Thursday, July 17, 2025

(வைகோவே தேடிக்கொண்டது)


 #வைகோவின்மதிமுக1998க்குபின்

(வைகோவே தேடிக்கொண்டது)
——————————————————
தமிழ்நாட்டில் 1980 90களில் எல்லா அரசியல்வாதிகளும் அறிந்தது தான். நான் திமுகவில் இல்லாமல் இருந்த போதும் அப்போது காங்கிரஸில் இருந்த நிலையில் கூட வை கோவை ஆதரித்தவன் தான். அவர் ராஜ்யசபா எம்பி ஆகி டெல்லி சென்றபோது . அவருக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் ஏ எஸ் பொன்னம்மாள் பாரமலை போன்றவர்களிடம் சக்தி மிக்க MLA’s single preference voteகளை ஆதரவு பெற்றுதான் அவர் ராஜ்ய சபா மூலம் நாடாளுமன்றம் சென்றார் என்பதும் உண்மை. நான் திமுகவில் சேர்வேன் வைகோவுடன் பணியாற்றுவேன் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. அதேபோல் பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு வந்து என்னுடன் தங்கி இருந்தபோது வைகோவுக்கு அவரை நான் தான் அறிமுகப்படுத்தினேன் என்பதை யாரும் மறுக்க இயலாது. உண்மையைச் சொன்னால் 70 80களில் வைகோ என்னிடம் நெருக்கமாகவும் பாசமாகவும் இருந்தார்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1989இல் நான் நிற்பதற்கு கலைஞர் ஒரு பக்கம் ஆதரவு தெரிவித்தாலும் வைகோ அதில் முக்கிய பங்காற்றினார் என்பதற்காக அவருக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இன்றைக்கும் அவர் எனக்குத் தந்த மதிப்பை நான் மறுக்கவில்லை. அதெல்லாம் எப்படி நிகழ்ந்தது. அக்காலங்களில் வைகோ விற்கு எந்த ஒரு பிரச்சினை இருந்தாலும் கிட்டத்தட்ட நானும் பொன் முத்துராமலிங்கம் இருவரும் தான் அவருக்கு அதை தீர்த்து கொடுப்பதில் இணக்கமாக இருந்தோம். அதை அவரும் மறந்திருக்க மாட்டார்.
கோசி மணி தஞ்சாவூரில் மாவட்டச் செயலாளர் ஆன பின் அங்கு கழகத்திற்காக ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருந்த எல் கணேசன் ஓரம் கட்டப்பட்டு திமுகவில் வெறுமனே அமைதியானார் . அதேபோல் செஞ்சி ராம சந்திரன் பொன்முடியால் ஓரம் கட்டப்பட்டு திமுகவில் அமைதியாகிவிட்டார். கண்ணப்பனுக்கும் சி.டி. தண்டபாணிக்கும் பிரச்சனை. டி ஆர் பாலு தேர்தல் கண்காணிப்பாளராக கோவை செல்லும்போது கண்ணப்பனுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டது. அந்த வகையில் அவரும் நாளடைவில் ஒதுங்கி இருந்தார். இதற்கிடையில் மதுரை பொன் முத்துராமலிங்கமும் நானும் தான் வைகோ அவர்களுக்கான அடிப்படைப் பணிகளைச் செய்து கொண்டிருந்தோம். குறிப்பாக பத்திரிக்கைத் துறையில் நாளிதழ் வார இதழ்கள் போன்றவற்றிற்கான தகவல்களை அதாவது வைகோவுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு எழுத்துப்பூர்வமான பணியில் நான் தான் அப்போது இருந்தேன். அந்த சமயங்களில் எல்லாம் கலைஞர் என் மீது கடுமையான கோபத்தில் இருந்தார். என்னைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றெல்லாம் கலைஞர் சொல்லிக் கொண்டிருந்தார். அதேபோல் பொன் முத்துராமலிங்கமும் வைகோவை அழைத்து தனியாக கூட்டங்கள் நடத்தி திமுகவில் அதிகம் கலைஞர் உட்பட எதிரிகளை சம்பாதித்ததும் உண்டு. அப்போது திமுக பொதுக்குழுவில் மெரினா செல்வத்தை சிலரிள உத்தரவின் பேரில் குண்டர்களை வைத்து கடுமையாகத் தாக்கிய போதெல்லாம் அவரை காப்பாற்றிக் கொண்டு வந்த வேலையையும் வைகோவிற்காக நான் செய்தேன். பின் வைகோ நீக்கம்.
அதற்குப் பிறகு ஆற்றலார் வைகோ பக்கம் திமுகவின இளைஞர்கள் கூடினார்கள். அன்றைய வைகோவின் நேர்மை, இலட்சியம், வேகம் யாரிடமும் இல்லை. ஒரு ஆபூருவ மனிதராக அன்று இருந்தார்.அதுவேகம் எடுத்தது தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியல் இயக்கம் உருவாகி வந்ததை அது கட்டியம் கூறியது. வைகோ துடிப்பானவர் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் கடுமையாக விவாதம் செய்து அதற்கான நியாயங்களை கோரிப் போராடுகிறார் என்கிற அளவில் அவர் தமிழகத்தில் 1990 -96 வரை புகழில் உச்சம் பெற்றது. அன்றளவில் அவருக்கான மக்கள் செல்வாக்கு அபரிமிதமாகக் கூடிக் கொண்டு வந்தது. அதே நேரத்தில் கலைஞர் தனது மகன் ஸ்டாலினை தனது வாரிசாக அரசியலில் உருவாக்குகிறார் என்கிற நிலை மறைமுகமாக மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதன் அடிப்படையிலேயே வைகோவிற்கு மக்கள் மத்தியில் ஒரு சனநாயகப்பூர்வமான ஆதரவு இருந்தது. அதன் அடிப்படையில் வைகோ ஒரு மாபெரும் தலைவராக தமிழ்நாட்டில் உருவாவார் என்கிற எதிர்பார்ப்புக் கூடிக் கொண்டிருந்தது. அந்த அடிப்படையை நம்பிக்கையாகக் கொண்டு 96 வரையில் அவருக்கு பின்னால் நின்று நாங்கள் கடுமையாக அவருக்குப் பாடுபட்டோம். 96 க்குப் பிறகு ஏனோ என் சொல் அவரிடம் எடுபடவில்லை. அதை விட்டு 1998 நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு தரவிருந்த வட சென்னை நாடாளுமன்ற தொகுதியை (அதிமுகவில் ஜெயக்குமாருக்கு ஒதுக்கி இருந்து அதை மாற்றி ஜெயலலிதா எனக்கும் மட்டுமே வழங்கியது) ஆனால் வைகோ தராமல் ,கவனமாக இருந்தார். காரணம் கேட்கும் போது இரண்டு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஒரு கட்சியில் இடம் ஒதுக்குவது நியாயமாகாது என்று சொன்னார். அதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் என்னைப் போட்டியிட விடாதவாறு செய்தார். அதாவது அவர் ஒரு நாயுடு நான் ஒரு நாயுடு. வேடிக்கையை பாருங்கள்! இங்கு சாதியா பிரச்சனை? ஆனால் இரண்டு வன்னியர்கள், இரண்டு கவுன்டர்கள் மதிமுக வில் அதே தேர்தலில் போட்டியிட்டனர்.போராடிய வர்களுக்கும் கழகத்திற்காக உழைத்த தகுதி உள்ளவர்களுக்கும் கிடைக்க வேண்டியதை சாதியைக் காட்டி ஒதுக்கியதில் வைகோ மிகுந்த புத்திசாலியாக இருந்தார். எனக்கு பின் நாட்களில் கலைஞரிடமும் ஸ்டாலினிடமும் இதேதான் நடந்தது.
வெறுமனே கிரேக்க அரிஸ்டாட்டில் போல மக்கள் முன்புதன்னை காட்டிக் கொள்வார். இப்படி அவர் தகுதி பார்த்து என்னைப் புறக்கணித்து அவரது அதிகாரத்தின் கீழ் தகுதியற்ற உள்ளவர்களை அரவணைத்துக் கொண்டார். அது அவரது தன் அகங்காரமாக இருந்ததை நான் அப்போது பொருட்படுத்தவில்லை. இதற்குப் பிறகும் மீண்டும் நான்கு வருடத்திற்கு மேல் அவருடன் நான் இருந்தேன். மீண்டும் 2001 இல் சட்டமன்றத் தேர்தல்! திமுகவுடன் கூட்டணி என்ற முறையில் மதிமுகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டது. தன்னைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் ஒரு 18 பேராவது எம்எல்ஏ வாக தேர்வு ஆவார்கள் என்ற உற்சாகமானநிலையில் இருக்கும்போதே வைகோ கலைஞரிடம் ஏதோ தன் நலனுக்கு முறைத்துக் கொண்டு போய் விட்டார். இன்னும்எத்தனை வருடம் நம்முடன் இருந்து கஷ்டப்படுவார்கள் இந்தச் சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வைகோ விற்கு அப்போது இல்லை என்பது தான் உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது.
நடந்தது என்னவோ அவரது சுய லாபங்களுக்குள்ளும் அவரது மகன் திமுகவை போல தனக்குமான வாரிசு அரசியலுக்குள் இடம்பெற்று தனக்கு ஆதரவாக வர வேண்டும் அதற்காக நம்முடன் உழைத்த பலரை கைவிட்டாலும் பரவாயில்லை என்கிற அவரது போக்கு அப்போதுதே வெளிப்படத் தொடங்கியது. 1998முதல் வைகோ தன் அன்பு பதல்வனின் ஆலோசனையை கேட்க ஆரம்பித்து விட்டர்.இவர்தான் வாரிசு அரசியலை எதிர்த்தார் என்பதை நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இப்படி ஆகிவிட்டாரே என்ற நிலையில் அதற்கு பிறகும் நான் நான்கு வருடம் அவருடன் தான் 2001 வரை மதிமுவில் இருந்தேன். ஒரு பண்பட்ட நிலையில் அவரை ஆதரித்த என்னையும் பொன் முத்துராமலிங்கத்தையும் நிராகரித்துவிட்டு அவருக்கு விசுவாசம் ஆன புதியவர்கள பக்கத்தில் வைத்துக் காப்பாற்ற தொடங்கி விட்டார். அதில் ஒருவர் இன்று துரோகி. இப்படியானவர்களை வைகோ வளர்த்தார். அவர்களை கொண்டு எங்களை அன்று அவமானம் செய்தார்.
அதன் விளைவு தான் இன்றைக்கு அவர் அனுபவிக்கின்ற துன்பங்கள் மற்றும் விளைவுகளுக்குக் காரணம் ஆகி இருக்கின்றன. என்ன இருந்தாலும் மதிமுகவின் நிர்மாணத் தலைவர்களில் நானும் ஒருவன்.
இத்தனை அரசியல் விளைவுகளும் அதன் தொடர்ச்சிகளும் இன்றைக்கு இரண்டாயிரத்தில் அல்லது 90களில் பிறந்த இளைஞர்களுக்குத் தெரியாது. வைகோவால் தான் நான் வளர்ந்தேன் வைகோ தான் என்னை அடையாளம் காட்டினார் என்றெல்லாம் அவர்கள் சொல்வது எனக்கு ஒருபோதும் பொருந்தாது. நான் ஏற்கனவே காமராஜரால் வளர்க்கப்பட்டு பிரபாகரனோடு இருந்து எம்ஜிஆர் கலைஞர் ஜெயலலிதா வரை அவர்கள் எப்படியானவர்கள் என்பதை அறிந்து பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் வளர்ந்து வந்தவன். ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி நாராயணசாமி நாயுடு போன்றவர்களுடெல்லாம் மக்கள் வழி அரசியலில் ஈடுபட்டு அதன் வரலாற்று நிலைப்பாடுகளுடன் பொது வழக்குகளையும் சந்தித்து வளர்ந்தவன். அதற்கு பிறகான ஒரு காலத்தில்தான் வைகோ போன்ற ஒரு நபரைச் சந்தித்தேன்.
இதையெல்லாம் அறியாமல் இன்றைக்கு பேசுபவர்கள் நான் ஏதோ வைகோ வழியாகத்தான் வந்தேன் என்று அறியாமல் பேசுகிறார்கள். அந்த வகையில் சொன்னால் உண்மையில் நெடுமாறன்தான் தமிழ் தேசியம் ஈழம் என்கிற வகையில் என்னை வளர்த்தெடுத்தார். அவருக்கு எனக்கும் ஆதி தொடர்பு ஏதுமில்லை அவர் மதுரை நான் கோவில்பட்டி. இருந்தாலும் நாங்கள் உடன்பட்டோம். பொன் முத்துராமலிங்கமும் நானும் வைகோவிற்கு செய்த அடிப்படை உதவிகள் அதனால் விளைந்த நம்பிக்கைத் துரோகங்கள் புறக்கணிக்கப்படுதல் எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
அரசியல் ஒரு திறந்த புத்தகம். அதில் ஈடுபட எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் மதிமுக கட்சிக்கு நான் செய்த பணிகள் அனைத்தும் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் என்ன செய்ய இப்படியாக அதன் இறுதி விளைவுகளை கண்முன்பு துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வை கோபால்சாமி என்கிற பெயரை 8 மணி நேரத்தில் வைகோ என்று மாற்றியவன்.
தமிழகமெங்கும் வைகோ பேசுகிறார் என்கிற போஸ்டர் அக்காலத்தில் மிகப் பிரபலம். ஒரு புனித தலைவருக்கு இணையாக அவரை நாங்கள் நம்பினோம் அன்றைக்கு நடந்து கொண்டிருந்தது திமுக ஆட்சி. இப்படி எல்லாம் நாங்கள் செய்தது யாருக்கு தெரியும். இப்படிப் பல விஷயங்கள் சொல்ல முடியும். இப்படி எல்லாம் எங்களைப் போல் அவருடன் இருந்தவர்களை வைகோ மிக எளிதாக எடை போடுகிறார். காலகாலமாக வாரிசுகளோடு இயங்கும் ஒரு அரசியலுக்கு மாற்றாக ஒரு இயக்கத்தைக் கட்டி அதை வழிநடத்துவது என்பது எவ்வளவு சிரமங்கள் மிக்கது.
அதற்குத் தன்னுடன் யாரெல்லாம் துணை நின்றார்கள் என்பதும் கூட அவருக்கு தெரியும். ஆனால் தான் உருவாக்கிய இயக்கத்தை யானைத் தானே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல அதைச் சிதைத்து தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் கைவிட்டு இன்றைக்கு அவர் நிற்கும் அவல நிலை எத்தனை பரிதாபத்திற்கு உரியது. ஒரு கடை வைப்பவர் அதைத் தானே சிதைத்து அதன் வாடிக்கையாளர்களையும் அவமதித்து கெடுத்துக் கொண்டதற்கு யார் என்ன செய்ய முடியும். அவருக்கு ஆதரவாக நின்று நம்பிக்கையுடன் களம் கண்டவர்கள் கூட அவரின் இன்றைய இந்த அவல நிலைக்கு என்ன செய்ய முடியும். மதிமுக எவ்வளவு பெரிய கட்சியாக வளர்ந்து இருக்க வேண்டியது. அவருக்கு ஆதரவாக கடற்கரையில்மாபெரும் கூட்டம் திரண்ட பிறகு தினகரன் செய்தி பத்திரிகை மற்றும் பல செய்திகளைபார்த்த பிறகு அதாவது திமுகவின் அதிருப்தியாளர்கள் பலரும் ஒரு மாற்று அரசியலுக்கு என அவரை நம்பிய காலத்தில் தயங்கியபடியே தான் அவர் இந்த தனிக் கட்சிக்கு வந்து தலைமையேற்றார். அத்தகைய மாற்று மக்கள் நம்பிக்கைகளுக்கு துரோகம் செய்தவர் வைகோ தானே. இவர் ஒரு அரசியல் பிழை…
அன்றி நாங்கள் அல்ல! எங்களைத் துரோகி என்றோ கட்சிக்கு விசுவாசமற்றவர்கள் என்றோ விமர்சிப்பவர்கள் அல்லது இன்றைய சந்தர்ப்பவாத அரசியலில் லிப்ட் ஏறிச் சென்றவர்கள் காலாகாலத்தில் பிழைக்க தெரிந்த வினையவாதிகள் யாரும் வந்து கேலிக் கிண்டலுடன் பூட்டை ஆட்ட வேண்டாம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம்!
அவரவர்கள் வேலையைப் பார்த்தால் போதும்.
( இன்னும் சொல்ல பல அறிய நிகழ்வுகள் உள்ளது)

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்