Monday, July 29, 2024

#இன்றைக்குள்ளஅமைச்சர்களைப்_பார்க்கின்றேன்.




#இன்றைக்குள்ளஅமைச்சர்களைப்_பார்க்கின்றேன்.
—————————————
என் நினைவின் காலத்தில் காமராஜர் பக்தவச்சலம் காலத்திலும் பிறகு காங்கிரஸில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். அண்ணா காலத்து அமைச்சர்களையும் கலைஞர் காலத்து மற்றும் எம்ஜிஆர் காலத்து அமைச்சர்களையும் பார்த்திருக்கிறேன்.
எளிமையானவர்கள்……

அவர்களுக்கு மாறாக இன்றைய அமைச்சர்களின் எளிமை அற்ற, உடல்மொழியும், அவர்கள் ஆடை அணியும் விதமும் அவர்கள் பேசுகிற பேச்சுகளும் , பாவனைகள் ஒரு அமைச்சருக்குரிய கண்ணியத்தைக் காட்டவில்லை. மாறாக அதன் கண்ணியத்தை கெடுப்பதாகத்தான் இருக்கிறது. குறிப்பாக 1991 க்கு பிறகு அமைச்சர்களாக வந்தவர்களுக்கு இடையே தான்  இந்த மாண்புமிகு என்ற  அடைமொழிக்கு ஏற்ற எந்த மரியாதையும் அற்றுப்போன நடத்தைகள் மிகுந்திருக்கின்றன. அவர்களின் இன்றைய தோற்றம்  செயல்கள் பேச்சுக்கள் யாவும் அநாகரிகமாக இருப்பதைப் பார்க்க நேர்கிறது. 

என்ன செய்ய
“கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழிகளின் ஆட்டம்”.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-7-2024
#தமிழகரசியல் 


 

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...