Monday, July 29, 2024

சு வெங்கடேசன் நாடாளுமன்ற பேச்சுக்கு, தெலுங்கு நாயக்கர்களை வகைப்படுத்திப் பேசுவது நல்லதல்ல.



சு வெங்கடேசன் நாடாளுமன்ற பேச்சுக்கு, தெலுங்கு நாயக்கர்களை வகைப்படுத்திப் பேசுவது நல்லதல்ல. 

—————————————

மீண்டும் மீண்டும் சு வெங்கடேசன் செங்கோல் பற்றித் தேவையில்லாத பேச்சுகளைக் கிளப்பித் தனக்குப் பின்னால் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில்; கடந்த கால வரலாறுகள் ஏதும் தெரியாமல் நாடாளுமன்றத்தில் உளறிக் கொட்டினார் என்றால் அவரிடம் கேள்வியை  கேளுங்கள்.


மூவேந்தர் முதல்விஜயநகர பேரரசு மதுரை,தஞ்சை, செஞ்சி நாயக்கர்கள ஆட்சி வரை எல்லோரும் செங்கோலைக் கொண்டு தான் ஆட்சி புரிந்தார்கள்.


சோழர்கள் ஆந்திரா வரை சென்று ஆட்சி புரிந்ததெல்லாம் வரலாற்றில் இருக்கிறது. சு வெங்கடேசன் மீது உள்ள எதிர் வினையில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரையும் தெலுங்கு பேசும் மக்களையும் அவதூறாக்குவது அல்லது திரித்துப் பேசுவது நியாயம் அல்ல . எல்லோரும் செங்கோல் வழுவாமல் நல் ஆட்சி நடத்தினார்கள். தொந்தி நாயக்கர் என்று திருமலை நாயக்கரின் செயல்களை குறைத்து மதிப்பிட்டு விட்டு ஏகடியம் நிந்தனை செய்வது அபத்த வினை ஆகும் . கண்டனத்துக்குரியது…… 


அவரின் காலத்தில் தான் மதுரை மிகப்பெரும் விரிவான உள்ளக சட்டக அமைப்பை கொண்டு வந்தது. 

அனைத்து மக்களுக்குமான நகரமாக மதுரை விரிவடைந்தது.குளங்கள், அன்ன சத்திரங்கள், மண் சாலைகள் என பல வசதிகள் ஏற்பட்டன. 


தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் அவரவர் காலத்தில் மிக சிறப்பாக அவர்களின் ஆட்சியை மேலே குறிப்பிட்டது போல செங்கோல் வழுவாமல் நடத்தினார்கள் என்பது தான் வரலாறு.


நானும் தமிழகத்தைப் பூர்வீகமாகவும் உரிமையாகவும் கொண்டு தெலுங்கு பேசும் தமிழனதான் என்ற வகையில் இயங்கி வந்துள்ளேன் . அதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதுமில்லை! இதை அரசியல் களத்தில் ‘மற்றவர்கள்’ போல மூடி மறைத்து வைப்பவன் அல்ல.எனக்கு ஆந்திராவைப் பற்றிய தொடர்பும் இல்லை.


ஆனால், கடந்த காலங்களில் தமிழக உரிமைகளுக்கு  உச்ச நீதி மன்றங்கள் வரை சென்று 1983 முதல் 45 பொது நல வழக்குகளைத் தொடுத்து நீதி பெற்று இருக்கிறேன். இது என்னுடைய தமிழ் வாழ்வின் அங்கம். இச்செயலை செய்வதற்கு என்னை யாரும் தூண்ட வேண்டியதில்லை அது என் உணர்வுபூர்வமான தமிழ்மண் மீது பிடிப்பு விவகாரம்.


வரலாற்றைத் திரும்பி பார்க்க வேண்டும். சத்தியநாத ஐயர், கே கே பிள்ளை,

நீலகண்ட சாஸ்திரி, ரங்கசாமி ஐயங்கார், அ. கி. பரந்தாமனார் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் காலகாலமாகச் சொன்னதை வாசித்து விட்டு வந்து இங்குள்ள நாயக்கர் மக்களை விமர்சிக்கவும்.


கோவையில் ஜி டி நாயுடு ஜி ஆர் தாமோதரன்  கிரா வரை போன்ற பலரும் (தனி பட்டியல் உண்டு)தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு உள்ளார்கள். எவ்வளவோ பேர்கள் கல்வித்துறை நீதித்துறை தொழில்துறை போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுத் தமிழ்நாட்டுடைய பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டு இருக்கிறார்கள். பிறகு பலப் பல அறக்கட்டளைகள் நிறுவி எளிய மக்களுக்கு உதவிகள் செய்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதற்கு எல்லாம் சர்டிபிகேட் தரத் தேவையில்லை.  


சு வெங்கடேசன் நாடாளுமன்ற பேச்சுக்கு, தெலுங்கு நாயக்கர்கள் என்று  வகைப்படுத்திப் பேசுவது நல்லதல்ல. மிகுந்த கௌரவமானவர்களை கொண்டு தான் தமிழ்நாட்டு அரசியல் நீடித்து வந்திருக்கிறது ஒருவர் ஒருவர் புரிந்து கொண்டு தான் சாதி பேதமற்று இந்த ஆட்சி முறையை இதுவரை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.


இன்று பழ கருப்பையா அவர்களின் காணொளியைப் பார்த்தேன். தமிழ்

மன்னர் காலத்தில் அந்தப்புரத்தில் பல பெண்கள் தாசிகளாக இருந்தார்கள்  என்றெல்லாம் பேசி வரும் 

சு வெங்கடேசனுக்கு  கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

சீனாவின் மாவோ பற்றிய நூல் எல்லாம் படித்து  பழ கருப்பையா அங்கே  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதெல்லாம் தெரிந்து கொண்டு இந்த   சு வெங்கடேசன் பேச வேண்டும் என்று அவர் பல விடயங்களை அடுக்கித் தருகிறார் . அதையெல்லாம் கேட்கும் போது  வெறும் பதவி ஆசைக்காக திமுக அடிவருடியாக மாறி எது வேண்டுமானாலும் பேசி வரும் சந்தர்ப்பவாத வெங்கடேசனின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. 


இதைத்தான் நான் சொல்கிறேன்.கீழடி விவகாரத்தில் குறுக்கே புகுந்து மீடியாக்களைத் தன் பக்கம்  இழுத்தது போலவே இந்த செங்கோல் விவகாரத்திலும் தனக்கான கவனத்தை இழுக்க சு வெங்கடேசன் முயற்சிக்கிறார் இது சிறுபிள்ளைத்தனமானது. வரலாறு

அவரை மன்னிக்காது.


#செங்கோல்

#sengolcontroversy

#telgunaickersoftamilnadu

#தெலுங்குநாயக்கர்கள்


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

5-7-2024

@trending

 

@GoogleTrends

 

No comments:

Post a Comment

இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...