Monday, July 29, 2024

மடத்தில் வாங்கிக் கொண்டுதானே ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்..

 



மடத்தில் வாங்கிக் கொண்டுதானே ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.. ஒவ்வொரு நாடும் பலவித மாதிரிகளில் ஆட்சியின் சின்னமாக வைத்திருக்கிறார்கள். 

அந்த மரபையெல்லாம் கேள்வி கேட்பதற்கு இந்த மகா புத்திசாலி வந்திருக்கிறார் போல் இருக்கிறது. நெருக்கடி காலகட்டத்தில் இதே மார்க்சிஸ்ட்காரர்கள் காங்கிரஸை எத்தனை விதமாகத் திட்டினார்கள்!

இன்று காங்கிரசுக்கு கொடி பிடிக்கிறார்கள். கடந்து 50 வருடங்களாக இவர்கள் தான் காங்கிரஸுக்கு கொடி பிடித்து அதை த் தோளில்  தூக்கி ஆடி அதன் மூலம் நாட்டை நாசமாக்கினார்கள். கேரள,  மே வங்கம், திரிபுரா என்ற பகுதியில் வேறு நிலை….


வரலாறு தெரியாதவர்கள் வேண்டுமானால் இந்த இப்படிபட்ட இடதுசாரிகளைப் பற்றி கவர்ச்சிகரமாக யோசித்து கொண்டு இருக்கலாம்.


பிறகு இப்போது கேரளாவில் காங்கிரஸ் ஜெயிக்கவில்லையா பார்லிமென்ட்டில் மட்டும் தான் ராகுல் காந்தி ஜெயித்தாரா? என்ன பேசுகிறார்கள் இவர்கள்.பாம்பும் சாகக் கூடாது! தடியும் நோகக் கூடாது! என்ன ஒரு சந்தர்ப்பவாதம்!


கடந்த காலங்களில் இந்த மார்க்சிஸ்ட்டுகள் பெண்ணியப் பிரச்சனைகளையும் தலித் பிரச்சனைகளையும் மட்டுமே பேசி வருகிறார்கள். வர்க்க பேதம்,தொழிலாளர்கள் பிரச்சனை விவசாயக் கூலிகள் பிரச்சனை வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பற்றி எந்த பேச்சும் பேசுவதில்லை. தமிழ் நாட்டினுடைய தாவாக்கள் எல்லைகள் நதிநீர் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றிலும் இவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அதற்காக அவர்கள் போராடுவதுமில்லை. சு வெங்கடேசனை முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றி முதலில் பேசச் சொல்லுங்கள்! அதற்கு ஒரு போராட்டத்தை நடத்தச் சொல்லுங்கள். அங்கே சிபிஎம் ஆட்சி. அவர்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்வார்களா  இந்த மார்க்சிஸ்ட் காரர்கள் என்று நாமும் பார்க்கலாம். அதை விட்டுவிட்டு சு வெங்கடேசனை வைத்து எல்லாம் தெரிந்தது மாதிரி பேசிக் கொண்டிருக்க கூடாது. மீண்டும் கேட்கிறேன் இவர் எப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்குள் வந்தார். அதற்கு முன்பு இருந்த உ. வாசுகி போன்ற பல தகுதி வாய்ந்த முறையான நபர்கள் ஏன் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உங்களுடைய உள் கட்சிப் பிரச்சனை என்று எதையும் பூசி மெழுகி விட முடியாது?


முல்லைப் பெரியாறு தொட்டு 15  கேரள நதி நீர் பிரச்சனைகள் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையில்  நெடுங்காலமாய் உண்டு. கேரள குப்பைகளை தமிழக எல்லையில் கொட்டல், அட்டப்படி தமிழர் சிக்கல் என பல….

இது குறித்து தமிழ்நாடு  மார்க்சிஸ்ட் கள் சு வெங்கடேசனை கொண்டு போராடி அவற்றையெல்லாம் தமிழக மக்களின் உரிமை நலத்திற்கு விவசாயத்திற்கு குடிநீருக்குப் போராட்டம் செய்து வாங்கி தர வேண்டும்.


கீழடியைக் காட்டி மேலடி வேலைகளை மறைக்கக் கூடாது.


#செங்கோல்

#sengolcontroversy


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

4-7-2024.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...