Monday, July 29, 2024

#முதல்வர்ஸ்டாலின்அவர்களே,

 



#முதல்வர்ஸ்டாலின்அவர்களே,

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் 28 இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் இலங்கையைச் சேர்ந்த உமா குமரன் என்கிற பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உணர்வுப் பூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எப்போதும் ஈழத்தமிழர் பிரச்சனையில் அவ்வளவு அக்கறை இல்லாதவர் இவ்வளவு ஆவலாக முந்தி சென்று உமா குமரன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

என்ன ஒரு ஈழதமிழர் பற்று. எதற்கு இந்த பொய் வேஷம் எதை மறைக்க இந்த நாடகங்கள்.

டெசோ மாநாடுகளில் நான் முன்னெடுத்த பல தீர்மானங்கள் குறித்து நீங்கள் ஏதேனும் ஒன்றைக் காதில் போட்டுக் கொண்டீர்களா? அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தீர்களா? ஏதோ அக்கறை உள்ளவர் போல எங்களது வம்சாவளியில் வந்த அந்தத் தமிழ் பெண்மணிக்கு வாழ்த்து சொல்ல 
இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? 

இது ஆர்வத்தை டெசோமாநாடுகளில் நீங்கள் எப்போதாவது காண்பித்தீர்களா? நீங்களே கலந்து கொண்ட அந்த மாநாடுகளில் அதன் எந்த ஒரு தீர்மானத்தையாவது நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று அக்கரை பட்டு உள்ளீர்களா? ஆனால் 2012 இல் நான் தயாரித்த ஆவனங்கள் ஐநா எடுத்து செல்லவும்,லண்டன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் சிக்கல்
குறித்து நான் அங்கு அழைத்து சென்றதவது உங்கள் நினைவில் உள்ளதா? முதல்வர் ஸ்டாலின் அவர்களே! 

அத்தனை செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்த என்னை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டீர்கள்! எந்த பெயரும் என்னைச் சார்ந்து விடக் கூடாது என்பதற்காக சுலபமாக என்னை வெளியில் நிறுத்தவும் தெரிந்திருக்கிறீர்கள்!  போகட்டும்! உண்மையில் அதற்காக இரவும் பகலும் உழைத்த எனக்குத் தான் அந்த வலி தெரியும்! இப்போது உமா குமரன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறீர்கள்.

நீங்கள் எதற்குத் தலையைக் காட்டுவீர்கள் எதற்கு வாலைக் காட்டுவீர்கள் என்று அறிந்து தான் இருக்கிறேன். வாழ்த்துக்கள்

#டெசோ
#teso
#DMK
#Stalin

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
6-7-2024

@trending
 
@senior_tamilan

No comments:

Post a Comment

இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...