Monday, July 29, 2024

#உண்மையானவார்த்தைகள்_எப்போதும்அழகாய்இருப்பதில்லை..!!


 #உண்மையானவார்த்தைகள்_எப்போதும்அழகாய்இருப்பதில்லை..!! 

—————————————

உங்களுக்கானவைகளை நீங்களே திட்டமிட்டு கொள்ளாத வரை வாழ்க்கை உங்களை எச்சரித்துக் கொண்டுதான் இருக்கும்!!


உண்மையான வார்த்தைகள்

எப்போதும் அழகாய்

இருப்பதில்லை..!!

அழகான வார்த்தைகள்

எப்போதும் உண்மையாக

இருப்பதில்லை..!! 


நேற்று ராயபுரம் ஏழுமலை கொலை சம்பந்தமாக நான் எழுதிய பதிவிற்கும் 

ம தி மு க வின் தோற்றம் வளர்ச்சி பற்றி எழுதிய குறிப்புகளையும் பார்த்துவிட்டுப் பலரும் தொலைபேசியில்  இப்படி எல்லாம் நடந்திருக்கிறது! அதிகம் வெளியே தெரியவில்லையே! உங்கள் பதிவு மிக நுட்பமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது.   உங்கள அரசியல் வாழ்க்கைம பற்றி முழுக்க நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் என்று கைபேசியில். குறுஞ்செய்திகள் மூலம் கேட்டுக் கொண்டார்கள். அக்கறை கொண்டவர்களுக்கு நன்றி…


அப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை? இருந்தாலும்  நான் எழுதிக் கொண்டிருக்கும் “எனது சுவடுகள்”எனும் 2-3 தொகுதியான புத்தகத்தில் இவையெல்லாம் வர இருக்கிறது! அவை ஒரு முழுமையான நூல்கள  வரும்போது அதில் இன்னும் பல மறைக்கப்பட்ட அரசியல் விஷயங்கள் வாக்குறுதிகள் ஏமாற்றுகள் துரோகங்கள் சந்தர்ப்பவாதங்கள்  என்பதாக அவைப் பல வேறுபட்ட உண்மைகளோடு வெளிவரும் என்று சொல்லிக் கொள்கிறேன். 


நான் தமிழ்நாட்டின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பலருடன் 52 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். இதுவரை எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டு எவரிடம் நான் கையேந்தி நிற்கவில்லை. பலரின் அரசியல் பயணத்தில் முக்கியமான சந்தர்ப்பங்களில் உதவி இருக்கிறேன். என் உதவிக்குப் பிறகு அவர்கள் வேறு திசையை நோக்கி போகும் போது அவர்களை விட்டு விலகி இருக்கிறேன். முழுக்க தவறானவர்கள் அவர்கள் பாதையை அவர்கள் போக்கில் தேர்வு செய்யும் போதெல்லாம் நான் என் பணிக்கு திரும்பி விடுவது வழக்கம். குறுக்கு வழிகளில் அடிமையாக கூழைக் கும்பிடு போட்டு தங்கள் சுயநலத்திற்காக கால்களை பிடித்துப் பதவியை வாங்கும் பலரை போல் என்னால் இருக்க முடியாது.


மனதில் பட்டதை நேராகத் தைரியமாக அவர் யாராக இருந்தாலும் அவர் செய்தது சரி தவறு என்று சொல்லி விடுவது எனது பாணி. அதுவே எனது பலமும் பலவீனமும் . அரசியல் சரிதன்மை அற்றவர்கள் எனக்கு எந்த யோசனையும் சொல்லத் தகுதியற்றவர்கள். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக  ஏங்குபவர்கள் மத்தியில் நான் மௌனமாக விலகி வந்துள்ளேன்.

எதைப் பற்றியும் கவலை இல்லை தொடர்ந்து இவ்வாறு தான் இயங்குவேன். என்னை அறிந்தவர்களுக்கு அது மிக நன்றாகவே தெரியும்.


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

9-6-2024.

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...