Monday, July 29, 2024

சீலனும் நாங்களும்!

 சீலனும் நாங்களும்!

1981 ஜூன் மாதம் ஈழ தேசியத் தலைவர்  பிராபாகரன் அவர்களோடு புறப்பட்டு தமிழகம் வந்த போது.

ஆகஸ்ட் கடைசி வாரம் மாத்தையா

படகு மூலம் தமிழ்நாட்டுக்கு

வந்தார். பிரபாகரனை

சந்தித்து விட்டு அவர் அப்போது

டெலோவும் ஒன்றாகச் சேர்ந்து செயற்பட்டுக்

கொண்டிருந்த காலம்.அவர்கள்

புதுவையில் வீடொன்றை

வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்கள்.

  பின்புசிறீசபாரத்தினத்தின்

நடவடிக்கைகள் காரணமாக பிரபாகரன்

விட்டுப்

பிரிந்த பின் புதுவையில்

காமராஜ் நகரில் இரண்டு மூன்று

வீடுகளில் சீலன் தற்செயலாக

மார்புப் பகுதியில் குண்டடி பட்டு

தமிழ்நாட்டுக்கு அழைத்து

வரப்பட்டு சிகிச்சையின் பின்

குணமடைந்திருந்தார்.

சீலன்,புலேந்தி,லாலாலா ரஞ்சன் ஆகியோரை

நாட்டுக்கு அனுப்ப வேண்டும்.அவர்கள் அங்கு

செல்வது யாருக்கும் தெரிந்து

விடக்கூடாது என்பதற்காக

அவர்களை ராமேஸ்வரம் அழைத்துச் சென்று மீன்பிடிப்

படகில் அனுப்பி வைக்கும்

தொடர்வண்டி மூலம் அழைத்துச்

சென்று ராமேஸ்வரத்தில்

மீன்பிடிப் படகு ஒன்றில் சென்றார்.

அப்போது தகவல் தொடர்பு

வசதிகள் எதுவும்

இல்லாத காலம்.அவர்கள் சென்று இரு வாரங்களின் பின்

அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று

எனக்கு வந்து சேர்ந்தது.அதில்

அந்தப் பயணத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து

பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள்.

  அவர்களை படகில் ஏற்றிச்

சென்ற மீனவர்கள் அவர்களை

ஆழ்கடலில் இறக்கிவிட்டுத்

திரும்பியதாகவும்,தாங்கள்

நீந்திச் சென்று கரையேறி

போது சிங்களவர்களிடம்

மாட்டிக் கொண்டதாகவும்,பின்பு

தாங்கள் கெஞ்சி மன்றாடி

அவர்களிடம் இருந்து விடுபட்டுச்

சென்றதாகவும் எழுதி

இருந்தார்கள்.

இறுதியாக சீலன் சாவகச்சேரிப்

போலிஸ் நிலையத் தாக்குதலில்

காயப்பட்டு தமிழகம் அழைத்து

வரப்பட்டு மூவருக்கும் காயங்கள்

ஆறிய நிலையில் சீலனுக்கு

மட்டும் காலில் காயம் என்பதனால் வெளிக்காயம் ஆறிய பின் கால்

எலும்புகள்,நரம்புகள் பாதிக்கப்பட்டு

இருந்தமையால் பிஸியோதெரபி

சிகிச்சை சில காலங்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டி இருந்தது. பிரபாகரன்

சீலனையும்,பிஸியோதெரபி மருத்துவம் படித்த வல்வையைச்

சேர்ந்த இளம் பெண் மூலம் சிகிச்சை நடந்தது.


1983 இன் முற் பகுதியில் நாட்டில்

பெரும் பொறுப்பினைக் கவனிப்பதற்

காக பிரபாகரன் அவனை நாட்டிற்கு

அனுப்பி வைத்தார்.

அவனை நாங்கள் கடைசியாகப்

பார்க்கின்றோம் என்பது அவன் எங்களைப் பிரிந்து சென்றபோது

அவனுக்கோ எங்களுக்கோ தெரியாது.

இன்னும் அவன் எங்கள்

நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்

தின்றான்.

(இந்தப் புகைப்படம் அவன் எங்களோடு வாழ்ந்த காலப்பகுதியில்

புதுவை பெரியகடைப் பகுதியில்

அமைந்திருந்த நேரு ஸ்டூடியோவில்

எங்களோடு வந்து பிடித்த படம்)

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...