Monday, July 29, 2024

பல ஆண்டுகள கழித்து என்னின் மொத்த பாதையையும் ரசித்தேன்! பொறுமைப் பார்வை ஏறி இருக்கிறது என் மேல்! பொறுமையான பேச்சு வெளியேறுகிறது! பொறுமையாய் வலி பதில் சொல்கிறது.!


 பல ஆண்டுகள கழித்து என்னின் மொத்த பாதையையும் ரசித்தேன்! பொறுமைப் பார்வை ஏறி இருக்கிறது என் மேல்! பொறுமையான பேச்சு வெளியேறுகிறது! பொறுமையாய் வலி பதில் சொல்கிறது.!

தூய உள்ளம் என்பது கனவற்ற கவலைகளற்ற பிரக்ஞையற்ற உலகத்தில் என் பெயரை கொடுத்தேன்.

கடிவதும் இல்லை! பிழைகள இல்லை! யார் மீதும் கோபம் இல்லை பல நாட்களின் தேடலில் எங்கும் நிலை பெற முடியவில்லை! எவ்வளவு பெரிய நிழல்களையும் தவிர்த்தேன்! பாதத்தில் கொப்புளங்கள் இதமாக இருந்தது! செருப்பாகச் செயல்பட்டது!

எதன் வழியாய் என்று தெரியவில்லை! ஏதோ ஒரு கடல் என வந்தடை என்கிறது! நான் கல்லிலும் முள்ளிலும் பயணப்பட்டேன். எனது கல்லூரி காலங்கள் நினைவிங் இல்லை! என்னை பார்த்து எல்லோரும் ரசித்தனர்! எனக்குள் மகிழ்ச்சி இல்லை! நான் வேறு எதையோ தேடுகிறேன்! என்னிடம் எதுவும் தொலைய வில்லை!

என் பயணத்தின் தீர்க்கம் தொலைவுகளைத் தொலைவு படுத்தியது! நான் பயணப்பட்டேன். மாலை வேளைகளில் பூக்களாய் உதிர்ந்து போனேன்! பூக்களில் ஒளிந்திருக்கும் வேர்கள் பற்றிய தகவமைப்பு எனக்குப் புரியவில்லை! சில நாட்களில் மக்கினேன். சில நாட்களில் மலர்ந்தேன்!
•••
மனிதர்களுக்கு இடையே திறமையில் பெருமளவிற்கான சமத்துவமின்மை நிலவுகிறது, இல்லையா?

அங்கு ஜெட் விமானத்தை வடிவமைக்கும் அந்த மனிதரும் இருக்கிறார், ஏர் பிடித்து உழும் மனிதரும் இருக்கிறார். 

திறமையில் இருக்கும் இந்தப் பெரும்  வேறுபாடுகள்-  அறிவுசார்ந்த, கருத்துப் பரிமாற்றம் சார்ந்த, உடல் சார்ந்த வேறுபாடுகள் - தவிர்க்க முடியாத விஷயம் ஆகும்.

ஆனால் நீங்கள் கவனியுங்கள், நாம் சில பதவிகளுக்கு பிரமாண்டமான வகையில் முக்கியத்துவம் தருகிறோம்.

நாம் கவர்னர், பிரதமர், கண்டுபிடிப்பாளர், விஞ்ஞானி இவர்களை ஒரு வேலைக்காரரைவிட பெருமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதுகிறோம்; ஆகவே பதவி ஒரு அந்தஸ்தைப் பெறுகிறது.

நாம் குறிப்பிட்டப் பதவிகளுக்கு அந்தஸ்தைத் தரும்வரை, அங்கு ஒரு சமத்துவமின்மை என்ற உணர்வு நிச்சயமாக இருக்கும்,  மேலும் திறமையானவர்களுக்கும் திறமையற்றவர்களுக்கும் இடையேயான இடைவெளி இணைக்கமுடியாததாக ஆகிறது. 

நம்மால் பதவியை அந்தஸ்து இல்லாமல் வைக்க முடியும் என்றால், அப்போது ஒரு உண்மையான சமத்துவ உணர்வைக் கொண்டுவருவதற்கான சாத்தியம் உள்ளது.

ஆனால், அதற்கு அங்கு அன்பு இருக்கவேண்டும்; ஏனெனில் அன்பு தான் அதுதான் உயர்ந்தவர் மற்றும் தாழ்ந்தவர் என்ற உணர்வை அழிக்கிறது.

இந்த உலகம் இருப்பவர்கள் - பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள், திறமைமிக்கவர்கள், அனைத்தும் பெற்றுள்ளவர்கள்- மற்றும் இல்லாதவர்கள் என பிளவுபட்டு உள்ளது.

"இருப்பவர்கள்" மற்றும் 
 " இல்லாதவர்கள்" இவர்களுக்கு இடையே ஒரு பிளவு இல்லாத ஒரு உலகை உருவாக்குவது சாத்தியமா?

உண்மையில் என்ன நிகழ்கிறது என்றால் -

பணக்காரருக்கும் ஏழைக்கும் இடையே இருக்கும், அதிகத் திறமை வாய்ந்த வருக்கும் குறைந்த திறமைவாய்ந்த அல்லது திறமையற்றவருக்கும் இடையே இருக்கும் இந்தப் பிளவை, இந்தக் கடுமையான இடைவெளியைப் பார்த்து, அரசியல்வாதிகளும் பொருளாதார நிபுணர்களும் சமூக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலமாகப் பிரச்சனையைத் தீர்க்க முயல்கிறார்கள்.

அது சரியாக இருக்கலாம். 

ஆனால் நாம் பகைமை, பொறாமை, வன்மம் இவைகளின் முழுச் செயல்முறைகளையும் புரிந்து கொள்ளதவரை ஒரு உண்மையான மாற்றம் ஒருபோதும் உண்டாகாது.

இந்தச் செயல்முறை புரிந்து கொள்ளப்பட்டு முடிவுக்கு வரும்போது மட்டுமே அப்போதுதான் நம் இதயத்தில் அன்பு இருக்கக்கூடும் என்பதனால்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-7-2024.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...