Monday, July 29, 2024

திருமந்திரத்தில் குறிப்பிடாத மருத்துவக் குறிப்புகளே இல்லை. தவிர மனிதரின் ஆயுளுக்கு வாழும் முறை மட்டும் காரணம் இல்லை.. உடலுறவின் போதே,

 திருமந்திரத்தில் குறிப்பிடாத மருத்துவக் குறிப்புகளே இல்லை. தவிர மனிதரின் ஆயுளுக்கு வாழும் முறை மட்டும் காரணம் இல்லை.. உடலுறவின் போதே, குழந்தையின் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது என்றும் நூலில் குறிப்பிடுகிறார்.

இந்நூலில், ‘479. யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல்‘ அதிகாரத்தில் இதைக் குறிப்பிடுகிறார்.

“பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும்

பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே” என்பதே அந்த அதிகாரம்.

இதன் பொருள்:

“ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்” என்கிறது திருமூலர் அருளிய திருமந்திரம்

No comments:

Post a Comment

இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...