Friday, November 27, 2020

 #இந்தியா #ஐ_நா_பாதுகாப்பு #கவுன்சிலின்_5_தற்காலிக_உறுப்பு #நாடுகளுக்கான_தேர்தலில்_போட்டி

————————————————





ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்தத் தேர்தலில் புதிய வாக்குப்பதிவு முறை கடைப்பிடிக்கப்படவுள்ளது. ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியா மட்டுமே போட்டியிடுவதால், இந்தியாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொதுச் சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தலை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு கவுன்சிலுக்கான உறுப்பினர்கள் தேர்தலையும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்கள் ஐ.நா.பொதுச் சபை அரங்கில் நடைபெறும். இதில் 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ரகசியமாக வாக்களிப்பர்கள்.
கரோனா தொற்று பரவலால் இந்த முறை வாக்குப்பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 10 நாள்கள் முன்னதாக ஐ.நா.பொதுச் சபை தலைவர் டிஜானி முகமது பன்டே அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்புவார். அந்தக் கடிதத்தில் தேர்தல் நடைபெறும் தேதி, இடம், காலியிடங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும்.

தேர்தல் நடைபெறும் நாளில், சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அவரவருக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் சென்று வாக்களிக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட இடங்களில் வைக்கப்படும் வாக்குப்பெட்டிகளில் வாக்குச்சீட்டுகளை செலுத்தினால் மட்டுமே, அந்த வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படும். வாக்களிப்பதற்கான நேரம் முடிந்த பின்னர் வாக்களித்தால், அந்த வாக்குச்சீட்டுகள் செல்லாது.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை எனில், மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அதற்கான தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்படும்.

வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்ட பின் முடிவுகளை ஐ.நா.பொதுச் சபை தலைவர கடிதம் மூலம் உறுப்பு நாடுகளுக்குத் தெரிவிப்பார்.

இந்தியாவின் வெற்றி உறுதி

ஆசிய-பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியா மட்டுமே தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் போட்டியிடுகிறது. இதனால் இந்தியாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 5 தற்காலிக உறுப்பு நாடுகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தேர்வு செய்யும். அவ்வாறு தோ்வு செய்யப்படும் நாடுகளின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். இப்படி இந்தியா பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

Soon India will be occupying a seat in the members United Nations Security Council. The UN Security Council is going to elect its new members for Non permanent seat for year 2021-22 on 17th June. India's candidature for UNSC non-permanent seat for two-year term was endorsed by Asia Pacific group last year in June. The 55 members Asia Pacific group also includes China and Pakistan.

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
31.05.2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...