Monday, July 29, 2024

#சுனிதாவில்லியம்ஸ்

#சுனிதாவில்லியம்ஸ் 

——————————-

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக விண்வெளி ஆய்வாளர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்திற்குச் சென்று வெற்றிகரமாகத் தனது ஆய்வை தொடர்ந்தார் என்பது தெரிந்ததுதான்.


சர்வதேச விண்வெளி மையத்திற்கான வேலைத்திட்டமாக விண்வெளி வீரர்களை அங்கே அனுப்பும் வகையிலான கேப்சூல்  விண்கலங்களைத் தயாரிக்கும் பொறுப்பை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா அதற்கு வழங்கி இருந்தது.


இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்! இவர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பலமுறை சென்று திரும்பிய அனுபவம் மிக்கவர்.


இவருடன் மற்றும் ஒரு விண்வெளி வீரர் புட்ச் வில் மோர் ஆகிய இருவரும் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி  மையத்தை வெற்றிகரமாகச் சென்று அடைந்து விட்டது.


அங்கு ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டதும் அதனால் விண்கலத்தை இயக்கும் 28 தர்ஸ்டர்களில் ஐந்து செயல்படாததும் தற்செயலாகக் கண்டறியப்பட்டன.


இதை விண்வெளியிலேயே சரி செய்யும் முயற்சியில் நாசா இன்ஜினியர்கள் ஈடுபட்டதால் ஸ்டார்லைனர் விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி பூமி திரும்புவதாக இருந்த பயணம் இருமுறை ஒத்தி போடப்பட்டுள்ளது. அதற்கான மறு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியதாவது 


பரிசோதனை முயற்சியாக முதல் முதலில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஸ்டார் லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் பயணம் செய்ததற்காக அவரது தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும். அதில் ஏற்பட்ட ஹிலியம் எரிவாயு கசிவால் டிரஸ்டர்கள் இயங்காததைச் சரி செய்யும் படியான பணி நடைபெறுகிறது. அதனால் அவர் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது என்று பலர் யோசித்தாலும் இது மிகவும் கவலையளிக்க கூடிய விஷயம் எல்லாம் இல்லை. சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பாதுகாப்பான இடம். அங்கு தற்போது மொத்தம் ஒன்பது விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர். அனைவரும் ஒருநாள் பூமி திரும்பியாக வேண்டும் தொழில்நுட்பக் கோளாறைச் சரி செய்யும் தாமதத்தால் அவர்கள் ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டதாக யாரும் கருதக்கூடாது. அவர்களை பூமிக்கு அழைத்துவரும் திறன் நாசாவுக்கு உள்ளது என்று சொல்லியுள்ளார்.


இந்த வகையில் இந்தியாவும் கேப்சூல் வடிவ விண்கலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் நாம் பெருமை அடைவோம்! சுனிதா வில்லியம்ஸிற்கு மிகச்சிறந்த அனுபவமும் திறனும் உள்ளது. அவர் வெற்றிகரமாக பூமி திரும்ப வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

12-7-2024

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...