Monday, July 29, 2024

#செங்கோலை பற்றி சொன்னதுக்கு திருமலை நாயக்கரை ஏன்டா போட்டு போலக்குறீங்க?

#செங்கோலை பற்றி சொன்னதுக்கு திருமலை நாயக்கரை ஏன்டா போட்டு போலக்குறீங்க?

இங்க அடிச்சா தான் அங்க வலிக்கும். 

திருமலை நாயக்கரே செங்கோலை வச்சு தாண்டா மதுரையை ஆண்டாறு.. சொன்னது அவரையும் சேர்த்து தாண்டா.. இன்னும் சொல்லப் போனால் செங்கோலை வைத்து மங்கம்மாள் என்ற பெண் அரசியே ஆண்டுள்ளார்கள். (படம் பின்னூட்டத்தில்)

சோழர்காலத்தில் மட்டுமல்ல எகிப்திய காலம் முதல், ஆங்கிலேய காலம் வரை செங்கோல் உலகம் முழுக்க இருக்கு. அது மன்னராட்சியின் அடையாளம். மக்களாட்சியில் மன்னராட்சியின் அடையாளம் எதற்கு என்றே அவரது சர்ச்சைக்குரிய கேள்வி. 

சொன்னவரின் பின்புலத்தை வைத்துக்கொண்டு இன்னும் பழைய சினிமா பட வில்லன் கணக்கா, ஹீரோவை அடிச்சா ஹீரோயினுக்கு வலிக்கும்  என்ற மாதிரியே பிளான் பண்ணா எப்படி.?

இன்றைக்கும் பிரிட்டன் போன்ற பல ஜனநாயக நாடுகளில் செங்கோல் தான் கோலோச்சுகிறது.இங்கிலாந்தில் பாராளுமன்றத்தில் நிறைவேறும் மசோதாக்கள் சட்டமாக அரசர் கையைழுத்திட மாட்டார் மாறாக ஓவல் வடிவ மேசையின் ஒரு புறம் clerk of the queen or king இருப்பார் எதிர் முனையில் clerk of the parliament இருப்பார்.clerk of the parliament மசோதா பெயரைப் படிப்பார் மறுபுறம் clerk of the queen லத்தீன் வாசகம் ஒன்றைக் கூறி செங்கோலை ஆட்டுவார்.இப்போது மசோதா சட்டமாகி விட்டது இப்படித்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஆதாரம் Freedom at  midnight என்ற ஆங்கில நூல்

(படம்) மதுரை மீட்சியிடம் இருந்து செங்கோலைப் பெறும் மதுரை நாயக்க அரசி மங்கம்மாள்...
@narendramodi
 
@nsitharaman


 

No comments:

Post a Comment

இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...