Monday, July 29, 2024

கடந்த காலத்தில் கேரள அரசு

கடந்த காலத்தில் கேரள அரசு 
#சிலந்திஆற்றின் குறுக்கே சுமார் 2.5 கோடி மதிப்பில் தடுப்பணை ஒன்றைக் கட்டி வருகிறது. இப்போது அது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இடுக்கி பேக்கேஜ் என்ற பெயரில் சுமார் எட்டு இடங்களில் கேரளா அரசு குடிநீருக்காக தடுப்பணை கட்ட இருக்கிறார்கள். அதில் முதல் அணையை சிலந்தி ஆற்றின் குறுக்கே பெருகுடா என்ற இடத்தில் கட்டத் தொடங்கி விட்டார்கள். #அமாரவதிக்கு சிக்கல்….

இது குறித்து நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்து எழுதியுள்ளேன் என்றாலும் கூட இப்படியாக கேரளா அரசு தடுப்பணை கட்டுவது மூலமாக தமிழ்நாட்டுக்கு கிடைக்கக்கூடிய நீர் வரத்துகள் தடைபடுவது குறித்து இங்கு யாருக்கும் எந்தவித அக்கறையும் இல்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது. ஏறக்குறைய தமிழ்நாட்டிற்கும் கேரளாவுக்கு இடையே 15 மேல் நதி நீர்கள் சார்ந்த வழக்குகளும் தாவாக்களும்
 இருக்கிறது. 

இதுகுறித்த 90 அடி உயரம் உள்ள அமராவதி அணை நான்கு டிஎம்சி கொள்ளளவு கொண்டது 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 60000 ஏக்கர் நிலங்கள் பாசனம் செய்யப்படுகின்றன மேலும் இந்த அணையின் தண்ணீரை நம்பி 110 கூட்டு குடிநீர் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
குறிப்பாக சிலந்தி என்கிற ஆறு தேனாற்றில் கலந்து அமராவதி அணைக்கு வந்து சேருகிறது. ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கேரளா அரசு தேனாற்றில்  அணை கட்ட முயன்ற,இப்போது மீண்டும் தமிழக அரசுக்கு அல்லது மத்திய சற்றுப்ப்புறச் சூழல் துறைக்கு எந்த தகவலும் அளிக்காமல் கேரள அரசு  சிலந்தி ஆற்றின் மீது தடுப்பணை கட்ட முற்பட்டிருப்பது  முழுக்க முழுக்க சட்டவிரோதமாகும் . என்று கூறுகிறார். 

கேரளாவின் வட்ட வாடா ஊராட்சி சார்பில் தான் இங்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. குடிநீரைக்காரணம் காட்டி அவர்கள் பல நியாயங்கள் சொல்லுகிறார்கள் எனினும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு சரியக வலியுறுத்த வேண்டும்.

 எது எப்படியானாலும் விவசாய சங்கங்களின் சார்பிலும் கேரளா எல்லையோரங்களில் விரைவில் மறியல் போராட்டங்கள் நடக்கலாம் என்றே தெரிகிறது.. ஏனெனில் இது நீண்ட காலம் இருந்து வரும் வாழ்வாதார பிரச்சனை.
@trending

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-7-2024.


 

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...