Monday, July 29, 2024

சிலர் கொளுத்திப் போடும் தகவல் மட்டும் எப்படி காட்டுத்தீ போல பரவுகிறது என்பது தான் தெரியவில்லை.


 சிலர் கொளுத்திப் போடும் தகவல் மட்டும் எப்படி காட்டுத்தீ போல பரவுகிறது என்பது தான் தெரியவில்லை.

தஞ்சை நாயக்கர் அடப்பமாக மட்டும் இருந்து தஞ்சாவூரை பெற்றார் என்ற தகவல் அவர்களின் குடும்ப வரலாறுக்கு நேர் எதிரானது.

அடப்பம் என்பது வெற்றிலை மடித்து கொடுக்கும் சடங்கு பதவி. அது அரசருக்கு நெருங்கியவர் என காட்டும் பதவி. இராஜாங்க காரியங்களில் அரசருக்கு உதவியாக இருப்போர் எனப்பட்டனர். அதனைக் கடந்து அவர்களுக்கு இராணுவ பின்புலம் இருந்தால் மட்டுமே நாயக்கராக நியமிக்க முடியும். இல்லையென்றால் தூசி படையினர் கூட மதிக்க மாட்டார்கள்.

தஞ்சையின் முதல் நாயக்கர் தொண்டைமண்டலத்தின் நெடுங்குன்றத்தை பூர்வீகமாகக் கொண்ட, தளவாயாக (தளபதி) இராணுவத்தில் இருந்தவர் என்பது கல்வெட்டு வாயிலாக பெறும் தகவல். அவரின் உறவினர்களும் வாசல் என்ற அரச அலுவல் பணியை மேற்கொண்டவர்கள். முன்னோர்களும் தளபதிகளாக இருந்தவர்கள்.

தொண்டை மண்டலத்தை சேர்ந்தவர்கள் சோழமண்டலத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...