Monday, July 29, 2024

செங்கோல்- மதுரை சு. வெங்கடேசன்

 #செங்கோல்- மதுரை சு. வெங்கடேசன்


மதுரை சு வெங்கடேசன் எம்.பி யார்? அவர் எப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்?


மதுரை கீழடி அகழ்வாய்விற்கு மூல காரணமாக அமைந்தவர் வழக்கறிஞர் கனிமொழி மதி 

@kanimozhimathi


அவர்கள் கொடுத்த வழக்கு தான் இந்த அகழாய்வைத் தொடர்ந்து நடத்துவதற்கான அரசாணைக்கு  வித்திட்டது. அதில் இந்த 

சு வெங்கடேசன் குறுக்கே புகுந்து ஏதோ தன்னால் தான் கீழடி ஆய்வே கண்டுபிடிக்கப்பட்டது என்பது மாதிரி பரப்புரை செய்து கொண்டார்.


கீழடி ஆய்வில் முக்கியப் பங்காற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து கடந்த பத்து வருடத்திற்குள் எம்பி ஆகி இப்போது மறுபடியும் நாடாளுமன்ற எம்பி ஆகி குறுக்கு வழியான வாய்ப்புகளின் வழியே இடம் பெற்றிருக்கிறார்.


இந்த சு வெங்கடேசன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் தானே! இவர் ஏன் முல்லைப் பெரியாறு அணைக்குத் தமிழகம் சார்பாக குரல் கொடுக்க மாட்டேன் என்கிறார்.

அதேபோல தேனி மாவட்டத்திற்கான கண்ணகி கோட்டத்திற்கு ஏன் குரல் கொடுக்க மாட்டேன் என்கிறார்?

எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான் நான்தான் என்று சொல்லிக்கொண்டு  “ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனம்” என்று திரிகிறார்.


இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காரர்கள் சித்தாந்தம் பேசுவார்கள் கோட்பாடு பேசுவார்கள். கூட்டணி வைப்பார்கள் நடைமுறை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க மாட்டார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்ற பெயரில் கலை இலக்கிய பேரவை நடத்தி வரும் இந்த அமைப்பில் இருந்தவர் தானே 

சு வெங்கடேசன். இவரை விட எத்தனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த முன்னோடிகள் இருக்கிறார்கள்? அவர்களெல்லாம் ஏன் இந்த நாடாளுமன்ற பதவிக்கு முன்மொழியப்படவில்லை. அதுதான் போகட்டும் இதே தமு எ க ச சங்கத்தில் அதை தொடர்ந்து நடத்தி வந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் தானே! அவர் இப்போது எங்கு இருக்கிறார்! அவருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை?


இதற்கு மேலாக சு வெங்கடேசன் எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்பது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை ஓமந்தூரார் தென்னார்க்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது கூடத் தெரியாமல் தனது பேச்சினூடே ஒருமுறை ஓமந்தூரார் ஓசூர் பக்கத்தைச் சேர்ந்தவர் என்று உளறி கொட்டி இருக்கிறார் இவர் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு போய் என்ன செய்யப் போகிறார்.


கலை இலக்கிய மன்றங்களில் இருந்த 

சு வெங்கடேசன் கட்சி மன்றத்திற்குள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்குள் எப்போது வந்தார்? அவருடைய சீனியாரிட்டி என்ன?


எந்தக் கட்சிக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குப் போனாலும் அங்கே ஒரு கட்சிக்காரரும் உருப்படியாக இல்லை. எதோ எம்பிக்கள் ரெக்ரியேஷன் கிளப்பிற்குப் போய்விட்டு வருவது போல டெல்லிக்குப் போய்விட்டுத் திரும்புகிறார்கள். 


இந்த சு வெங்கடேசன் செங்கோலை பற்றி பேசுகிறார்! திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டு இருப்பது செங்கோல் தானே!


குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு. - திருக்குறள்.


வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி.


மழையை நம்பி இந்த உலகத்தின் ஜீவராசிகள் உள்ளதுபோல், மன்னவனின் செங்கோலை நம்பி குடிமக்கள் வாழ்கிறார்கள் என்கிறார் வள்ளுவர்! 


செங்கோலை பற்றி பாராளுமன்றத்தில் இழிவாக பேசியவர் கையில் வைத்துள்ளது என்னவோ?!  


'அல்லல்உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டுஏங்கி மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக் களையாத துன்பம்இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இதுஎன்கொல்?'


 மேலும், 'வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது' என வளைந்த செங்கோலை நிமிர்த்த தன் உயிரையே விட்ட பாண்டியன் ஆண்ட மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பதுதான் காலக்கொடுமை!


செங்கோல் வைத்திருந்த அரசர்கள் பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாய் வைத்திருந்தனர் - என்பது அவர் விசனம். 


தமிழ் மரபில் செங்கோல் அறத்தின் அடையாளமே ஒழிய அந்தப்புரத்தின் அடையாளமோ அடிமைகளை ஆதிக்கம் செய்யும் அடையாளமோ இல்லை. மதுரை சேர்ந்த அவருக்கு, மதுரையிலேயே  சிலப்பதிகாரம் நடந்ததா கூறும் நிகழ்வுகள் ல்லாம் மறந்து போய் இருக்கும் போல ... இந்த ஜனநாயக ஆட்சியிலேயே மாநகர மேயர்களுக்கு அது வழங்கப்படுவது அவருக்கு தெரிலையோ - இல்ல மேயர்கள் எல்லாம் அந்தப்புரங்களில் அடிமைகள் வச்சி இருக்காங்கன்னு சொல்றாரா ? நீதிபதிகளிடம் இன்றும் குறியீடு போல உள்ளது.


செங்கோல் - சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்த பெருமைமிக்க அடையாளம்...  செங்கோல் பற்றி பெருமைப்படுத்தி திருக்குறள் மற்றும் பல்வேறு சங்க இலக்கியங்களில் பாடல்கள் உள்ளன...


செங்கோல் என்பது தமிழர் அடையாளம் தானே! நேரு கூட தன் முதல் பிரதமர் பதவியை ஏற்கும் பொழுது செங்கோலை திருவாடுதுறை ஆதீன 1/2


7:06 PM · Jul 4, 2024


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...