பங்களிப்பு 4% அளவுக்கு மட்டுமே.


மீதி 96% சத்துக்களை மற்றவைகள் பகிர்ந்து அளிக்கிறது.


இந்த 4% சத்துக்காக எவ்வளவு மென கெடுகிறோம்? எவ்வளவு கடன்கள்?


மண்ணை முழுமையாக பராமரிப்பு செய்யும் பட்சத்தில் நிறையவே சேமிக்க முடியும்.


மண்ணில் மக்கு நிலை உயர வழி வகுத்தால் போதும்.


மண்ணில் கார்பனை நிலைநிறுத்த முயற்சிக் வேண்டும்.


1% அளவுக்காவது இது மண்ணில் இருக்கனும்.


மண்ணின் கரிமச் சத்துக்கள் என்று ஒரே வார்த்தையில் கடந்து விடுகிறோம்.

 SOC (Soil Organic Carbon).


இயற்கை விவசாயத்துக்கு வந்த பின் இது என்னை மிக ஈர்த்த ஒன்று.


இந்த SOC இயற்கை விவசாயத்தின் ஆனிவேர் என்பது என் நிலைப்பாடு.


இதற்கு அம்மா ஸ்தானம் இயற்கை விவசாயத்தில்.


இயற்கை விவசாயத்துக்கு மட்டும் அல்ல,

நமது வாழ்க்கையிலும் இது பெரும் பங்கு வகிக்கிறது.

இது மிகப் பெரிய topic. கண்டிப்பாக நாம் முடியும் வரை தெரிந்து கொள்ள வேண்டும்.


SOM ( Soil Organic Matter)

இது மக்கிப்போன தாவரம் மற்றும் விலங்குகளின் பகுதிகளும், நுண்ணுயிரிகளும் கலந்த ஒரு கலவை.

கார்பன் இல்லாமல் நுண்ணுயிரிகள் வாழ்வதும், பெருகுவதும் இயலாது.


Humus

இதுதான் மண்ணில் கார்பனின் உச்ச பரிணாமம்.

organic matter தன்னுடைய இயல்பு நிலையில் இருந்து முழுமையாக மாறிப் போன நிலை.

you can not identify the organic matter that formed that humus.

இயற்கை விவசாயத்தில் உன்னத நிலை.

இதுதான் பயிர்களுக்கு அனைத்து சத்துக்களையும் கொடுக்க வல்லது.

குழந்தைக்கு தாய்ப்பால் போன்றது.


மண்ணில் இருக்கும் கார்பன் (SOC) அளவு காற்று மண்டலத்தில் இருக்கும் கார்பன் + தாவரங்களில் உள்ளது போல இரண்டு மடங்கு.


தொழிற்புரட்சிக்கு (1750) பின் காற்று மண்டலத்தில் 37% கார்பன் அதிகரித்தது உள்ளதாக சொல்கிறார்கள். (383ppm)


காற்றில் உள்ள கார்பனை மண்ணில் சேர்க்க ஒளிச்சேர்க்கை மட்டுமே உதவும்.


மண்ணில் ஒரு டன் அளவுக்கு கார்பனை சேர்க்க முடியுமானால் காற்றில் 3.67 டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு குறையும்


மக்கும் ஆர்கானிக் கழிவுகள் மக்கும் பொழுது அதன் எடையில் சுமார் 5-10% அளவுக்கு தான் மண்ணில் கார்பன் நிலை நிறுத்தப்படுகிறது.


ஒரு டன் காய்ந்த கழிவுகளில் 450 கிலோ கார்பன் இருக்கும். அது soil organic carbon (SOC) ஆக மாறும் போது வெறும் 45கிலோ அளவுக்கு தான் இருக்கும்.

அதாவது 4.5% மட்டுமே.


இப்போது சொல்லுங்கள் மண்ணில் மக்கு நிலை உயர எவ்வளவு குப்பை சேர்க்க வேண்டும் என்று.


#விவசாயம்

#farmingfolk

#agriculture


படம்:- ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியில்.

No comments:

Post a Comment

இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...