#JusticeForAjithkumar
ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன்னால் 2011 பிப்ரவரி முதல் மார்ச் வரை துணைமுதல்வராக இருந்தவர் ஸ்டாலின் தான்.. அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்தார். துணை முதல்வர் அலுவலகத்தில் இருந்து செல்வாக்கு மிக்க ஒருவர் நிகிதாவிடம் (இன்றைய திருப்புவனம் கொலைக்கு காரணமாக இருப்பவர்) தொடர்பு கொண்டு அவர் மூலம் வேலைவாய்ப்புகளை ஒழுங்கு செய்வதற்காக லட்சக்கணக்கில் பணம் லஞ்சமாகக்கைமாற்றப்பட்டது என்ற தகவல் சொல்லப்படுகிறது.
அதேபோல் இன்று அஜித்குமார் கொலை வழக்கிலும் அதாவது அன்று துணை முதலமைச்சர் ஆக இருந்த ஸ்டாலின்இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் நிலையில் அதே மேலிடத்திலிருந்து தான் இந்த நிகிதாவின் செல்வாக்கிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அவரது பொய்க்குற்றச்சாட்டு மற்றும் தூண்டுதலின் பேரில் அந்தக் கோயில் காவலரான அஜித் குமாரை மிக மோசமாக அடித்து மிளகாய்த் தூள்களை உடம்பெல்லாம் தூவி காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து ரண காயப்படுத்திச் சாகடித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த ரெண்டு விடயங்களும் கால வேறுபாட்டில் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் தான் நடந்திருக்கிறது. இதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது இதற்கு காரணமான அதிகாரிகள் யாராக இருந்தாலும் அதாவது 2011 பதவியில் இருந்தவர்கள் இன்றைய ஆட்சியிலும் செல்வாக்கு உள்ளவர்களாக நீடித்து இருந்தால் அவர்களையும் ஒருவேளை அவர்கள் யார் என்று முதல்வருக்கு தெரியாமல் இருந்தாலும் இதில் முதல்ருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் கூட அவர்களைக் கண்டுபிடித்துச் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்து அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒருபோதும்
அவர்களுக்காக வக்காலத்து வாங்க கூடாது.
No comments:
Post a Comment