Friday, November 27, 2020



 

 #வெறுமனே_வாழ், #உன்னைச்_சுற்றி #நடக்கும்_போலி_முட்டாள்தனங்களையும்_கடந்து_சென்று_வாழ்......

————————————————







எந்த அளவிற்கு வாழ்க்கையில் அஞ்சுகிறாயோ, அதன் உடன் இணைத்துக்கொள்கிறாயோ அந்த அளவிற்கு துன்பம் உன்னை நெருங்கும். நீ முந்தினால் அது உன்னை முந்தும். இதுவே வாழ்க்கை நமக்கு விடுக்கும் வினா.

,துயரம், வேதனை, என்ன நடக்குமோ எனும் கவலை, இன்ப வேட்கை, பயம், சலிப்பின் உச்சம், துரோக வலி, தனிமையின் வேதனை ஆகிய இவையெல்லாமே நீ வாழும் வாழ்க்கையாக உள்ளது, இதுதான் உனது வாழும் கலாச்சாரமாக இருக்கிறது. இதை தாண்டி இதற்கு அப்பால் உன்னால் போக முடியவில்லை.

இச்சூழலில் நீயும் இன்ப நுகர்ச்சியையே, அனுபவிப்பதையே உனது வாழ்க்கையின் முக்கியமான விஷயமாக கருதுகிறாய். வெறுமனே வாழ், உன்னைச் சுற்றி நடக்கும் முட்டாள்தனங்களையும் கயர்வர்களையும் எளிதாக புறக்கனித்து கடந்து சென்று வாழ்

 #மினர்வா_டுட்டோரியல் -

#Minerva_Tutorial_College, #Chennai.
________________________________________










நேற்று எழும்பூர் ஹால்ஸ் ரோடு வழியாக பயணிக்கும் பொழுது, அந்தப் பகுதியிலிருந்த மினர்வா டுட்டோரியலும் அதன் நிறுவனர் மறைந்த ஏ.என்.பரசுராமன் அவர்களும் டாக்டர்.சந்தோசம் அவர்களும் , மற்றும் உலகப் பல்கலைக்கழக மையம் (World University Centre, Chennai) பளிச்சென்று நினைவுக்கு வந்தது.

மினர்வா டுட்டோரியல் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நிறுவனமாக
1950-60-70களின் துவக்கம் வரை திகழ்ந்தது. அதனை நிறுவிய ஏ.என்.பரசுராமன் நல்ல கல்வியாளர். எஸ்.எஸ்.எல்.சி, பி.யு.சி, பி.ஏ, பி.எஸ்சி , ஆகிய தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் திரும்பவும் தேர்வுகளில் வெற்றிபெற அப்போது டுட்டோரியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது உண்டு.

இந்தவகையில் சென்னையில் மினர்வா டுட்டோரியல் கல்லூரி முதன்மையானதாக செயல்பட்டு வந்தது. திருச்சியில், திருச்சி டுட்டோரியல் கல்லூரி ( TTC), மதுரையில், சங்கரநாராயணன் அவர்கள் நடத்திய ஸ்டூடண்ட்ஸ் டுட்டோரியல் கல்லூரி (STC), மற்றும் ஜெகதீசன் அவர்கள் நடத்திய விக்டரி டுட்டோரியல் கல்லூரி VTC, நெல்லையில், நா வானமாமலை அவர்கள் நடத்திய
வானமாமலை டுட்டோரியல் கல்லூரி, நாகர்கோவிலில், டயற்றஸ் அவர்கள் நடத்திய டயற்றஸ் டுட்டோரியல் கல்லூரி என பல டுட்டோரியல் கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தன.

மினர்வா டுட்டோரியல் கல்லூரியின் சேர்ந்துபடிப்பதை சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வதும் உண்டு. மினர்வா கைடுகள் அப்போது பிரபலம். இது பாடப் புத்தகங்களுக்கு நிகரான மொழிநடையும், நல்ல மதிப்பெண்கள் பெறக்கூடிய வகையில் அனைத்துப் பாடங்களுக்கும் கைடுகள் என்ற துணைநூல்கள் பரசுராமன் வெளியிட்டார். ஆங்கில மினர்வா கைடுகள் மேலும் பிரபலமானது.

இதன் அட்டையில் சற்று மஞ்சள், வெளிர் பச்சை அட்டையில் பூ மொட்டு இலச்சினை கொண்டு வெளியிட்டார். அந்த துணை நூல் பாடக்குறிப்புகள் விரிவாகவும் விளக்கமாகவும் கொண்டிருக்கும். மினர்வா டுட்டோரியலின் இலச்சினையில் கிரீடம் சூட்டிய ரோமர்கள் வணங்கும் மினர்வா தேவதை முழுத்தோற்றத்தில் நின்றபடி இருப்பதாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஏ.என்.பரசுராமன் வெளியீடுகளின் காப்புரிமையில் பிரச்சனை ஏற்பட்டபொழுது 1958ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று, ஒரு நீண்ட தீர்ப்பினைப் பெற்றார். அந்தத் தீர்ப்பும் இந்தப் பதிவோடு இணைக்கப்பட்டுள்ளது.

(தீர்ப்பு : http://indiankanoon.org/doc/1685540/ )

மினர்வா டுட்டோரியல் ஒருகாலத்தில் சென்னையின் அடையாளமாக எழும்பூர் வட்டாரத்தில் திகழ்ந்தது.

இதன் அருகாமையிலே டாக்டர்.சந்தோசம் அவர்களுடைய மருத்துவமனையும் வட்டவடிவில் இருந்தது. டாக்டர் சந்தோசம் அவர்கள் 1967ல் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற்காலத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் சரண்சிங் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தார். ”தமிழ்நாட்டின் லோக் தள்” கட்சியின் தலைவராகவும் செயல்பட்டார்.

பிரபல மருத்துவர். சாதாரண ஏழைகளும் கையில் காசு இல்லாமல் அவரிடம் வைத்தியத்திற்குச் செல்லலாம். ஆனால், காலப்போக்கில் தமிழக அரசியல் வரலாற்றில் இவரை மறந்துவிடுவோமோ என்ற குறையும் உள்ளது.

அதன் அருகாமையில் உலகப் பல்கலைக் கழக சேவை மையத்தில், கல்லூரி நாட்களில் தங்கியதும் உண்டு. மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டங்கள் அந்த விடுதியின் அருமையான உணவு, அருகாமையிலே யுனெஸ்கோ மையம் இவையெல்லாம் அப்போது அங்கு கண்ட காட்சிகள். இப்போது அந்த மையம் கலையிழந்து உள்ளது.

சேத்துப்பட்டில் அமைந்துள்ள இந்த மையத்தில் இப்போது பல பிரச்சனைகள். வழக்குகள் வரைக்கும் சென்றுவிட்டது. இப்படி சிக்கலான நிலைமையில் அன்றைக்கு அமைதியாக செயல்பட்ட மையம் இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டதே என்று வேதனை அளிக்கின்றது.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-06-2020.

#MInarvaTutorial


 

 

#COVID19 could cost the global economy up to $8.5 trillion over next 2 years, pushing 34 million people into extreme poverty-#UN

Every effort must be taken to stabilize economies & support the most vulnerable. #GlobalGoals https://bit.ly/3bMLdla






 

“#வாழ்க்கையின்_அர்த்தத்தை_பற்றி #ஏன்_கவலைப்படுகிறாய்?,







வெறுமனே வாழ், உன்னைச் சுற்றி நடக்கும் முட்டாள்தனங்களை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஒன்றி வாழ்.” என்று.

துயரம், வேதனை, என்ன நடக்குமோ எனும் கவலை, இன்ப வேட்கை, பயம், சலிப்பின் உச்சம், தனிமையின் வேதனை ஆகிய இவையெல்லாமே நீ வாழும் வாழ்க்கையாக உள்ளது, இதுதான் உனது கலாச்சாரமாகவும், வாழ்க்கை முறையாக இருக்கிறது. இதை தாண்டி உன்னால் போக முடியவில்லை.

அதனால்தான் நீயும் இன்பம்,மகிழ்ச்சி, வாழ்க்கை சுக நுகர்ச்சியையே, அனுபவிப்பதையே உனது வாழ்க்கையின் முக்கியமான விடயதாக கருதுகிறாய்.

Pic-Udaipur



 #இந்தியா #ஐ_நா_பாதுகாப்பு #கவுன்சிலின்_5_தற்காலிக_உறுப்பு #நாடுகளுக்கான_தேர்தலில்_போட்டி

————————————————





ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்தத் தேர்தலில் புதிய வாக்குப்பதிவு முறை கடைப்பிடிக்கப்படவுள்ளது. ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியா மட்டுமே போட்டியிடுவதால், இந்தியாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொதுச் சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தலை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு கவுன்சிலுக்கான உறுப்பினர்கள் தேர்தலையும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்கள் ஐ.நா.பொதுச் சபை அரங்கில் நடைபெறும். இதில் 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ரகசியமாக வாக்களிப்பர்கள்.
கரோனா தொற்று பரவலால் இந்த முறை வாக்குப்பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 10 நாள்கள் முன்னதாக ஐ.நா.பொதுச் சபை தலைவர் டிஜானி முகமது பன்டே அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்புவார். அந்தக் கடிதத்தில் தேர்தல் நடைபெறும் தேதி, இடம், காலியிடங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும்.

தேர்தல் நடைபெறும் நாளில், சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அவரவருக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் சென்று வாக்களிக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட இடங்களில் வைக்கப்படும் வாக்குப்பெட்டிகளில் வாக்குச்சீட்டுகளை செலுத்தினால் மட்டுமே, அந்த வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படும். வாக்களிப்பதற்கான நேரம் முடிந்த பின்னர் வாக்களித்தால், அந்த வாக்குச்சீட்டுகள் செல்லாது.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை எனில், மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அதற்கான தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்படும்.

வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்ட பின் முடிவுகளை ஐ.நா.பொதுச் சபை தலைவர கடிதம் மூலம் உறுப்பு நாடுகளுக்குத் தெரிவிப்பார்.

இந்தியாவின் வெற்றி உறுதி

ஆசிய-பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியா மட்டுமே தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் போட்டியிடுகிறது. இதனால் இந்தியாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 5 தற்காலிக உறுப்பு நாடுகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தேர்வு செய்யும். அவ்வாறு தோ்வு செய்யப்படும் நாடுகளின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். இப்படி இந்தியா பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

Soon India will be occupying a seat in the members United Nations Security Council. The UN Security Council is going to elect its new members for Non permanent seat for year 2021-22 on 17th June. India's candidature for UNSC non-permanent seat for two-year term was endorsed by Asia Pacific group last year in June. The 55 members Asia Pacific group also includes China and Pakistan.

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
31.05.2020

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...