Wednesday, March 12, 2025

திமுகவில்….. ’*நிழலும் கனியும் தரும் என்று நினைத்த மரத்தில் வவ்வால்கள் வந்து அடைந்து விட்டபின் பேச என்ன இருக்கிறது*!’’

‘’*நிழலும் கனியும் தரும் என்று நினைத்த மரத்தில் வவ்வால்கள் வந்து அடைந்து விட்டபின் பேச என்ன இருக்கிறது*!’’

*திமுகவில் அவ்வளவு காலம் நீங்கள் பணியாற்றிவிட்டு இப்பொழுது திமுகவை குறை சொல்வதில் நியாயம்  தானா*? *என்று நண்பர்கள் சிலர் அக்கறையாகக் கேட்கிறார்கள்*! இன்று வந்து என்னிடம் கேள்விகள் கேட்பவர்கள் யாராவது ஒருவர் நேர்மையாக என்னை திமுக தலைமை நீக்கியதது தவறுதான் என்று பேசியதும் கேட்டதும் உண்டா? நான் திமுகவில்  பணியாற்றி பெற்ற ஆதாயம் ஒன்றும் இல்லை. உண்மையில் இழந்தது தான் அதிகம்! அதே திமுகவில் நியாயமாக இருந்து  கால நேரம் பாராமல் உழைத்துக் கொடுத்தும்  என்னை அவர்கள் நீக்கியபோது இதே நியாயத்தை அவர்களிடம் இப்போது பேசுபவர்கள் கேட்டிருக்க வேண்டும் தானே! 
கடந்த காலத்தில் திமுகவிலிருந்து என்னை நீக்கிய போது அது  தவறு என்று யாரும் இதுவரை ஆதரவாகப் பேசியதில்லை! முக்கியமாகச் சொன்னால் நான் கலைஞருக்கு மிகவும் வேண்டப்பட்டவனாக இருந்தேன்! 

ஆனால் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டும் என்னை ஏனோ பிடிக்கவில்லை! ஈழத் தமிழர் விஷயத்தில் திமுகவின் மீது இருந்த களங்கத்தை நீக்கும் விதமாக அதற்காக நான் முழுமூச்சோடு செய்த டெசோ பணிகள் எதுவுமே அவர்கள் ஞாபகத்தில் இல்லை. அதேபோல் கலைஞர் நள்ளிரவில் கைதின்போது அந்த சி டியைக் கொண்டு போய் சன் டிவியில் காட்டியதும் அதேபோல்  டெசோ மாநாட்டில் எனது பணிகள இதே ஸ்டாலின் ஐநா சபைக்கு நான் தயாரித்த ஆவணங்களுடன் சென்றதும், மேலும் லண்டன் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் நான் அழைத்துப் போய் பேச வைத்ததற்கும் அடியேன் காரணமாக இருந்தவன் என்பதையும் கூட யாரும் பேசுவதில்லை! அதேபோல் கனிமொழி அவர்கள் திருமண முறிவு விவாகரத்திலும் தலையிட்டு யாருக்கும் தெரியாமல் அதை சட்டப்படி முடித்துக் கொடுத்திருக்கிறேன் என்பதையும் கூட மறந்து விட்டார்கள் போலும். 

அதேபோல ஜெயலலிதாவின் ஊழல் விவகாரத்திற்கான ஆதாரங்களை முரசொலி மாறனும் கலைஞரும் கேட்டபோது  அதைத் திரட்டிக் கொடுத்ததையும் கூடவா மறப்பார்கள்! இப்படி பல பணிகள் .இவ்வளவு உதவி செய்தும் என்னை திமுகவிலிருந்து நீக்கம் செய்த போது எந்த வகையில் நியாயம் என்று யாரும் கேட்டுக்கூட  இல்லை! எல்லோரும் கட்சிப் என்று வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். கலைஞர்  களப்பணி செய்யும் அறிவாளிகளை மதிக்கத் தெரிந்தவர்!

இப்போது அதிமுகவின் அல்லது ஜெயலலிதாவின் முகமாகவே திமுகவை ஸ்டாலின் மாற்றிக் கொண்டு விட்டார். செந்தில் பாலாஜி சேகர் பாபு செல்வகணபதி எ வ வேலு  இந்த எ வ வேலு ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் புத்தகம் வெளியிடும் அளவிற்கு தயாராக இருந்தார். அதேபோல் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஜெயலலிதாவின் காலிலே விழுந்து கிடந்தார். இப்படி ஆட்களை எல்லாம் உள்ளே இழுத்துக் கொண்டு வந்து ஏறக்குறைய திமுகவை அதிமுகவின் முகமாகவே மாற்றிவிட்டார்கள். அதையெல்லாம் ரசிக்கிறவர்கள் இவ்வளவு தூரம் திமுகவில் உழைத்திருக்கிறேன் என்பதை மறந்து விட்டு அவ்வளவு ஈசியாக என்னை நீக்கம் செய்ததற்கு நியாயம் கேட்டு யார் வாயைத் திறந்தார்கள் என கேட்கிறேன்! 

இப்போது வந்து நீ சங்கி ஆகிவிட்டாய்! விஜயின் த வெ கே வை ஆதரிக்கிறாய்! என்றெல்லாம் கேட்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது! இன்றைக்கு வந்தவனெல்லாம் திமுகவில் அமர்ந்து கொண்டு இதை எல்லாம் பேச என்ன யோக்கியதை இருக்கிறது!

காங்கிரசை அல்லது மல்லிகார்ஜுனன் கார்கேயை விமர்சித்தேன் என்பதற்காகக்கூட இருக்கட்டும் அப்படி என்றால் மிக மோசமாகக் காங்கிரஸை விமர்சித்த கண்ணப்பன்  போன்றவர்கள எப்படி உங்கள் ஆட்சியில் அமைச்சர
பதவியில் நீடிக்கிறார்?

நான் இருந்து உழைத்துக் கொடுத்தது போல் இன்றுள்ளவர்கள் யார் திமுகவிற்கு உண்மையாக  உழைக்கிறார்கள்!? இன்று  வந்து சேர்ந்துள்ள அமைச்சர்கள் எல்லாம் திமுகவிற்கு தியாகம் செய்தவர்களா!?

வேறென்ன நான் சுயமரியாதைக்காரன். என் மனதில் பட்டதை சொல்லுவேன் சில விஷயங்களை சரி தவறு என்றே எடுத்துரைப்பேன்! இதுதான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை! அவனவன் சத்தமில்லாமல் சம்பாதிக்கிறான் என்பதற்கு நான் என்ன செய்வது? பதவிக்கும் பொருளுக்கும் என்ன செய்தும் கால் பிடிக்கும் தந்திரம் எனக்கு தெரியாது! கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் அதற்கு உண்மையாக இருப்பது என்பதைத் தவிர நான் வேறு ஒன்றும் எதிர்பார்க்கவில்லை! அதற்குரிய மரியாதை கிடைக்கும் என்று தான் நான் பொறுத்து இருந்தேன்! தன்மானத்தோடு கட்சி பணி ஆற்றுபவர்களை எல்லாம் நீக்கிவிட்டு தன் விசுவாசிகளை மட்டும்  காப்பாற்றுவதில் என்ன தந்திரம் இருக்கிறது!

விமான நிலையத்திலோ  அங்கே எங்கே சந்திப்பவர்கள் அல்லது தொலைபேசியில் பேசுகிற திமுகவினர் என்னிடம் நேரடியாக உங்களை நீக்கியது தவறு என்று வருத்தப்பட்டு சொல்லுகிறீர்களே! நீங்கள் தலைமை இடத்தில் அல்லவா இதைச் சொல்லவும் கேட்கவும் வேண்டும்!

“இதனை இவன் செய்வான் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்பதெல்லாம் வெறும் சந்தர்ப்பவாதத்திற்கு தான் போலும்!

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
12-3-2025.

Because you don’t understand doesn’t mean that the explanation doesn’t exist.

 Because you don’t understand doesn’t mean that the explanation doesn’t exist.Try to note the difference between knowing, understanding and accepting.You may know lot of things but you will understand only some of those and tend to accept only a few.Many times you might compromise in the name of acceptance and say i have sacrificed. Acceptance should be whole hearted it should not come by force, then you will live peacefully and will never complain, instead you will feel happy and soulfully.

1-1-2025

Monday, March 10, 2025

கவிராஜபண்டிதர் ஜெகவீரபாண்டியனார் - பஞ்சலாங்குறிச்சி வீர சரிதம்.

''#கவிராஜபண்டிதர்''  ஜெகவீரபாண்டியனார்  பிறந்த நாள் 
 (10 மார்ச் 1886 - 17 ஜூன் 1967)
———————————————————
முதல்வர்கள் ராஜாஜி, ஓமந்தூர், குமரசாமி ராஜா, காமராஜர், அண்ணா மற்றும் கவிஞர் கண்ணதாசன், பழ. நெடுமாறன் என பல தலைவர்கள் இவரை கொண்டியவர்கள். இவர் பிறந்த கிராமம் கோவில்பட்டி அருகே ஒட்டநத்தம். இந்த கிராமத்தில் கவிஞர் கண்ணதாசனின் பருத்தி அறைக்கும் மில் இருந்தது. மதுரை பல்கலைக்கழக முதல் செனட் உறுப்பினர். மதுரையில மேல மாசி வீதியில் குடியிருந்தார். எங்கள் தந்தை கே. வி. சீனிவாச நாயுடுவுக்கு நண்பர். என் கிராமத்திற்கு 
மதுரை எம்ஆர்ஜி சுவாமிளோடு சில நேரங்களில் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். இவரின் பஞ்சலாங்குறிச்சி வீர சரிதம் என்ற அதிக பக்கங்கள் கொண்ட நூலை பல ஆண்டுகளுக்கு பின் 2018 இல் நான் மறுபதிப்பி்ல்;  தன் வாழ்வில் இறுதியாக தலைவர் கலைஞர்



அவர்கள் வழங்கிய அணிந்துரையோடு கொண்டு வந்தேன்

'' பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயப் படையினர் சுற்றி வளைத்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் வழியிலே வந்த, அறுபது வயதைத் தாண்டிய அஞ்சா நெஞ்சம் படைத்த ஒருவர், தமிழ் மண்ணைக் காப்பாற்ற தன் இன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பேராண்மையுடன் போர் புரிந்தார். ஆங்கிலேய படைவீரன் ஒருவன் அவர் மீது குண்டு ஒன்றைப் போட்டான். அதனால் குற்றுயிராய், அருகில் இருந்த வயல் வரப்பில் வீழ்ந்தார் அந்த முதியவர். அப்போது குதிரை மீது வந்துகொண்டிருந்த மற்றொரு ஆங்கிலேயப் படைவீரன், அம்முதியவரது கையில் வீரவாள் இருப்பதைக் கண்டு அதைத் தன்னிடம் தருமாறு அதட்டினான். அதற்கு அவர், "என்னால் எழுந்திருக்க முடியாது; நீயே குனிந்து வாங்கிக்கொள்," என்றார். வாளை வாங்க அவன் குனிந்தபோது, தம் கையிலிருந்த வாளை ஓங்கி படைவீரனின் தலையையும் அவன் ஏறிவந்த குதிரையையும் கொன்று வீழ்த்தினார் அம்முதியவர். சில வினாடியிலேயே அவர் உயிரும் பிரிந்தது. இது பொய்யோ பழங்கதையோ அல்ல; உண்மை நிகழ்ச்சி''.
 
"போர்க்குறிக் காயமே புகழின் காயம்," என்று எண்ணிய அத்தமிழ் வீரனின், மறக்குடியில் தோன்றிய மாபெரும் புலவர் ஏறே "கவிராச பண்டிதர்" எனப் போற்றப்பட்ட ஜெகவீரபாண்டியனார். 

தென்னகத்தில், கோயில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட ஊர் மணியாச்சி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு பெற்ற சிறப்பு இந்த ஊருக்கு உண்டு. இத்தகைய ஊருக்கு அருகில் உள்ளது ஒட்டநத்தம். இதை "சின்னப் பாஞ்சாலங்குறிச்சி" என்றும் கூறுவர். இவ்வூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்த குடும்பத்தில் தோன்றிய பெருமாள்சாமி என்பவருக்கும் ஆவுடையம்மைக்கும் 10.3.1886ல் பிறந்தவரே கவிராசபண்டிதர் ஜெகவீரபாண்டியனார்.
 
இவரது மூன்றாம் வயதில் தந்தை இறந்து போனார். எனினும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். தொடர்ந்து படிக்க முடியாத சூழல்; எனினும்,
ஆத்திசூடி,
கொன்றை வேந்தன்,
மூதுரை,
திவாகரம்
முதலானவற்றைப் படித்து நல்ல புலமை பெற்றார். இடையே மற்போர், விற்போர் முதலானவற்றையும் கற்றுக்கொண்டார். 

ஒருநாள் ஊர்க் குளக்கரை வழி வரும்போது, ஓலைச்சுவடி ஒன்றைக் கண்டெடுத்தார்; அதில் பின்வரும் பாடலடிகள் இருந்தன:
"சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
 ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்."
இதனைப் படித்ததும் கல்வியினால்தான் அறிவுடையோராக ஆதல்கூடும் என்ற முடிவுக்கு வந்தார். எனவே மீண்டும் கல்வியில் ஆர்வம் கொண்டு தாயுமானவர் பாடல் முதல் பல்வேறு நூல்களைத் தாமாகவே படித்தார். தமிழின் மீதும் சைவத்தின் மீதும் தணியாக் காதல் உண்டாயிற்று.

அரிமளம் என்ற ஊரிலிருந்து சிவானந்த சுவாமி என்பவர் இவரது ஊருக்கு வந்திருந்தார். ஜெகவீர பாண்டியனாரைக்கண்டு, "எம் ஊரில் ஓர் ஆசிரமம் உள்ளது, அங்கு வரலாமே," என்று கூற, பாண்டியனாரும் தம் அன்னையின் இசைவு பெற்று அரிமளம் சென்றார். ஓராண்டு துறவிபோல் வாழ்ந்தார். வேதாந்த நூல் பலவும் கற்றுத் தெளிந்தார். மகனைப் பிரிந்திருக்க முடியாத அன்னையார் ஊருக்குத் திரும்பி வருமாறு வற்புறுத்த, ஒட்டநத்தம் திரும்பினார். தமிழில் பெரும் புலமை பெறவேண்டும் என எண்ணினார். இலக்கண முத்துக்கவிராயரிடம் தமிழ் கற்றார். தமது 19 ஆம் வயதிலேயே "ஆசிரியர்" என்று அனைவரும் போற்றும் நிலைக்கு உயர்ந்தார்.
 
பாண்டியனார், நாநலம் மிக்கவர். சிறந்த புராணச் சொற்பொழிவாளர் எனும் புகழைப் பெற்றவர்.
கம்பராமாயணம்,
பெரியபுராணம்
ஆகியவற்றை மொழிவதில் வித்தகராக விளங்கினார். அக்காலத்தில் தமிழகத்துப் பட்டிதொட்டியெல்லாம் இவர் புகழ் பரவியது எனில் மிகையன்று.

பாண்டியனார் தம் 27 ஆம் வயதில் வெள்ளைத்தாய் என்னும் மங்கையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். தென்பாண்டி நாட்டில் பல ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றிவந்தார். ஆனாலும் இத்தகைய பேச்சுகள் காற்றோடு காற்றாகப் பயனின்றிப்போகும் என்று உணர்ந்தவர், நூல் எழுதுவதே தக்க பணி என்று எண்ணினார்.

மதுரை மேலமாசி வீதியில் தங்கி, தாம் வசித்த இல்லத்திற்குத் "திருவள்ளுவர் நிலையம்" என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு "வாசுகி அச்சகம்" என்றும் பெயரிட்டார். எவரையும் வேலைக்கு அமர்த்தாமல் அச்சுக் கோர்ப்பது முதலான பணிகளைத் தாமே செய்தார். பாண்டியனார் கவி புனைவதில் வல்லவர். இவரது உரைநடையும் கவிதையின் சாயலாகவே இருக்கும். 1920 ஆம் ஆண்டு கோவையை அடுத்த பேரூரில் கவிதைப் போட்டி ஒன்று நடந்தது.

"பஞ்சாங்கம் பார்க்கப்படும்" எனும் ஈற்றடி கொடுத்து மூன்று மணித்துளிகளில் பாடலை நிறைவு செய்யவேண்டும் என்பது விதி. பாண்டியனார் அதில் கலந்துகொண்டு குறிப்பட்ட நேரத்திற்குள் பாடிய பாடல்,

"வான்மதியும் கான்மானும் வன்முயலும் பாதலத்தோர்
 கோன்குலமும் தீயுமொன்றில் கூடுமோ - ஏன்கூடா
 நஞ்சாங் கமரருய்ய நல்லமுதாக் கொண்டபரம்
 பஞ்சாங்கம் பார்க்கப் படும்."

"வானில் உலாவும் சந்திரன், காட்டில் வாழும் மான், பூதலத்து வாழும் பாம்பு, தன்னையடுத்த பொருளைச் சுட்டெரிக்கும் நெருப்பு ஆகிய இவ்வைந்தும் ஓரிடத்தில் ஒன்றாய்க் கூடுமோ? கூடும். அமரர் உய்ய நஞ்சினை அமுதமாக உண்டு அருளிய சிவபெருமானின் தலை, கால், கை, நெற்றி, கழுத்து என்ற ஐந்து அங்கங்களையும் பார்த்தால் அவ்வைந்தும் ஒன்றுகூடி இருப்பது தெரியவரும் என்பது இப்பாடலின் பொருள்."

பாண்டியனார் கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக,
மாசிலா மணிமாலை
அணி அறுபது
தருமதீபிகை
திருக்குறட் குமரேச வெண்பா
வீரபாண்டியம்
இந்தியத் தாய்நிலை
உலக உள்ளங்கள்
கம்பன் கலைநிலை
அகத்திய முனிவர்
கவிகளின் காட்சி
தமிழர் வீரம்
பாஞ்சாலங் குறிச்சி வீரசரித்திரம்.
யாருடைய உதவியையும் நாடாமல், எந்தப் பதிப்பகத்தின் ஆதரவையும் விரும்பாமல், அரும்பெரும் நூல்களை எழுதியதோடன்றித், தம் இல்லத்திலேயே அச்சகத்தை உருவாக்கி, தம்நூலில் ஓரிடத்திலும் அச்சுப்பிழை வாராமல் தாமாகவே அனைத்தையும் பார்த்து நூல்களை வெளிக்கொணர்ந்தார்.

"தமிழுக்கு கதி கம்பரும் திருவள்ளுவரும்" என்று கூறுவதுண்டு. இவ்விரு புலவர்களிடத்தும் பாண்டியனார் அளவற்ற பக்திகொண்டவர். அதனால்தான் திருக்குறள், கம்பராமாயணம் இவ்விரு நூல்களையும் ஆயிரக்கணக்கான பக்கங்களில் வெளிக்கொணர்ந்தார். "திருக்குறளை உரையுடன் மட்டும் வெளியிட்டால் அத்துணையளவு பயனில்லை" என்று உணர்ந்த பாண்டியனார், ஒவ்வொரு குறளுக்கும் அதற்கேற்றவாறு கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குறளோடு மேலும் இரண்டு அடிகள் சேர்த்து முழு வெண்பாவாகப் பாடியதோடு மட்டுமன்றி அதற்கான முழு விளக்கத்தையும் தந்துள்ளார். ஒவ்வொரு பாட்டிலும் "குமரேசா" எனும் விளி அமைந்திருக்கும். அதனால் இதற்குத் "திருக்குறட் குமரேச வெண்பா" என்று பெயர்.

ஆங்கில மொழியையும் தாமாகவே படித்துப் புலமை பெற்றவர். இரண்டு வரிகளில் ஆங்கிலத்தில் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு, தமிழ்த்திரை உலகில் பெரும்புகழ் பெற்றது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அந்தத் திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை எழுதிய (பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இதற்குச் சான்று) கவிராசபண்டிதர் ஜெகவீரபாண்டியனார் பெயர் இடம்பெறவில்லை. தம் பெயரைக் குறிப்பிடாதது அறிந்து பெரிதும் வருந்தினார் பாண்டியனார். உண்மை அறிந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மதுரை வந்தபோது, பாண்டியனாரைக் நேரில் கண்டு உதவிசெய்ய முன்வந்தார். ஆனால், பாண்டியனார் வறுமை நிலையில் இருந்தபோதும் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

17.6.1967 இல் தாம் எழுதிய "உலக உள்ளங்கள்" என்ற நூலின் மறுபதிப்புக்குரிய அச்சுப்பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பலனின்றி இறைவனடி சேர்ந்தார்.

 கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியனாரின் படைப்புகள் 2010-11 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு இதற்கானப் பரிவுத் தொகையாக 6 இலட்சம் இந்திய ரூபாய்களை நல்கியது. இவரது படைப்புகளின் பட்டியல் வருமாறு:

கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்:
01. 
அகத்திய முனிவர்
02. 
அணியறுபது
03. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-1
04. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-2
05. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-3
06. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-4
07. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-5
08. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-6
09. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-7
10. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-8
11. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-10
12. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-11
13. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-12
14. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-13
15. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-14
16. 
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-15
17. 
கல்வி நிலை
18. 
கவிகளின் காட்சி தொகுதி-1
19. 
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-1
20. 
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-2
21. 
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-3
22. 
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-4
23. 
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-5
24. 
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-6
25. 
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-7
26. 
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-1
27. 
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-2
28. 
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-3
29. 
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-4
30. 
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-1
31. 
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-2
32. 
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-3
33. 
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-5
34. 
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-பாகம்-1
35. 
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-பாகம்-2
36. 
வீரகாவியம்

நன்றி: தினமணி தமிழ்மணி

''#கவிராஜபண்டிதர்''  #ஜெகவீரபாண்டியனார்
#பஞ்சலாங்குறிச்சிவீரசரிதம் 

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
10-3-2025


Sunday, March 9, 2025

#*நம்ப முடியாத எனது நாட் குறிப்பிலிருந்து*…. *நான் கடந்து வந்த வாழ்க்கை பயணம் தமிழ் இந்து இணைய ஏட்டில் தொடர்-2*

#*நம்ப முடியாத எனது நாட் குறிப்பிலிருந்து*…. 

*நான் கடந்து வந்த வாழ்க்கை பயணம் தமிழ் இந்து இணைய ஏட்டில் தொடர்-2*

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
9-3-2025. 
••••
நம்ப முடியாத நாட்குறிப்பிலிருந்து... - 2

#தமிழக_மாநிலஎல்லைகள்வரையறை #கோரிக்கைகள்_போராட்டங்கள்

நாட்டின் இரண்டாவது பொதுத் தேர்தல் 1957-ல் நடந்து முடிந்தது.
அப்போதெல்லாம், நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெறுவது வழக்கம். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஜவஹர்லால் நேரு மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.  
குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை குடியரசுத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணனும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வானார்.
சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அரசாங்கம் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் தலைமையில் கேரளத்தில் ஆட்சி அமைத்தது.
தமிழகத்தில் பொதுத் தேர்தல் முடிந்து 13.4.1957-ல் முதல்வராக காமராஜர் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ஏ.ஜே.ஜான் பதவிப்பிரமாணம் செய்துவைக்க, அமைச்சர்கள் பதவியேற்றனர்.
காமராஜர் தலைமையில் அமைந்த அந்த அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக எம்.பக்தவத்சலம், நிதித்துறை அமைச்சராக சி.சுப்பிரமணியம், வருவாய்த்துறை அமைச்சராக எம்.ஏ.மணிக்கவேலு, தொழில்துறை அமைச்சராக ஆர்.வெங்கட்ராமன், பொதுப்பணித்துறை அமைச்சராக பி.கக்கன், மின்சாரத் துறை அமைச்சராக வி.ராமய்யா,  உள்ளாட்சித் துறை அமைச்சராக லூர்தம்மாள் சைமன் ஆகியோரும் பதவி ஏற்றார்கள்.
இன்னொரு தகவலையும் தெரிந்து கொள்வோம்.
முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு ராஜாஜி தலைமையில் 10.4.1952-ல் அமைந்த அமைச்சரவையில், ஏ.பி.செட்டி, சி.சுப்பிரமணியம், கே.வெங்கடசுவாமி நாயுடு, என்.ரெங்கா ரெட்டி, எம்.வி.கிருஷ்ணாராவ், வி.சி.பழனிசாமி கவுண்டர், டாக்டர் யு.கிருஷ்ணா ராவ், டாக்டர் ஆர்.நாகண கவுடா, எஸ்.சங்கரா ரெட்டி, எம்.ஏ. மாணிக்கவேலு, கே.பி.குட்டி கிருஷ்ண நாயர், சண்முக ராஜேஸ்வர சேதுபதி (ராம்நாடு சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்), பட்டாபி ராமாராவ், டாக்டர் சஞ்சீவய்யா (பிற்காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்) ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். எம்.பக்தவத்சலம், கே.ராஜாராம், ஜோதி வெங்கடாச்சலம் போன்றவர்கள் பிற்காலத்தில் பதவியேற்றார்கள்.
இதற்கு முன்பு நாடு சுதந்திரம் பெற்றவுடன் 15.9.1947-ல் அமைந்த முதல் அமைச்சரவையில், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தலைமையில் டாக்டர் பி.சுப்பராயன், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பக்தவத்சலம், பி.கோபால் ரெட்டி, டேனியல் தாமஸ், சீதாராம ரெட்டி, சந்திரமெளலி, அவினாசி லிங்கம் செட்டியார், கே.மாதவ மேனன், காளா வெங்கடராவ், ஏ.பி.செட்டி, வெமுலா குருமய்யா போன்றவர்கள் அங்கம் வகித்தனர்.
இந்த காலத்தில் ஓமந்தூரார் பரிந்துரையில், அவினாசி லிங்கம் செட்டியார் முயற்சியில் பெரியசாமி தூரன் தலைமையில் ‘தமிழ் கலைக்களஞ்சியம் தொகுப்புகள்’ வெளியிட திட்டமிடப்பட்டது.
தலித் மக்களுக்கான ஆலயப்பிரவேசம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் அரசு சின்னம், தமிழ் பயிற்சிமொழி, முதல் சமூக நீதி உத்தரவு, பாரதியின் பாட்டுக்கள் நாட்டுடைமை என்பதெல்லாம் ஓமந்தூரார் தலைமையிலான அமைச்சரவையில் நடந்தவை. எனவே ஓமந்தூராரை ‘சமூக நீதிக்காவலர்’, ‘முதல்வர்களின் முதல்வர்’, ‘விவசாயிகளின் முதல்வர்’, ‘கல்வியின் முதல்வர்’ என்று பாராட்டினர்.
அதன் பின் அமைச்சரவை மாற்றங்கள் 20.1.1948-ல் நடந்தது. அதில் எஸ்.குருபாதம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அதற்கடுத்து, 6.4.1949-ல் முதல்வராக பி.எஸ்.குமாரசாமி ராஜா, மற்றும் அமைச்சர்களாக திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் - பொது சுகாதாரம், எம்.பக்தவத்சலம் - பொதுப் பணிகள், பி.கோபால் ரெட்டி - நிதித்துறை, எச்.சீதாராம ரெட்டி - நில வருவாய், கே.சந்திரமெளலி - உள்ளாட்சி, மாதவ மேனன் - கல்வி, ஏ.பி.செட்டி - விவசாயம், பி.பரமேஸ்வரன் - கிராமப்புற வளர்ச்சி, நீலம் சஞ்சீவரெட்டி - மதுவிலக்குத் துறை (பிற்காலத்தில் இந்திய குடியரசுத் தலைவரானார்), சி.பெருமாள்சாமி ரெட்டி - தொழில்,  தூத்துக்குடி ஜே.எல்.பி.ரோச் விக்டோரியா - உணவுத் துறை என துறைகள் ஒதுக்கப்பட்டு பணியாற்றினர்.
இதற்கிடையே இரண்டு மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்க கமிஷன்கள் அமைக்கப்பட்டன. முதலாவதாக  1948-ல் தார் கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், ஆந்திரப் பிரதிநிதியாக ராமகிருஷ்ண ராஜூ மற்றும் கேரளப் பிரதிநிதியும் இருந்தனர். அடுத்து, 1954-ல் பசல் அலி கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை. கேரளப் பிரதிநிதி கே.கே.பணிக்கர் மட்டும் இடம்பெற்றதனால் நமக்கு சேரவேண்டிய பகுதிகள் எல்லாம் கேரளத்துக்கு சென்று விட்டன. கே.கே.பணிக்கர் மற்றும் மலையாள லாபிகள் பிரதமர் நேரு அலுவலகத்தில் இருந்ததால் தமிழகத்துக்கு பசல் அலி குழுவினால் அநீதிதான் நிகழ்ந்தது.
இதற்கிடையே தனி ஆந்திரம் வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமுலு 65 நாள் சென்னை மயிலாப்பூரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அதைப்போன்றே விருதுநகரில் சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுமாறு கோரி உண்ணாவிரதம்  இருந்து உயிர் நீத்தார்.
1.11.1956-ல் சென்னை ராஜதானியாக வடக்கே இன்றைய ஒரிசா வரையுள்ள ஆந்திரப் பிரதேசம், தென் கர்நாடகம், கேரளத்தில் மலபார், தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் இருந்தன. எல்லை வரையறை குழுவின் பரிந்துரையின் பேரில் திருத்தணி, கன்னியாகுமரி, இன்றைய தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையை நம்மோடு இணைத்து இன்றைய தமிழ்நாடு எல்லைகளாக அமைந்தன. இது முடிந்து 69 ஆண்டுகளாகின்றன.
அந்த சமயத்தில் சென்னை மாநகரம், தமிழகத்தில்தான் சேர வேண்டும் என்று போராடிப் பெற்றோம். ராஜாஜியும் இதற்கு ஆதரவாக இருந்தார். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் நம்மோடு இணைவதற்கு மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி, ரசாக், குஞ்சன் நாடார் போன்ற பலர் பெரும் தியாகம் செய்தார்கள்.
மார்த்தாண்டம் புதுக்கடையில் 11.8.1954-ல் நடந்த துப்பாக்கி சூட்டில் 16  பேர் உயிர் தியாகம் செய்தனர். வட எல்லையை மீட்க, ம.பொ.சி., மங்களகிழார், சட்டமன்ற உறுப்பினராக இருந்த விநாயகம், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பெரும் போராட்டம், தியாகங்களைச் செய்தனர். திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், நெல்லூர், அனந்தபூரில் சில பகுதிகள் நம்மோடு வந்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை.
தமிழகத்தின் எல்லையாக திருத்தணி அமைய ம.பொ.சி.யினுடைய தியாகம் அதிகம். இந்த போராட்டத்தில் ம.பொ.சிக்கு ராஜாஜி ஆதரவாக இருந்தார்.
செங்கோட்டையைச் சேர்ந்த சட்டநாத கரையாளருடைய பெரும் போராட்டத்தின் விளைவாக தென்காசி பக்கத்தில் செங்கோட்டை இணைந்தது.
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழா, 1956-ல் நாகர்கோவிலில் நடந்தபோது, காமராஜர் அதற்குத் தலைமை தாங்கினார். ஆனால், மேடையில் பி.எஸ்.மணிக்கு இடமில்லை. அதைத்தொடர்ந்து, இரண்டு நாள் கழித்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீண்டும் விழா எடுத்தார். அதில் பி.எஸ்.மணி பாராட்டப்பட்டார்.
செங்கோட்டை நம்மோடு இணைந்தபோது, இன்றைக்கு செங்கோட்டையில் நடுநாயகமாக உள்ள பூங்காவில், அமைச்சர் சி.சுப்பிரமணியம் தலைமையில் இணைப்பு விழா நடந்தது. அந்த விழாவில் அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் பேச்சு அருமையாக இருந்தது.
இன்றைய தமிழகத்தின் எல்லைகளுக்காக அன்று நடத்தப்பட்ட போராட்டங்கள், தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகும்.  அப்போராட்டங்கள்  உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றன. அதைப்பற்றி  சற்று விரிவாக பார்ப்போம்...
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்  தமிழக - ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தன. குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அணைமுகம் கிராமம் தமிழகத்தைச் சார்ந்தது. இந்த கிராமத்தில் ரப்பர் தோட்டங்கள் அதிகம். வருவாய்த் துறையின் ஆவணங்களின்படி தமிழக அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ள கிராமம். இந்த கிராமம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டது. இங்குள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச டி.வி.யும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த கிராமத்துக்குஅடுத்துள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த அம்பூரி உள்ளாட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள வீடுகளில் அடையாள பணிகளை மலையாளத்தில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதுபோலவே ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டைக்குப்பம் கிராமத்தில் உள்ள பிமலவாரிப்பாளையம் எல்லையில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஒகேனக்கல் பிரச்சினையை திடீரென கர்நாடகம் எழுப்பியுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த அந்த இடம் தங்களுக்கே சொந்தமென்று தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது. இதனால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் தாமதமாகிறது.
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’ என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்துக் கூறுகிறது.
‘வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று’  புலவர் காக்கைபாடினியாரின் பாடல் கூறுகிறது.
இவைதான் தமிழகத்தின் நான்கு எல்லை என்று பண்டையத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று புரிந்து, தமிழகத்தின் எல்லைகளாக ஆதியில் இருந்தவற்றுள், ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற பகுதிகளை இழந்தோம். இதனால்தான்  பாலாற்றில் கணேசபுரத்தில் தமிழகத்துக்கு நீர் வரத்து வராமல் தடுப்பணைகளும் கட்டப்படுகின்றன. பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்சினைகளை இன்றைக்கும் தீர்க்க முடியாமல் இருக்கின்றன.
வரலாற்றில் ஆதி தமிழ் மண் குறித்த செய்திகள் வருமாறு:
இன்று, திருப்பதி என அழைக்கப்படும் திருமலைதான் வடவேங்கடம் ஆகும். சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையவன் மூலம் திருவேங்கடவர் திருக்கோலத்தை வர்ணிக்கிறார் இளங்கோ அடிகள். வைணவ ஆழ்வார்கள் தமிழில் இயற்றி உள்ள பாசுரங்களில், திருமலைபுரம், வேங்கடவர் தலமும் கூறப்பட்டு உள்ளன. பிள்ளைப் பெருமான் அய்யங்கார் பாடியுள்ள அஷ்டப் பிரபந்தத்தில் உள்ள திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி ஆகிய பிரபந்தங்கள் திருப்பதியைப் பற்றியவையாகும்.
இதுபோல், திருப்பதி கோவிலைப் பற்றித் தெலுங்கில் அதிக அளவில் இலக்கியம் இல்லை. ‘தமிழகத்தின் எல்லை கிருஷ்ணா நதி’ என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது என உ.வே.சா. உரையில் தெரிய வருகிறது.
பெங்களூர், பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து, ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர் தமிழ்நாட்டின் பகுதியாகவே இருந்து வந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. 10-ம் நூற்றாண்டிலேயே பெங்களூர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. கி.பி.997-ஆம் ஆண்டில் ஒசக்கோட்டை போன்ற இம்மாவட்டப் பகுதிகள், சோழ அரசனால் கைப்பற்றப்பட்டன.
பெங்களூர் மாவட்டத்தில் உள்ள மாகடிபட்டணத்தை நிறுவியவர்களே சோழர்கள்தான்! பெங்களுர் மாவட்டத்தில் இருக்கின்ற பழங்கோயில்கள் பெருமளவு பல்லவர்களாலும், சோழர்களாலும்  கட்டப்பட்டவை. பேளூரில் இருக்கின்ற நாகதாதேசுவர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டது. 1537-ஆம் ஆண்டில் பெங்களூர்ப் பட்டணத்தை நிறுவிய கெம்பே கவுடாவின் முன்னோர்கள், காஞ்சியைச் சார்ந்த முரசு ஒக்கலு வேளாளர் குடியினரின் வழியில் வந்தவர்கள் ஆவர்.
குடகுப் பகுதியும் பழந்தமிழர் பகுதியாகும். இவை நம்மை விட்டுச் சென்றதால், காவிரி, தென்பெண்ணையாறு, ஒகேனக்கல் நதி தீரங்களுக்கு தமிழகத்துக்கு தீர்வு கிடைக்காமல் சிக்கலுக்கு ஆட்பட்டுள்ளோம்.
தென்குமரி
சங்க காலத்தில் இருந்து பாண்டிய அரசின் கீழ் நாடு திகழ்ந்தது. திவாகரம் எனும் நூல் பாண்டிய மன்னனை ‘குமரி சேர்ப்பன்’ என்று குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் மதுரைக் காஞ்சியில் அவனைக் குமரியோடு இணைத்துக் கூறுகிறது. பிற்காலச் சோழர்களான முதலாம் இராஜராஜன், வீர இராஜேந்திரன், முதல் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் ஆகியோரின் பெயர்கள் நாஞ்சில் நாட்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழக - கேரளத் தொடர்புகள் குறித்து அடுத்து பார்ப்போம்....

https://www.hindutamil.in/news/opinion/columns/1353622-history-of-tamil-nadu-state-formation-explained-in-k-s-radhakrishnan-series.html?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1i0UDuHnR9RE7RUov_3LXf3ZROqVbfujrkZj8mHK17VFL939z1tPt-Vhs_aem_6rz1C02hC8ZRFPBSTqYJyA

Saturday, March 8, 2025

#*நம்ப முடியாதஎனது நாட்குறிப்பிலிருந்து* *நான் கடந்து வந்த வாழ்க்கை பயணம் தமிழ் இந்து இணைய ஏட்டில் தொடர்-1*

#*நம்ப முடியாதஎனது நாட்குறிப்பிலிருந்து* 

*நான் கடந்து வந்த வாழ்க்கை பயணம் தமிழ் இந்து இணைய ஏட்டில் தொடர்-1*

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-3-2025.

சுவடுகள்
அரசியலாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
1
————————————
திக்கெல்லாம் திகழ் பரப்பும் திருநெல்வேலி மாவட்டம் ஒரு காலத்தில் இன்றைய விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரில் தொடங்கி தெற்கே வள்ளியூர் வரை இருந்தது.
இம் மாவட்டத்தின் தென்பகுதி தாமிரபரணி தீராவாசத்தில் பச்சைப் பசேல் என்று இருக்கும். இன்றைக்கு இம் மாவட்டம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி என மூன்றாகப் பிரிந்து விட்டது.
இந்தியாவின் ஆக்ஸ்போர்டாக திருநெல்வேலியின் பாளையங்கோட்டை திகழ்ந்தது. இதன் வடபகுதியான கோவில்பட்டி, சங்கரன்கோவில், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் - வானம் பார்த்த கரிசல் மண் பகுதி.
கோவில்பட்டி - சங்கரன்கோவில் மார்க்கத்தில் இடையே சின்ன கிராமமான குருஞ்சாக்குளம் கிராமத்தில்தான் நான் பிறந்தேன்.
அரசியல் குடும்பம். எங்களுடைய கிராமத்தில் நான் பிறந்த காலத்திலேயே மின்சார வசதி வந்துவிட்டது. மங்கலான நினைவு - எங்கள் வீட்டில் பெரிய திண்ணை உண்டு. அதில் கோடுகள் போட்ட சமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து அரசியல், உலக நடப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். அன்றைய திருநெல்வேலி மாவட்ட பிரமுகர்கள் மட்டுமின்றி, அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த இன்றைய விருதுநகர் மாவட்ட  காங்கிரஸ் தலைவர்களும் வருவது உண்டு.
அந்த வகையில், சட்டப்பேரவைத் தலைவராக இருந்த செல்லப்பாண்டியன், அமைச்சர்களாக இருந்த கடையநல்லூர் மஜித், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமன், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த தியாகி சோமையாஜுலு, ராஜாஜி குஞ்சிபாதம், சங்கரன்கோவில் ஊர்காவலன், தியாகி சட்டநாத கரையாளர் (இவர்தான் செங்கோட்டையை கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு போராடி பெற்றுத் தந்தவர்) கே. டி. கோசல்ராம் ஆகியோரும் வருவார்கள்.
அதேபோல், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.நாயுடு, வேணுகோபால கிருஷ்ணசாமி நாயுடு, சங்கிலி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு, தியாகி சுப்பா நாயக்கர், கடையநல்லூர் ஏர்.ஆர்.சுப்பையா முதலியார், தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகு, எல்.வி.ராமகிருஷ்ணன், ஈவிகே. சம்பத்,  முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பிற்காலத்தில் முதல்வராகப் பதவியேற்ற பக்தவத்சலம் உள்ளிட்ட பலர் வந்து சென்ற வீடு என்னுடைய வீடு.

மேலும், ஈழத்துத் தலைவர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் மற்றும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரும் வந்துள்ளனர். கோடை விடுமுறை காலங்களில் பிற்காலத்தில் என்னோடு வழக்கறிஞராக இருந்து பின்னாட்களில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகளாகப் பணியாற்றிய நண்பர்களும் என் கிராமத்துக்கு வந்து சென்றதுண்டு.

அப்பொழுதெல்லாம் செய்தித்தாள்களான ஆங்கில ‘இந்து’ பத்திரிகை சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு என்னுடைய வீட்டுக்கு மதியம்தான் வரும். அதேபோல், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து காலையில் வரும். திருநெல்வேலி தச்சநல்லூரில் அச்சடிக்கப்பட்டு தினமலர் வரும்.
மேலும், ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி, ஆங்கில ஏடுகளான இல்லஸ்ட்ரேட் வீக்லி, ரீடர்ஸ் டைஜெஸ்ட், சோவியத் நாடு, அமெரிக்கன் ரிப்போர்ட்டர், ஜெர்மனி வீக்லி... என பல ஏடுகளும், இதழ்களும் தபாலில் வீட்டுக்கு வரும்போது புரட்டிப் பார்ப்பது உண்டு.

இவ்வாறாக அரசியல் ஆர்வமும் அக்கறையும் எனக்கு ஏற்பட்டது. சற்று மங்கலான நினைவு... 1957-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பதை நான் கண்ணால் பார்த்தேன்.

அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஊரைப் பொருத்தவரை இரட்டைக் காளை பூட்டிய பிளவுபடாத காங்கிரஸ், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, அன்றைக்கு பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரபலம். இதில் காங்கிரசுக்கு இரட்டைக்காளை சின்னம், சுதந்திரா கட்சிக்கு நட்சத்திர சி்ன்னம், கம்யூனிஸ்ட் கட்சிக்கு கதிர் அரிவாள் சி்ன்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு அறியப்படாத பிரஜா சோசலிஸ்ட், சம்யுக்த சோசலிஸ்ட் என்ற இரண்டு கட்சிகளின் சின்னமாக ஆலமரம், குடிசை இருக்கும். அப்போதைய காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி மற்றும் உதயசூரியன் சின்னம் அறியாத கிராமமாக எங்கள் ஊர் இருந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 494 இடங்களில் 371 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

எங்கள் ஊர் வானம் பார்த்த பூமி என்பதால், மானாவாரிப் பயிர்களான உளுந்து, எள், துவரை, நிலக்கடலை அதிகமாக விளையும். பம்ப் செட்டுகள், குளத்துப் பாசன ஏரியாக்களில் நெல், வாழை, கரும்பு, போன்றவற்றைப் பயிரிடுவோம். அதோடு மிளகாய், பருத்தியும் உண்டு.

பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் பள்ளியில் என்னைச் சேர்த்தபோது, அங்குள்ள விடுதியில் தங்க விருப்பம் இல்லாது, திரும்பவும் எங்களுடைய கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியிலேயே சேர்ந்து படித்தேன்.அப்போதெல்லாம் நோட்டுப் புத்தகங்கள் பென்சில்கள் கிடையாது. சிலேட்டுகளில் சிலேட்டு குச்சிகளை வைத்து எழுத வேண்டும். தமிழ் பாடப் புத்தகத்தை தனியார் அச்சடித்து தருவார்கள். அந்த பாடப் புத்தகத்தில் திருவிக, திருவள்ளுவர் படங்கள் எல்லாம் இருந்ததாக நினைவு.
ஒரு பென்சில் குச்சி கிடைத்தால்கூட, அதைப் பெரிய அளவில் கொண்டாடும் நிலை இருந்தது. பென்சில் தாளில் எழுதுவது என்பது அந்தக் காலத்தில் பெரிய விஷயமாகத் தெரியும். பெருக்கல் வாய்ப்பாடு என்கின்ற அரிச்சுவடி, ஏ - பி - சி - டி சொல்கின்ற என்ற அட்டை இவையெல்லாம் நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்கு கிடைத்த கல்வி புத்தகங்களும், சாதனங்களும்.

இப்படியாக கிராமத்தில் கல்வி தொடர்ந்தது. நான் படித்தது திருவேங்கடத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி. எங்கள் காலத்துக்கு முன்னால் இந்தப் பள்ளி கழக உயர் நிலைப் பள்ளியாக இருந்தது. எங்கள் காலத்தில் அது அரசு உயர் நிலைப்பள்ளியாக மாறியது.
இன்றைக்கு கிராமத்தில் பள்ளிகள் எப்படி இருக்கின்றன என்றால், பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி, 8-ம் வகுப்பு முடித்தவுடன், உயர் நிலைப்பள்ளி அடுத்து அரசு மேல்நிலைப் பள்ளி என உள்ளன.
கல்லூரியை அன்றைக்கு பிரி-யூனிவர்சிட்டி (பியூசி) என்பார்கள். இப்போது போல பிளஸ் 2 கிடையாது. எங்கள் காலத்தில் 9 மற்றும் 10, எஸ்எஸ்எல்சி அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்தோம். அடுத்து, பியூசி அதாவது புதுமுக வகுப்பு ஒரு ஆண்டு கல்லூரியில் படிக்க வேண்டும். அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மருத்துவம், பொறியியல், விவசாயக் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் செல்லலாம்.
அந்த வகையில் எனக்கு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விருப்பம் இல்லை. எனக்கு பி.ஏ. வரலாறும், பொருளாதாரம், அரசியல் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இளம்பிராயத்தில். எங்கள் கிராமத்தில் சில்லாங்குச்சி, கோலி, தெள்ளுக்காய் விளையாட்டுகளில் விளையாடியதுண்டு. அதேபோல் என்னுடைய சகோதரர்கள் கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது சின்ன சின்ன பந்துகளை வாங்கி வருவார்கள். அவற்றை மட்டையால் அடித்துக் கொண்டிருப்பேன்.

சினிமாவுக்குச் செல்ல வேண்டுமென்றால் அருகேயுள்ள திருவேங்கடம் (இன்றைக்கு தாலுகா தலைநகராகி உள்ளது) செல்ல வேண்டும். புதிய படங்கள் என்றால், கோவில்பட்டி, சங்கரன்கோவில் அல்லது திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டும். திருநெல்வேலியில் சென்ட்ரல், ரத்னா, பார்வதி, லட்சுமி, ராயல் என்ற தியேட்டர்கள்தான் அன்று முக்கியமாக இருந்தன. அதேபோல், கோவில்பட்டியில் நாராயணசாமி மற்றும் ராமசாமி, சரஸ்வதி, சங்கரன் கோவிலில் கோமதி சங்கர், தென்காசியில் பாக்கியலட்சுமி என்ற திரையரங்கங்கள் இருந்தன. மதுரைக்குச் சென்றால் ரிலீசான படங்களை உடனே பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் மதுரையில் ரீகல், சென்ட்ரல், தங்கம், கல்பனா, சிந்தாமணி தியேட்டர்களில் படம் பார்ப்பதுண்டு. ரீகல் தியேட்டரில்  ‘கோல்ட் ஃபிங்கர்’ என்ற ஆங்கிலப் படத்தை முதன்முதலாகப் பார்த்தது இன்றும் பசுமையாக ஞாபகத்தில் உள்ளது.

1959 - 60களில் சென்னையில் என்னுடைய சி்த்தப்பா ஒருவர் விமானப்படையில் லெப்டினன்டாக இருந்தார். அப்போது தாம்பரத்தில் தங்கி, சென்னை கடற்கரை பீச், இன்றைய அண்ணாசாலை, சைனா பஜார், மூர் மார்க்கெட் அருகில் இருந்த மிருகக்காட்சி, மீனம்பாக்கத்தில் விமானம் இறங்குவது, ஏறுவது மற்றும், ஓடுதளத்தில் பாய்வதை எல்லாம் பார்க்கும்போது, பிரமிப்பாகத் தெரிந்தது. அன்றைக்கு அண்ணா நகர் கிடையாது, அமைந்தகரை செனாய் நகர், அடையாறு காந்தி நகர் இவையே பிரபலமாக இருந்தன. மின்சார ரயில் பயணம் மூலம்தான் சென்னையை சுற்றிவர முடிந்தது. அதுதான் பெரியதாகத் தெரிந்தது. இன்றைக்கு சாதாரணமாக கடந்து செல்கின்றோம்.

ஏற்கெனவே அரசியல் பின்புலத்தில் வளர்ந்ததால், பியூசி படிக்கும்போதே அரசியல் மீது ஆர்வம் வந்தது. அரும்பு மீசை வளரும் காலம், வானம்பாடிகளாக சுற்றுகின்ற காலத்தில், ஸ்தாபன காங்கிரஸில் எனது மாணவர் காங்கிரஸ் பணியைத் தொடர்ந்தேன்.
நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டார். மார்சல் நேசமணி இறந்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு களப்பணி ஆற்றுவதற்கு முன்பு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துவர அண்ணன் பழ.நெடுமாறனையும், நாகர்கோவிலில் ஸ்தாபன இளைஞர் காங்கிரஸில் இருந்த சிரோன்மணியையும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பி கள ஆய்வு செய்யச் சொன்னார் பெருந்தலைவர் காமராஜர்.
அப்போது ஸ்தாபன காங்கிரஸின் தலைவராக பா.ராமச்சந்திரன். கட்சியின் பொதுச் செயலாளராக பழ.நெடுமாறன், குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, வேலூர் தண்டாயுதபாணி போன்றோர் இருந்தார்கள்.
ஸ்தாபன காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக கோவை கம்பன் பி.ஜி.கருத்திருமன் இருந்தார். அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களாக மேலே குறிப்பிட்ட தலைவர்கள் இருந்தார்கள்.
இதுதவிர, இன்றைக்கு நம்மோடு இருக்கின்ற எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், பழ.கருப்பையா, தமிழருவி மணியன், கன்னியாகுமரி முத்துக்கருப்பன் என்று சிலரும் இருந்தனர். கவிஞர் கண்ணதாசன் நாகர்கோவிலிலேயே தங்கி காமராஜருக்காகப் பணியாற்றினார். அந்தத் காமராஜரை எதிர்த்து சுதந்திரா கட்சி வேட்பாளராக டாக்டர் மத்யாஸ் போட்டியிட்டார்.

கடந்த 1957-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் நன்றாக நினைவில் உள்ளது... அப்போதெல்லாம் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடக்கும். வேட்பாளர் சின்னங்கள் எல்லாம் வந்து விட்டன. வாக்குச் சீட்டுகளில் வாக்களித்து, ஓட்டுப்பெட்டியில் போட வேண்டும். அதற்கு முன்னர் வேட்பாளர்களுக்கு சின்னங்களாக கலர்கள்தான் ஒதுக்கப்பட்டன. உதாரணமாக, சுப்பையா என்பவருக்கு சிவப்பு, ராமகிருஷ்ணன் என்பவருக்கு மஞ்சள் என கலர்கள்தான் இருக்கும். உருவச் சின்னங்கள் இருக்காது.
கட்சிகள் சார்பில் பெரிய போஸ்டர்கள் ஒட்டப்படும். கதவுகளில் ஒட்டக்கூடிய ‘டோர் ஸ்லிப்’ ஒன்று கொடுப்பார்கள். அது ரிப்பன் மாதிரி இருக்கும். அதேபோல் சட்டையில் மாட்டிக் கொள்ளும் வகையில் காளை மாடு, நட்சத்திரம், கதிர் அரிவாள் சின்னங்கள் அச்சடிக்கப்பட்ட வட்ட வடிவமாக ‘பேட்ஜ்’கள் என்று சொல்லக் கூடிய அட்டையை ‘ஊக்’குடன் தருவார்கள் இவைதான் அன்றைய பிரச்சாரத்துக்கான விளம்பரப் பொருட்கள்.

அதைத்தவிர தேர்தல் அன்று யாராவது ஒருவர் வீட்டில் மதிய உணவுக்கு தடபுடலாக ஏற்பாடு செய்வார்கள். அன்றைக்கெல்லாம் பிரியாணி விருந்தும் கிடையாது, ஓட்டுக்குக் காசும் கிடையாது. சைவ உணவுதான். வடை, பாயாசத்துடன் இருக்கும். காலையில் ஒரு காபி அல்லது சோடா கலர் பானம், மதியம் 4 மணிக்கு தேநீரோடு வடை கொடுப்பார்கள். இவைதான் அன்றைய தேர்தல் களத்தில் காணக்கூடிய காட்சிகள். அன்றைக்கு மது விலக்கு அமலில் இருந்ததால் மதுக் கடைகளே கிடையாது.இப்படியாக எனது அரசியல் பணி தொடங்கியது. கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கின்றன.

அதேபோல் நெல்லை மாவட்டம் என்பது என்றைக்கும் வீரத்துக்கும், பண்புக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான தலமாக விளங்குகிறது. சென்னை மாகாணமாக இருந்தாலும் சரி; இன்றைய தமிழ்நாடாக ஆனாலும் சரி... முக்கிய வட்டாரமாக எதிலும் திகழ்கின்றது திருநெல்வேலி சீமை.
முக்கியமாக குற்றாலத்துக்கு வருகின்ற விருந்தினர்கள், அதேபோல பாரதி பிறந்த எட்டையபுரம், தமிழ் தேசியம் உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான பாரதியின் நண்பர் சோமசுந்தர பாரதியும், உமறுப் புலவரும், முத்துசாமி தீட்சிதரும் உலவிய மண் எங்களுடைய எட்டையபுரத்து மண்.
இதன் அருகில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனுடைய பாஞ்சாலங்குறிச்சி, செக்கிழுத்த செம்மல் சிம்பரனார் பிறந்த ஓட்டப்பிடாரம், இந்திய அரசியல் சாசனத்தின் மூலப் பிரதியில் இன்றைக்கும் தமிழில் கையெழுத்திட்ட மு.சி. வீரபாகு பிறந்த தூத்துக்குடி. 

பத்திரிகை பிதாமகன்கள் தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம், அம்பாசமுத்திரம் கீழாம்பூரில் பிறந்த ‘தினமணி’ ஏ.என்.சிவராமன், பாமரர்களும் படிக்கக் கூடிய தினசரி ஏட்டைத் தந்த ‘தினத்தந்தி’ சி.பா.ஆதித்தனார், ‘தினமலர்’ பத்திரிகையை நிறுவிய ராமசுப்பையர் என்ற அடையாளங்கள் மட்டுமல்லாமல், சென்னையில் முதன்முதலாக ‘ஹிக்கின்பாதம்ஸ்’ புத்தகக் கடையைத் திறந்த சிம்சன், டிவிஎஸ் போன்ற தொழில் அதிபர்களையும் தந்தது எங்களுடைய நெல்லை மண்.

எங்கள் மண்ணில் பிறந்த அனைவருக்கும் அந்த மண்ணின் மகத்துவமான வீரமும், ஆற்றலும் திறமையும், ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கக் கூடிய ஞானமும் ரத்தத்தோடு கலந்து நிற்கும்.இப்படியான நிலையில் ஒரே ஒரு ஏக்கம்... எங்கள் அருகாமையில் உள்ள ராஜபாளையம், விருதுநகரைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர்களாகி விட்டார்கள். எங்கள் நெல்லை மைந்தர் யாரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகவில்லையே என்ற வருத்தமும், ஆதங்கமும், கவலையும் எங்களுக்கு உண்டு - இவ்வளவு திறமைகளும் ஆற்றலும் இருந்தும்கூட.
ஒரேயொரு ஆறுதல்...  ராஜபாளையத்து  குமாரசாமி  ராஜா  எங்கள்  மண்ணின் மைந்தர் என்பது. காரணம் ராஜபாளையம் ஒரு காலத்தில் திருநெல்வேலியில்தான் இருந்தது.
இப்படியாக கிராம வாழ்க்கை, திருநெல்வேலி கல்லூரி வாழ்க்கை  என்ற நிலையில் அரசியல், ஈழப் பிரச்சினை, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என்னோடு தங்கியதால், எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், ஈழப் பிரச்சினையில் என்னுடைய செயல்பாடுகள் மட்டுமல்லாமல், 69 - 70-களில் தொடங்கிய விவசாய சங்கப் போராட்டத்தில் நாராயணசாமி நாயுடுவோடும், கிருஷ்ணசாமி கவுண்டரோடும், முத்துசாமி கவுண்டர் எம்.பி.யோடும் பங்கேற்றேன். அதேபோல், மதுராந்தகம் முத்துமல்லா ரெட்டியாரோடு விவசாய சங்கத்திலும் பயணித்தேன்.
தமிழ்நாட்டில் அதிகமாக துப்பாக்கி சூட்டுக்கு பலியானது விவசாயிகள் சங்கப் போராட்டத்தில்தான். இதில் 48 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 48 பேர் பலியாகி உள்ளனர். என்னுடைய குருஞ்சாக்குளம் கிராமத்தில் மட்டும் 8 பேர் பலியாகினர்.

என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ என்ற நூல் இதுவரை 5 பதிப்புகள் வந்துள்ளது. இதில் நெல்லையினுடைய சிறப்பை விரிவாகச் சொல்லியுள்ளேன். நெல்லை மாவட்டம் தமிழர்களின் ஐந்து வகை நிலங்கள் உள்ளடக்கிய மாவட்டம் என்ற பெருமை பெற்றது.
காருக்குறிச்சி அருணாச்சலம், விளாத்திகுளம் சுவாமிகள், சங்கரதாஸ் சுவாமிகள், ஆபிரகாம் பண்டிதர் போன்ற பல இசை ஆளுமைகளும் இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தார்கள். மத நல்லிணக்கம் என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய மதச்சார்பின்மை என்று சொல்லக் கூடாது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திருநெல்வேலி மாவட்டம் திகழ்கிறது.
சைவம், நவத்திருப்பதிகள் அடங்கிய வைணவம், கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் மட்டுமல்லாமல், தென்காசி அருகில் உள்ள வீரிருப்பில் புத்தமத விகார்களும் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜைனமும் இங்கே ஒருகாலத்தில் இருந்தது. கழுகுமலை வெட்டுவான்கோவிலினுடைய சிறப்பு தமிழருடைய முத்திரையாகத் திகழ்கின்றது. இங்கே ஆதி காலத்தில் மாணவர்கள் படிக்கின்ற கலாசாலையும் அமைந்திருந்தது. இப்படி மத நல்லிணக்கத்துக்கான மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்.
சுலோச்சனா முதலியார் பாலம் 1843-ல் கட்டப்பட்டது. படைப்பாளி மாதவய்யா காலத்தில், தாமிரபரணி ஆற்றில் இறங்கி வந்துதான் பள்ளியில் படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. 1876-ல் திருநெல்வேலிக்கு ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டது. வராக நதி, ஜம்பு நதி, ராம நதி, கடனா நதி, கருப்பா நதி என்ற நதிகள் தாமிரபரணியோடு பயணிக்கின்றன. மற்றும் விளாத்திகுளம் பகுதியி்ல் ஓடும் வைப்பாறு.
அதேபோல் கன்னடியன் கால்வாய் ஒரு வரலாற்று சிறப்பு பெற்ற கால்வாயாகும். அதைப்பற்றி பின்னர் சொல்கின்றேன்.
பொதிகையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் தமிழகத்தின் ஒரே ஜீவநதி தாமிரபரணி. திருநெல்வேலியும், மதுரையும், தஞ்சையும் நெல்லை மட்டும் உற்பத்தி செய்யவில்லை. கலைகளையும் படைத்தன. தமிழ்கூரும் நல்லுலகத்தில் அகத்தியர், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், குமரகுரு தொடங்கி, இன்றைய நவீன எழுத்தாளர்கள் மாலன், கோணங்கி வரை நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் நெல்லை மாவட்டத்துக்குபெருமைசேர்க்கின்றனர்.
மனோன்மணீயம் சுந்தரனார் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. கால்டுவெல் தனது காலத்தில், திருநெல்வேலி வரலாற்றை வடக்கே ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தெற்கே நாங்குநேரி, வள்ளியூர் வரையுள்ள நெல்லை மாண்பைப் பற்றி விவரிக்கின்றார். தமிழில் முதல் படைப்பு நாவல் ‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் கதை’ என்பார்கள். அதற்கு முன்பே திருநெல்வேலி சேஷய்யர் ‘ஆதியோ அவதானி’ என்ற கதையை படைத்து விட்டார். அதிலும் திருநெல்வேலி முன்னோடியாக இருக்கின்றது.
மேடைப் பேச்சு நாவலர் சோமசுந்தர பாரதி, ரா.பி.சேது பிள்ளையை விட தன்னுடைய பேச்சு சிறப்பாக அமைய வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா விரும்பியது உண்டு. இதுகுறித்து அவர் சொன்னதும் உண்டு.

தமிழகத்திலேயே அதிகமாக சாகித்திய அகாடமி விருதை இதுவரை 14 பேர் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர். புத்தகப் பதிப்பிலும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை என்ற பதிப்பகங்களும் 1950-க்கு முன்னாலேயே தோன்றி விட்டன.
இனிவரும் தொடர்களில் தமிழக அரசியல், ஈழ அரசியல், அகில இந்திய அரசி்யல், இந்திரா எப்படி சிக்மங்களூரில் போட்டியிட்டார் என்பதைப் பற்றியெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
நீங்கள் அறிந்து, கேள்விப்பட்ட விஷயங்களைத் தாண்டி, அறியாத பல விஷயங்களைப் பற்றியும் சொல்ல இருக்கிறேன்.

இதற்கு ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் குழு ஒரு வாய்ப்பை எனக்கு நல்கியுள்ளதை நன்றியுடன் பார்க்கிறேன்.
தொடர்ந்து சந்திப்போம்....


https://www.hindutamil.in/news/opinion/columns/1353527-history-of-tirunelveli-district-was-explained-in-ks-radhakrishnan-series.html

Friday, March 7, 2025

*தமிழகத்தில் நள பாகமாக சாப்பிட்டே ஆகவேண்டிய சில ஹோட்டல்களின் தொகுப்பு....முழுமை அல்ல*




உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா ? ஊர் ஊராக சுற்றும் போது சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா? தமிழகத்தில் பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட ஒரு உணவுக்கடையின் தொகுப்பு..

நியூ சன்ரைஸ், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம், விழுப்புரம். Special : பாப்கார்ன்

குணா சுக்குகாபி, மானாம்பதி, திருப்போரூர். Special : சுக்குகாபி

பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை, கும்பகோணம். Special : காபி

முராரி ஸ்வீட், கும்பகோணம். Special : பூரி, பாஸந்தி, ட்ரை ஜாமூன்களுக்கும் பிரபலமான கடை(மயிலாடுதுறை மற்றும் திருவாரூரிலும் கிளைகள் உண்டு) 

ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்

ஹோட்டல் உஷா ராணி, இளம்பிள்ளை, வேம்படிதாளம், சேலம். Special : மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா

மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி, திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே. Special : முந்திரி அல்வா, முந்திரி பக்கோடா

ராஜூ ஆம்லேட், பரோடா ஓல்ட் பத்ரா ரோடு. Special : ஆம்லேட்

ஷஹ்ரன் ஹோட்டல், ஹைதராபாத் சார்மினார் கோபுரம். Special : லஸ்ஸி பலூடா

முதலியார் கடை, மதுரை தேவர் சிலை அருகே, மதுரை கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப். Special : முட்டை இட்லி

R.ரெங்கநாதன் கரம் கடை(செட்டி கடை), ஜவஹர் பஜார் கருப்பாயி கோவிலுக்கு சிறிது முன்பு, கரூர். Special : சீம் பால் கட்டி

AJJ மஸ்கோத் அல்வா, முதலூர், தூத்துக்குடி. Special : மஸ்கோத் அல்வா

காளத்தி கடை கிழக்கு மாட வீதி, மைலாபூர். Special : ரோஸ் மில்க்

கந்தன் தட்டு வடை செட், சேலம் பஜார் தெருவில்,கோயம்புத்தூர் ஜுவல்லரியின் பின்புறம் ஆற்றோடு ஒட்டிய பார்கிங் இடத்தில் ஒரு சிறிய TVS 50 Special : தட்டு வடை செட்.

கௌரி மெஸ், ராம் நகர், கோவை. Special : சிக்கன் கிரேவி, பூ மீன்

'மங்களாம்பிகா' இட்லி, கும்பகோணம். Special : மிளகாய்ப் பொடி, இட்லி

JB சவுத்திரி பாதாம் பால் கடை, மேற்கு மாசி வீதி, மதுரை. Special : பாதாம் பால்

விருத்தாசலம். Special : தவலை வடை !!

ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை அழகர் கோவில் ரோடு, தல்லாகுலம். Special : பரோட்டா

112 இலக்கம், மதுரை காமராஜர் சாலை, பழைய குயவர் பாளையம் சாலை, அழகர்கோவில். Special : தோசை

NNK மற்றும் NNR, அம்மாபேட்டை, சேலம் TVK ரோட்டில். Special : எசென்ஸ் தோசை

திண்டுக்கல் சிவா பிரியாணி, வேணு பிரியாணி இருக்கும் அதே தெரு. Special : மிளகு கொழம்பு

ஆதிகுடி ரவா பொங்கல், தேவர் ஹால் பஸ் ஸ்டாப், திருச்சி மெயின் கார்ட் கேட், கெயிட்டி, திருச்சி. Special : ரவா பொங்கல்

மௌலானா பேக்கரி, கூத்தாநல்லூர். Special : தம்ரூட்

உடுப்பி கிருஷ்ண விலாஸ், சிதம்பரம். Special : கத்திரிக்காய் கொத்சு

ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். Special : இட்லி

SRR கபே, திருவாரூர் பேருந்து நிலையம். Special : கலவை சாதங்கள்

வாசன், திருவாரூர். Special : பாதாம்அல்வா

உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால், 17, டான்சி நகர் , இரண்டாவது தெரு,  தரமணி லிங்க் ரோடு , வேளச்சேரி. Special : போளி, மற்றும் இனிப்பு வகைகள்.

A -1 ஹோட்டல், பெருமாள்புரம் ரவுண்டானா அருகில், திருநெல்வேலி. Special : சிக்கன் 65, மஜ்ரா சிக்கன், ஜிஞ்சர் சிக்கன்

வசந்த பவன், பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி. Special : மதிய உணவு மற்றும் பரோட்டா

PLA கிருஷ்ணா இன், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில். Special : பாயசம் மற்றும் அப்பளம்

தேவர் ஹோட்டல், ராஜப்பா நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர். Special : பருப்பு உருண்டை குழம்பு

அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. Special : இட்லி

வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை

ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்

கண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..

டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்

சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை

வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. Special : காரப்பொறி

ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு

மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. Special : சாப்பாடு

படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். Special : முயல் கறி ஸ்பெசல்

இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்

தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. Special : பரோட்டா

மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. Special : போண்டா பஜ்ஜி

அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்

ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

கடுக்கன் விலாஸ், வஉசி பூங்கா அருகில், ஈரோடு. Special : கம்மங்கூழ், ராகிக் கூழ், தயிர் வடை, மசால மோர்

ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. Special : சிக்கன் 65

திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. Special : தோசை, ஆப்பம்

ரயிலடி சுப்பையா மெஸ், தஞ்சை. Special : ஏழு வகை சட்னியுடன் சுவை மிக்க இரவு சிற்றுண்டி

பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை

பிங்க்பெர்ரி, 100 ஃபீட் ரோடு, தூபன்ஹள்ளி, இந்திரா நகர், பெங்களூர். Special : தயிர்கிரீம்

குணங்குடிதாசன் சர்பத், கீழவாசல், தஞ்சாவூர். Special : பால் சர்பத்

ஜன்னல் கடை, மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில் இடதுபுறம் சந்தில், சென்னை

கௌரி சங்கர் ரசவடை, வடசேரி, நாகர்கோவில். Special : ரசவடை

ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை, மீனாட்சி அம்மன் கோவிலின் கீழ ஆவணி மூல வீதியில், மதுரை. Special : கிழங்கு பொட்டலம்

A.V.K மீன் சாப்பாட்டு கடை, ஆர்காட் ரோடு, L.V பிரசாத் ரோடு. Special : மீன் சாப்பாட்டு

குஞ்சான் செட்டி கடை, மன்னார்குடி. Special : காராபூந்தி, மைசூர்பாக்.

டெல்லி ஸ்வீட்ஸ், மன்னார்குடி. Special : முந்திரி அல்வா

ரோஜா மார்க் இனிப்புகள், கும்பகோணம். Special : ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை

ரத்னா கபே, திருவல்லிக்கேணி. Special : சாம்பார்

சங்கர விலாஸ், கீழ ஆண்டார் வீதி, திருச்சி. Special : பூரி, கடப்பா

தஞ்சாவூர் மெஸ், மேற்கு மாம்பலம், சென்னை. Special : பூரி,கடப்பா

பார்த்தசாரதி விலாஸ், மேலவிபூதி பிரகாரம், திருவானைக்கா கோயில். Special : நெய் தோசை

சொசைட்டி பால்கோவா, மணப்பாறை. Special : பால்கோவா

இத்தாலியன் பேக்கரி, கும்பகோணம், தஞ்சை அய்யம்பேட்டை. Special : டீ, காபி, பிஸ்கட்

கோபு ஐயங்கார் கடை, மதுரை, மீனாக்ஷி அம்மன் கோவில். Special : சீவல் தோசை

சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.

காபி பேலஸ், எல்லையம்மன் கோயில் தெரு, தஞ்சாவூர். Special : டீ, காபி. வடிந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலான டிக்காஷனை உபயோகிப்பதில்லை. அதேபோல் ஒரு தூளில் இரு முறைக்கு மேல் டிக்காஷன் எடுப்பதுமில்லை.

ராவ்ஜி தள்ளுவண்டி பிரியாணி கடை, திருச்சி பெரிய கடைவீதி. Special : பிரியாணி

காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்

பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். Special : அடப்பிரதமன் 

சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. Special : தேங்காய் பால்

மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். Special : காரட் கேக்

பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. Special : இஞ்சி டீ 

கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.

பர்மா பாய் கடை, கோவை. Special : பரோட்டா பெப்பர் லெக்

எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. Special : ஃபுல் மீல்ஸ்

Barbeque Nation, கோவை டவுன் ஹால். Special :  Unlimited Barbeque

மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. Special : முட்டை பூரி

கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். Special : ஆப்பம், சாம்பார் பொடி

SMS ஹோட்டல், கோவை, Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை

கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. Special : அனைத்து வகை சிற்றுண்டி

ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. Special : பிரியாணி, குஸ்கா

MR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை

CFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். Special : வறுத்த கோழி

நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். Special : சிறு தானியங்கள் உணவு

பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. Special : பிரியாணி

ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. Special : பிரியாணி, அரி பத்திரி

லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு

ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : 12 வகை வெரைட்டி  சாத வகைகள்

சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. Special : குருமா, பரோட்டா

கோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். Special : மீன் குழும்பு, கைமா வடை

அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு

குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். Special : அசைவ சாப்பாடு

சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. Special : அளவுச் சாப்பாடு

வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. Special : அனைத்து வித தோசைகள்

பாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. Special : அனைத்து வித தோசைகள்

கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்

கண்ணணண் கறி விருந்து, கோவை. Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்

சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்

ஃபுட் கார்டன், RS Puram, கோவை. Special : தயிர் பூரி

குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. Special : தயிர் பூரி

வைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்

உமர்கையாம், லலிதா ஜுவல்லரி, தி.நகர். Special : எண்ணெய் கத்தரிக்காய், தாள்ச்சா  முஸ்லீம் வீட்டு பிரியாணி

மாமு கார்டன் ஹோட்டல், பரமக்குடி. Special : சைனீஸ் உணவு

சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. Special :  பள்ளிபாளையம் சிக்கன்

சீனியப்பா ஹோட்டல், கீழக்கரை. Special : பரோட்டா, சால்னா

ஜெய் சக்தி சைவ ஹோட்டல், கோவில்பட்டி.  Special : நிறைய மிளகு போட்டு CHETTINAADU சூப் 

ஃப்ளெமிங்கோ ஹோட்டல், வேளச்சேரி 100 அடி பை பாஸ் ரோடு. Special : சாப்பாடு

மாயாபஜார், சேலம். Special : நான்வெஜ் ஹோட்டல்,

மாமன் பிரியாணி, ஈரோடு பன்னீர் செல்வம் பார்க். Special : பிரியாணி

அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.

செந்தில் மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. Special : மதுரை மட்டன் சுக்கா

மீனாட்சி மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. Special : மதுரை மட்டன் சுக்கா

கதிர்வேல் வாத்துக்கடை, வேலூர் பரமத்தி. Special : வாத்துமுட்டை ஆம்லெட்

பார்டர் ரஹ்மத் புரோட்டாக்கடை, தென்காசி. Special : பெப்பர்சிக்கன், பெப்பர்காடை

பொன்னுசாமி ஹோட்டல், ராயபேட்டை. Special : நெத்திலி ப்ரை, சிக்கன் லாலிபாப்

தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். Special : பரோட்டோ

தோசா கார்னர், சேலம் அத்வைத் ஆஸ்ரமம் ரோடு. Special : அனைத்து வித தோசைகள்

செல்வம் ஹோட்டல், சேலம் அப்சரா மேடு. Special : பரோட்டா சால்னா

ராணி டிபன் ஸ்டால், கரூர். Special : கொத்து பரோட்டா

தேவர் மெஸ், சுங்கராம வீதி, பாரீஸ். Special : பரோட்டா குருமா:

மாருதி ஹோட்டல், சுசீந்திரம். Special : ஃபுல் மீல்ஸ்

டைமண்ட் டீ ஸ்டால், பழனி பஸ் ஸ்டாண்ட். Special : டீ

ராயல் புரோட்டாஸ், கரூர்-பள்ளபட்டி. Special : அனைத்து வித புரோட்டா

ஹோட்டல் சத்தார்ஸ், தஞ்சாவூர். Special : பிரியாணி

சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. Special : பிரியாணி

ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். Special : கடல் மீன் உணவு

ஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா

செல்லம்மாள் மண்பானை உணவகம், திருச்சி புத்தூர் திரவுபதி அம்மன் கோவில் எதிரில். Special : ஃபுல் மீல்ஸ்

முத்துபிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. Special : பரோட்டா 4 வகை சால்னா

தீன், தஞ்சாவூர். Special : சிக்கன் முர்தாபா

சார்மினார், ராயப்பேட்டை. Special : தந்தூரி சிக்கன்

கணேஷ் மெஸ், ஆண்டிபட்டி. Special : பூசணிப் பொரியல்

ஆனந்தாஸ் ஹோட்டல், ராஜபாளையம். Special : ஃபுல் மீல்ஸ்

சலாமத் ஹோட்டல், அண்ணாசாலை, சென்னை. Special : சுக்கா பரோட்டா

தங்கையா ஸ்வீட் ஸ்டால், திசையன்விளை. Special : மஸ்கோத் அல்வா

ஶ்ரீ சாய் உயர் தர சைவ உணவகம், தஞ்சாவூர் மெயின் ரோடு, திருச்சி. Special : ஆனியன் ஊத்தப்பம் 

கதிரவன் ஹோட்டல், ஸ்ரீவில்லிப்புத்தூர். Special : காபி

ஆள் ரீம், திருவல்லிக்கேணி. Special : பிரியாணி

தாஸ் ஜிகர்தண்டா, பெரியகுளம் ரோடு, தேனி பழைய பஸ்ஸ்டாண்ட். Special : ஜிகர்தண்டா

டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : சாப்பாடு

சாய் கப்சப், RS PURAM, கோவை. Special : இஞ்சி டீ:

இளநீர் சர்பத் கடை, பெல் ஹோட்டல் எதிரில், மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு. Special : இளநீர் சர்பத்

ஸ்ரீ விநாயக ஸ்வீட் காரம், குருக்கத்தி. Special : எள்ளுருண்டை

அரசன் மெஸ் மண்பானை சமையல், திருநெல்வேலி, மதுரை பைபாஸ் சாலை. Special : அன் லிமிட்டட் சாப்பாடு  

ஸ்ரீ கிருஷ்ணபவன், கும்பகோணம் ரயில் நிலையம் வெளியேறும் பாதை. Special :  அனைத்து வித தோசைகள்

நாயர் மெஸ், திருவல்லிக்கேணி. Special : மட்டன் குழம்பு வஞ்சிரம் வறுவல் 

ஆந்திரா கரீ ஹோட்டல், தங்க ரீகல் தியேட்டர், மதுரை. Special : தட்டு இட்லி

அழகப்பா செட்டிநாடு மெஸ், GST மெயின்ரோடு, சானடோரியம், சென்னை. Special : குஸ்கா

அழகி பிரியாணி ஹோட்டல், ஒக்கேனக்கல் மெயின் ரோடு. Special : அன்லிமிடட் பிரியாணி 

பழநியப்பா மெஸ், புதுக்கோட்டை. Special : பஃப் பரோட்டோ 

ஜானகிராமன் சைவ உணவகம், திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகே. Special : அனைத்து வித தோசைகள்

Jacob's Kitchen, காதர் நவாஸ் கான் ரோடு, கானாடுகாத்தான். Special : உப்புகறி, மண்பானை மீன் குழம்பு 

பிரேமா மெஸ், தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட். Special : கானத்துவையல், எள்ளுத்துவையல்

அண்ணாமலை சைவ ஹோட்டல், நெல்லை காந்திமதி கோவில். Special : மதிய சாப்பாடு, பிரண்டை துவையல்

அஜித் மீன் ஹோட்டல், நாகர்கோவில். Special : ஃபுல் மீன் மீல்ஸ்

அக்பர் மெஸ், பெரியமேடு. Special : மட்டன் பிரியாணி

வெங்கடேஷ்வரா ஹோட்டல், அப்பத்தூர். Special : சமோசா

பரமக்குடி பரோட்டா, பரமக்குடி பஸ் ஸ்டான்ட் எதிரில். Special : சால்னா

JMS சர்பத் கடை, திண்டுக்கல். Special : சர்பத்

ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்

சார்லஸ் ஹோட்டல், மதுர நரிமேடு அரசன் சுவீட்ஸ் அருகில். Special : பரோட்டா, 3 கூட்டு சால்னா

பைவ் ஸ்டார் இரவு ஹோட்டல், சின்னசேலம். Special : தோசை, நாலு வகை சட்னி

மொஹைதீன் பிரியாணி, பல்லாவரம். Special : பிரியாணி

போஜன், சூளைமேடு சிக்னல். Special : சோலா பூரி

ரிலாக்ஸ் காபி பார், திண்டுக்கல். Special : வடை, குருமா

பட்ஸ் ஹோட்டல் டீ, தாம்பரம் பஸ்டாண்ட் உள்ளே. Special : Tea

ஹரிஷ் பேக்கரி உப்பு ரொட்டி, நாகூர். Special : உப்புரொட்டி, தம்ரூட் 

சபரீஷ் ஹோட்டல், மதுரை சென்னை சில்க்ஸ் அருகே. Special : ஹைதரபாத் பிரியாணி :

கேரளா மெஸ், திருச்சி அஹ்மத் பிரதர்ஸ்கு பக்கத்து சந்து. Special : பரோட்டா வித் சில்லி

காந்தி கடை சால்னா, பரமக்குடி. Special : பரோட்டா :

குறிஞ்சி ஹோட்டல், இராம்நாட். Special : பரோட்டா, நெய் மீன் கறி

அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். Special : ஃபுல் மீல்ஸ்

மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. Special : சிந்தாமணி சிக்கன்

அல் ரீம் ஹோட்டல், திருவல்லிக்கணி. Special : ஸ்பெசல் பிரியாணி, ப்ரைடு ரைஸ்

புளியமரத்துக்கடை, ஶ்ரீவில்லிபுத்தூர். Special : ஸ்பெஷல் பால்கோவா

ஸ்ரீ அன்பு பவன், கோபி பஸ் நிலையம், கோபி. Special : ஃபுல் மீல்ஸ்

தனசேகர் சிக்கன் சென்டர், முத்துநாயக்கன்பட்டி. Special : சிக்கன்

தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா

செட்டியார் கடை, திருப்பூர். Special : டயனமைட் சிக்கன் :

Aachi Chetinad Hotel ஹோட்டல், ஈரோடு டெலிபோன் எக்ஸ்‌சேன்ஜ். Special : மூளை பிரட்டல்

BL ரெஸ்டாரன்ட், கரூர். Special : காரசட்னி இட்லி :

கண்ணன் ஹோட்டல், மதுரை புதூர் சர்ச். Special : மூளை ஃப்ரை

அம்மன் மெஸ், கோபிச்செட்டிபாளையம் சீதாலட்சுமி மண்டபம் அருகில். Special : சைவம் அசைவம் உணவு

சுதா மெஸ், குமாரபாளையம். Special : அசைவம் வீட்டு சாப்பாடு :

பத்மா மெஸ், விழுப்புரம் கலெக்டர் ஆஃபீஸ் அருகில். Special : அனைத்து வித தோசைகள், ஃபுல் மீல்ஸ்

சுல்தான் பிரியாணி, சங்கரன்கோவில். Special :  பிரியாணி

கரம் மது கரம் ஸ்டால், கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில், கரூர். Special : Sweets

ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். Special : மட்டன், குடல்பிஃரை

சிவா சில்லி, கரூர் செங்குந்தபுரம். Special : மீன், சில்லி சிக்கன், பிரியாணி

மிட்நைட் மசாலா ஹோட்டல், கோடம்பாக்கம். Special : லஞ்ச், டின்னெர்.

சுப்பையா இட்லி கடை, தஞ்சாவூர் JUNCTION. Special : இட்லி

கோபால்நாயுடு ஹோட்டல், இளம்பிள்ளை. Special : ஃபுல் மீல்ஸ்

ராவியத் ஸ்வீட் பேலஸ், வள்ளல் சீதக்காதிரோடு, கீழக்கரை. Special : ஸ்பெஷல் தொதல்

கற்பகம் ஹோட்டல், திருச்சி தேவர்ஹால் எதிர்புறம். Special : இட்லி, தோசை, சாம்பார்

ஸ்ரீபிரியா மெஸ், காரைக்குடி. Special : நாட்டுக்கோழி கிரேவி 

ஹோட்டல் ராமன், சீர்காழி புத்தூர் சாலை. Special : மீன் வறுவல், இறா வறுவல்

வீட்டு இட்லி, மதுரை அலங்கார் தியேட்டர் அருகில். Special : வீட்டு இட்லி, ஃபுல் மீல்ஸ்

ஹோட்டல் அர்ச்சனா, மதுரை. Special : நண்டு தோசை :

கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். Special : அசைவச் சாப்பாடு

முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். Special : அசைவ சாப்பாடு

செல்லமணி டிபன் கடை, தேனி. Special : 5 வகை சட்னி, பணியாரம்

செல்வம் கூல் ட்ரிங்க்ஸ், சிவகிரி. Special : ஐஸ்கிரீம்

அ1 மெஸ், கோவில்பட்டி. Special : அசைவ சாப்பாடு

இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. Special : இட்லி

திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. Special : அடை சுண்டல்

மாரீஸ் ரெஸ்டாரண்ட், இரத்தினமங்கலம், வண்டலுர் டூ கேளம்பாக்கம் ரோடு. Special : :ஃபுல் மீல்ஸ்

கண்ணன் ஹோட்டல், திருச்சி மத்திய பேருந்து நிலையம். Special : பாதம் பால்

தென்பனை, உளுந்தூர்பேட்டை. Special : இயற்கைமுறை குளிர்பானக் கடை

ராணி விலாஸ், செக்கானூரனி. Special : குடல் குழம்பு, குழி ஆம்லெட், ரத்த பொரியல்

வீட்டுச் சாப்பாடு, அய்யம்பேட்டை தாண்டி 15-2 கிமி, தஞ்சை – கும்பகோணம். Special : வீட்டுச் சாப்பாடு

ரோட்டு கடை, சென்னை ஓட்டேரி தாதாஷாமக்கான் பகுதி. Special : சுக்கா கபாப், வடை கபாப், வடை வறுவல்

சேகர் கடை இட்லி, மராட்டியர் அரண்மனை அருகில், தஞ்சை. Special : இட்லி

பெங்களூர் AL BAK பிரியாணி, மல்லேஸ்வரம், ராஜாஜிநகர். Special : பிரியாணி

பாலன் உணவகம், கேணிக்கரை சந்திப்பு, இராமநாதபுரம். Special : விதம் விதமான தோசை

ஹோட்டல் சுவை, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட். Special : இட்லி, தோசை, பொங்கல் வடை, காபி

பார்டர் கடை, செங்கோட்டை. Special : பிரைடு சிக்கன்

அய்யரக்கா கடை, செங்கோட்டை. Special : தயிர்வடை

கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. Special : மீன் வறுவல்

HBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. Special : பிரியாணி

இதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா

ரோஷன், திருச்சி-தஞ்சாவூர் ரோடு, காட்டூர். Special : தந்தூரி

டெல்லி ஸ்வீட்ஸ், கரூர். Special : சூடான சமோசா 

மதுரை ஹரிஸ் மெஸ், சின்ன சொக்கிக்குளம். Special : மணக்கும் நெய் மீன் குழம்பு 

ஹோட்டல் ந்யூ இம்ரான், கொடைக்கானல். Special : மட்டன் பிரியாணி

போஜனாலாயா, மகாலக்ஷ்மி ப்ளாசா, விழுப்புரம். Special : சாப்பாடு

சங்கர் சாட், அண்ணாநகர் சரவணபவன் பின்னால். Special : தஹி, பூரி மசாலா, கட்லட்,  சமோசா

SK சைவ-அசைவ உணவகம், பெங்களூரு விவேக் நகர். Special : சைவ அசைவ சாப்பாடு

UFM நம்ம வீட்டு சாப்பாட்டுக் கடை, பெருந்துறை. Special : கறி சோறு

அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். Special : குடல்கறி, தோசை

ஹோட்டல் விருதுநகர் செட்டிநாடு உணவகம், T-நகர். Special : சாப்பாடு

ஹோட்டல் வெல்கம், நாயுடுபுரம், கொடைக்கானல். Special : பிரியாணி

கோபு ஐயங்கார் ஓட்டல், மதுரை மீனாக்ஷி கோவில். Special : தவலை வடை

ஹோட்டல் பிரபு, நாகர்கோவில். Special : அசைவம்

ஹோட்டல் விஜயதா, நாகர்கோவில். Special : அசைவம்

ஹோட்டல் அரிஸ்டோ, கொடைக்கானல். Special : டிபன், மீல்ஸ்

காலேஜ் ஹவுஸ் லாட்ஜுக்குள் இருக்கும் ரெஸ்டாரண்ட், மதுரை. Special : சைவச் சாப்பாடு

மணி ஐயர் ஓட்டல், திருச்செந்தூர். Special : சைவச் சாப்பாடு

பாரதி மெஸ், திருவல்லிக்கேணி. Special : கேப்பைக்  கூழ், முளை கட்டிய தாணியங்கள்

பஞ்சு பரோட்டா, பெருந்துறை. Special : பரோட்டா, சிக்கன் பிரியாணி

மண்சட்டி சமையல், சங்ககிரி டோல்கேட் அருகே. Special : ஃபுல் மீல்ஸ்

முருகபவன், தொப்பூர். Special : விதம் விதமான தோசை

தாஜ் ஹோட்டல், மதுரை-ராமேஸ்வரம் மெயின் ரோடு, பரமக்குடி. Special : கறிக்கஞ்சி

ஏஒன்மெஸ், கோவில்பட்டி. Special : சிக்கன் பிரியாணி,  லாலிபாப், தலைக்கறி

பசுமை உணவகம், சேலையூர். Special : கருப்பட்டி காஃபி

NEW MADRAS CAFÉ, சந்தோம். Special : மாலையில் சம்சா, சாஸ்

கருப்பையா நாடார் மெஸ், சாத்தூர்.  Special : கரண்டி ஆம்லெட், டிங் டாங்

துளசி பிரியாணி, திண்டுக்கல். Special : நாட்டுகோழி பிரியாணி, புட்டு பரோட்டா

பார்த்தசாரதி விலாஸ், திருச்சி திருவானைக்கோவில். Special : நெய் தோசை

விஞ்சை விலாஸ், நெல்லை டவுனில் ஆர்ச் பக்கம். Special : விதம் விதமான தோசை

வெங்கடேச பவன், ஸ்ரீரங்கம் கோயில் அருகில். Special : சாம்பார் வடை, கீரை வடை

மூர்த்தி கபே, சிதம்பரம். Special : கடாய் சிக்கன்:

ஆண்டவர் அல்வா கடை, திருவையாறு. Special : அல்வா

சீனிவாசன் தங்கப்பாண்டியன் கடை, கீழஈரால். Special : சேவு, சீனிக் கருப்பட்டி மீட்டாய் 

மங்கள விலாஸ், சேலம். Special : மட்டன் சுக்கா

விவேகானந்தா, சேலம். Special : நாட்டு கோழி நெஞ்சு பிரை, முட்டைதோசை

செல்வி மெஸ், சேலம். Special : கட்லா மீன் பிரை, மட்டன் பிரியாணி

சேலம் RR பிரியாணி, சென்னை மதுர வாயல், சென்னை. Special : பிரியாணி

பராசக்தி நாட்டு கோழி பிரியாணி, சேலம் செவ்வாய்ப்பேட்டை. Special : நாட்டுக் கோழி பிரியாணி, வெங்காய சில்லி சிக்கன்

புத்தூர் ஜெயராமன் கடை, சீர்காழி. Special : அசைவ உணவு, கெட்டித் தயிர், இறால், சிக்கன்

புத்தூர் ஜெயராமன் கடை, சிதம்பரம். Special : அசைவ உணவு

ஹோம் இட்லி கடை, ஈரோடு collector ஆபீஸ் அருகே. Special : ரவா இட்லி, விதம் விதமான தோசை

சின்னப் பையன் கடை, சேலம் குகை. Special : மட்டன் வறுவல், ஈரல் ஃப்ரை

கந்தவிலாஸ் பரோட்டா, சேலம் குகை.  Special : சூடான பரோட்டா, கோழிக்குழம்பு

பாவா கடை, அரிசிபாளையம். Special : விதம் விதமான தோசை

வெங்கடேஷ்வரா லாலா ஸ்வீட் ஸ்டால், ஶ்ரீவில்லிபுத்தூர். Special : பால்கோவா

தொட்டிபட்டியார் ஹோட்டல், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே. Special : பெஸ்ட் சிக்கன், மிளகு கிரேவி

சந்திரன் மெஸ், மதுரை தல்லாகுளம். Special : அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்

மயிலை கற்பகாம்பாள் மெஸ், மைலாப்பூர். Special : விதம் விதமான தோசை

சுல்தான் பிரியாணி, சங்கரன்கோயில், கழுகுமலை ரோட்டில். Special : பிரியாணி

கரீம் மெஸ் பிரியாணி, சென்னை பெரியமேடு. Special : பிரியாணி

பாட்ஷா பிரியாணி சென்டர், சத்திரம், திருச்சி. Special : பிரியாணி

முத்துப்பிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. Special : முட்டைமாஸ் பரோட்டா 

குமார் மெஸ், மதுரை தல்லாகுளம். Special : விரால்மீன் வறுவல், அயிரை மீன் 

அரசன் மெஸ் மண்பானை சமையல், நெல்லை மதுரை பைபாஸ் சாலை. Special : அன் லிமிட்டட் சாப்பாடு:

சுகுணா விலாஸ், திருசெங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே. Special : முயல் ரோஸ்ட்

ஹோட்டல் ட்ராபிக் ஜாம், திருச்சி மலைக்கோட்டை, பரோட்டா, மூனு வித க்ரேவி 

பார்த்தசாரதி தோசை, திருச்சி திருவானைக்கோவில். Special : நெய்தோசை, விதம் விதமான தோசை

ஸ்டார் பிரியாணி, வாலாஜா டோல்கேட், ஆற்காடு. Special : பிரியாணி

டெல்லி வாலா, மேலக் கோபுர வாசல், மதுரை. Special : சப்பாத்தி, பூரி, இனிப்பு, கார வகைகள்

மித்தாய் மந்திர் ஹோட்டல், வட பழனி முருகன் கோவில், சென்னை. Special : சைவ உணவு

மோகன் போஜனாலயா, தெற்காவணி மூல வீதி, மதுரை. Special : உணவு வகைகள்

காந்திராம்ஸ் ஹோட்டல், உடுமலைபேட்டை. Special : தயிர் வடை, சாம்பார் வடை

செந்தில் ஹோட்டல், உடுமலைபேட்டை. Special : மஷ்ரூம் fry, மஸ்ரூம் க்ரேவி, முட்டை பரோட்டா

இம்பாலா ஹோட்டல், திருச்சி. Special : பிரியாணி

புகாரி, திருச்சி. Special : பிரியாணி

குறிஞ்சி ஹோட்டல், திருச்சி. Special : எள் மிளகாய்ப்பொடி, பூண்டு மிளகாய்ப்பொடி,

கிராண்ட் ஹோட்டல், திருச்சி. Special : பிரியாணி

கொளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. Special : பிரியாணி

இனாம்குளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. Special : பிரியாணி

அரிஸ்டோ ஹோட்டல், திருச்சி. Special : கைமா சமோசா

ஆர்ய பவன், கிருஷ்ணகிரி. Special : பாதுஷா, பால்கோவா

கதிரவன் மெஸ், தேரடி, ஸ்ரீவில்லிப்புத்தூர். Special : சைவ சாப்பாடு

ரகுமானியா ஹோட்டல், விருத்தாசலம். Special : வான் கோழி பிரியாணி

அர்ச்சனா ஹோட்டல், விருத்தாசலம். Special : சைவச் சாப்பாடு

ஹோட்டல் சற்குரு, புதுச்சேரி. Special : சைவ உணவு

ஹோட்டல் ஸ்ரீகாமாட்சி, E.C.R. இந்திரா காந்தி சிலை, புதுச்சேரி. Special : அசைவம், மதிய உணவு

ஹோட்டல் மனோ, சக்ரவர்த்தி தியேட்டர், நாகர்கோவில். Special : கொத்து பரோட்டா

லின்ஸ் ஹோட்டல், நாகர்கோவில். Special : கொத்து பரோட்டா

நொண்டிக்கடை, கன்னியாகுமரி. Special : மீன் குழம்பு

ஹோட்டல் நாசர், மார்த்தாண்டம். Special : சிக்கன் ஃப்ரை

ஹோட்டல் ஜூப்ளி, வடசேரி, நாகர்கோவில். Special : கொத்துக் கோழி

கிருஷ்ணா விலாஸ், காஞ்சிபுரம். Special : சாம்பார் இட்லி, விதம் விதமான தோசை

ராயல் ஹோட்டல், அபிராமி தியேட்டர் எதிரில், ஈரோடு. Special : எண்ணையில் பொரித்த புரோட்டா

கண்ணதாசன் மெஸ், தி-நகர் நடேசன் பார்க், சென்னை. Special : கொத்து பரோட்டா

சந்திரன் மெஸ், தல்லாகுளம். Special : நெய்மீன் வறுவல், அயிரைமீன் குழம்பு

குமார் மெஸ், தல்லாகுளம். Special : அயிரை மீன் குழம்பு, விரால்மீன் வறுவல்

அம்மா மெஸ், தல்லாகுளம். Special : நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல், மட்டன் கோலா 

அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி. Special : மட்டன் சுக்கா, கரண்டி ஆம்லேட் 

அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண். Special : நெய்மீன் வறுவல், இறால்மீன் வறுவல்

அம்சவல்லி ஹோட்டல், கீழவாசல். Special : மட்டன் பிரியாணி

பனமரத்து பிரியாணி கடை, தல்லாகுளம். Special : புலாவ் போன்ற பிரியாணி

சரஸ்வதி மெஸ், பெரியார் சிலை அருகில், தல்லாகுளம். Special : மட்டன் பிரியாணி

ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப், தல்லாகுளம். Special : மீன் சாப்பாடு

திண்டுக்கல் வேலு பிரியாணி, தல்லாகுளம். Special : மட்டன் பிரியாணி

கோனார் மெஸ், சிம்மக்கல். Special : கறி தோசை, வெங்காய சட்னி, விதம் விதமான தோசை

குமார் மெஸ், தல்லாகுளம், மாட்டுத்தாவணி. Special : இட்லி, முட்டை வழியல் 

ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம். Special : பரோட்டா, சுவரொட்டி குடல் வறுவல்

அஜ்மீர் மஹால், கோரிப்பாளையம். Special : முட்டை பரோட்டா

சிங்கம் பரோட்டா கடை, பீபீ குளம். Special : முழுக்கோழி வறுவல் 

ஜானகிராமன் ஹோட்டல், திலகர் திடல். Special : மட்டன் சுக்கா

சுதா பை நைட், ரிசர்வ் லைன். Special : முட்டை பரோட்டா

கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. Special : பட்டர் சிக்கன்

பஞ்சாபி தாபா, தல்லாகுளம். Special : பட்டர் நான், தந்தூரி சிக்கன்.

பரோட்டா கடை, ஆவின் சிக்னல், மதுரை. Special : பரோட்டா

ஆர்ய பவன், மதுரை. மசாலா பால், லஸ்ஸி (இரவு)

அம்ஸவல்லி, மதுரை. Special : பிரியாணி, ஆப்பிள் பால்

ஜாஃபர் ஹோட்டல், மதுரை. Special : பிரியாணி

ஹோட்டல் தமிழ்நாடு, காமராஜர் சாலை, மதுரை. Special : கொத்து புரோட்டா

ஹோட்டல் அருளனாந்தம், மதுரை. Special : மட்டன் சுக்கா, அயிரை மீன்

ஓல்ட் மார்டன் ரெஸ்டாரன்ட், மதுரை. Special : இட்லி

ஸன்கு வாலா, மதுரை. Special : ரொட்டி, மாம்பழ ஜூஸ்

குமார் மெஸ், மதுரை. Special : போன் லெஸ் நண்டு

கோபு ஐயங்கார் ஹோட்டல், மதுரை. Special : வெள்ளை ஆப்பம், காரத் துவையல்

வின்சென்ட் பேக்கரி, மேற்கு மாசி வீதி, மதுரை. Special : இஞ்சி பிஸ்கட்

முதலியார் கடை, கோரிப்பாளையம், மதுரை. Special : இட்லி, காரச் சட்னி

குரு பிரசாத் ஹோட்டல், மதுரை. Special : சில்லி பரோட்டா

கணேஷ் மெஸ், மதுரை. Special : சோயா குழம்பு

புதூர் மீனாக்ஷி பவன், மதுரை. Special : வறுத்த சிக்கன் லெக் பீஸ்

ஹோட்டல் அபிராமி, சிம்மக்கல், மதுரை. Special : பூரி, கிழங்கு மசாலா

ஸ்ரீ ராம் மெஸ், மதுரை. Special : அன் லிமிட்ட் மீல்ஸ்

போஸ் கடை, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. Special : இட்லி, விதம் விதமான தோசை

கணேஷ் மெஸ், மேலப்பெருமாள் மேஸ்திரி ரோடு, மதுரை. Special : புல் மீல்ஸ்

மாடர்ன் ரெஸ்டாரென்ட், மதுரை. Special : தோசை, வட இந்திய உணவு வகைகள்

சபரீஸ், டவுன்ஹால் ரோடு, மதுரை. Special : நெய்ப் பொங்கல், அல்வா, விதம் விதமான தோசை

முருகன் இட்லி கடை, இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில், மதுரை. Special : இட்லி, விதம் விதமான தோசை

லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை, திருநெல்வேலி. Special : அல்வா

சங்கர் காபி, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. Special : உழுந்து வடை

ஐயப்பா தோசை கடை, பாண்டிய வெள்ளாளர் தெரு, மதுரை. Special : விதம் விதமான தோசை

விசாலம் காபி, தல்லாகுளம், மதுரை. Special : காபி

இளநீர் சர்பத், மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே, மதுரை. Special : இளநீர் சர்பத்

பேமஸ் ஜிகர்தண்டா, விளக்குத்தூண், மதுரை. Special : ஜில்ஜில் ஜிகர்தண்டா

PNR சர்பத்கடை, பழனி. Special : சர்பத்

செட்டியார் டீக்கடை, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில். Special : உளுந்தவடை, தேங்காய் சட்னி

வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். Special : பன், பரோட்டா

சூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி. Special : கொழுக்கட்டை

அமுதசுரபி, பொள்ளாச்சி. Special : விதம் விதமான தோசை

கௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. Special : மினி காஃபி.

பிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. Special : சிக்கன் பிரியாணி

நாட்டு கோட்டை செட்டி நாடு ஹோட்டல், இராமநாதபுரம். Special : மட்டன் பிரியாணி

பாலாஜி பவன், யூனியன் க்ளப், திண்டுக்கல். Special : பிடி கொழுக்கட்டை

பாலாஜி ஸ்நாக்ஸ், பாரதிநகர் பஸ் ஸ்டாப், இராமநாதபுரம். Special : டீ, ஸ்நாக்ஸ்

ஹோட்டல் மரண விலாஸ், தெப்பக்குளம், மதுரை. Special : அன்லிமிடெட் குஸ்கா 20 ரூபாய்

ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. Special : அன்லிமிட் சாப்பாடு

கணேஷ் செட்டிநாடு ஹோட்டல், ராயப்பேட்டை, சென்னை. Special : அன்லிமிட் சாப்பாடு

கீதா ஹால், கோவை. Special : நீர் தோசை

அப்பா மெஸ் அல்லது டவுசர் ஹோட்டல், மந்தைவெளி பஸ் ஸ்டான்ட், மந்தைவெளி. Special : இறால் தொக்கும், வஞ்சிரம் மீன் வருவலும் மட்டன் குழம்போடு

தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி. காசி வினாயகா மெஸ். Special : பருப்பு நெய், நெய் ஸ்பெஷல், பைனாப்பிள் ரசம், பருப்பு சாம்பார், பருப்பு பொடி

ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

வள்ளி மெஸ், நெசவாளர் காலனி மெயின் ரோடு, தர்மபுரி. Special : கல்லில் போட்டு புரட்டி எடுக்கப்பட்ட நன்கு வெந்த மட்டன், சிக்கன், மீன், முட்டை சட்டினி

பழநியப்பா மெஸ், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில். Special : இறால், மீன், கோழி, காடை

சிவசாய் மெஸ், நாரதகான சபாவுக்கு எதிரே, டிடிகே சாலை, சென்னை. Special : சைவ உணவு.

தாபா எக்ஸ்பிரஸி, செனடாஃப் சாலை, சென்னை. Special : பஞ்சாபி மதிய உணவு

அம்சவல்லி பவன், கீழவெளி வீதி, மதுரை. Special : மட்டன் பிரியாணி

ஸ்ரீராம் மெஸ், காக்கா தோப்பு, மதுரை. Special : சைவம்

ஹரிவிலாஸ், மேலமாசி வீதி, மதுரை. Special : கத்திரிக்காய் பஜ்ஜி, புளியோதரை, கேசரி, காரவடை

ஒரிஜினல் நாகப் பட்டினம் நெய் மிட்டாய்க் கடை, மதுரை. Special : நெய் வழியும்   அல்வா

பாம்பே அல்வா ஸ்டால், கீழ ஆவணி மூல வீதி, மதுரை. Special : நெய்யில் மிதக்கும் சூடான அல்வா

அன்னபூரணி பொங்கல் கடை, முனிச்சாலை நாற்சந்தி, மதுரை. Special : புளியோதரை, கொண்டைக் கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்

சாரதா மெஸ், பெல்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை, திருவல்லிக்கேணி. Special : மதுரை அயிரை மீன் குழம்பு

அம்பாள் மெஸ், திருவல்லிக்கேணி. Special : ஸ்பெஷல் மசாலா தோசை

பெஸ்ட் கிருஷ்ண பவன், திருமலை நாயக்கர் மகாலின் எதிரே, மதுரை. Special : இட்லி, -பொங்கல், தோசை

இதில் விட்டுப்போனத சொல்லுங்க சேர்த்துக்குவோம்..

Wednesday, March 5, 2025

சொல்லின்செல்வர்அண்ணன் ஈ. வே.கே.சம்பத்

#சொல்லின்செல்வர்அண்ணன்சம்பத்அவர்களின்95வதுபிறந்ததினம்இன்று . 
*****
சொல்லின் செல்வர் சம்பத் இயல்பாகவே சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர். அதற்கு முன் பேச வாய்ப்புக் கேட்டு அவைத்தலைவர் அனந்தசயனத்தோடு மோதியிருக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே ஒரு பெரிய சாதனைக்கு அவர் வழிகாண முற்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளி போன்ற மொழிகளுக்கு ஒரே நேரத்தில் மொழியாக்கம் செய்யும் வசதி இருந்தது. ஆனால் தமிழுக்கு அத்தகுதி தரப்படவில்லை.

இந்தி மட்டுமே தெரிந்த உறுப்பினர் ஆங்கில உரையைக் கேட்கிறபோது தமது இருக்கை முன் அமைக்கப்பட்டுள்ள "இந்தி பொத்தானை' அழுத்தினால் போதும். அவர் காதுக்கு அந்த ஆங்கில உரையின் இந்தி மொழியாக்கம் ஒலிக்கும். இத்தகைய வசதி தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பதை நிலைநாட்ட எடுத்த எடுப்பில் சம்பத் அவருக்கேயுரிய ஆவேசத்தோடு திடீரென்று முன்னறிவிப்பில்லாமல் தொடங்கினார்.

இந்தி வெறியர்கள் அதிர்ந்தெழுந்து எதிர்ப்புக் கூச்சலிட்டனர். பெரும் கூச்சலுக்கிடையே சம்பத் தொடர்ந்தார். லோகியா, கோவிந்ததாஸ் சேட், மணிராம் பக்கிரி போன்ற அழுத்தமான இந்தி ஆதரவாளர்கள் சம்பத் ஆற்றிய தமிழுரைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

சம்பத் சமர்புரிபவராயிற்றே. விவாத மண்டபங்களில் பகை மிரள முழக்கிடும் பீரங்கிப் பேச்சாளராயிற்றே கூச்சல் குழப்பத்திற்கிடையே அந்த ஆவேசக்குரல் அழுத்தம் திருத்தமாகக் கணீரென' ஒலித்தது.

" அச்சுறுத்தியோ, இச்சகம் பேசியோ எங்கள் மீது இந்தியைத் திணிக்க முடியாது. இன்பத் தமிழுக்கு ஆபத்து என்றால் பெரும் பூகம்பத்தையே நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். மொழி காக்க உயிர் காத்த எங்கள் வீரத்தியாகிகள் தாளமுத்து நடராசன் கல்லறைகளை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்....''

என்றெல்லாம் வெடித்தார் சம்பத், அவையே இரு கூறாகியது. கட்சிக் கோடுகளைக் கடந்து இந்தி பேசும் உறுப்பினர்கள் இந்தி பேசாத உறுப்பினர்கள் என்று அவை இரு பிரிவாகக் காட்சியளித்தது. இந்தி வெறியர்கள் "பேசாதே' என்று கூச்சலிட்டனர். அமளி விளைவித்தனர்.

பிரதமர் நேரு தமிழறியாதவர். சம்பத் என்ன சொல்லுகிறார் என்பதை உன்னிப்பாகக் கேட்கிறார். சம்பத்தை நோக்கி, ""உங்களுக்குத்தான் ஆங்கிலம் தெரியுமே, ஆங்கிலத்தில் பேசுங்கள்'' என்கிறார். அப்போது சம்பத் ஆங்கிலத்தில் மறுமொழி உரைக்கிறார். அவையில் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆங்கிலத்தில் முழக்கத்தைத் தொடர்கிறார்.

சம்பத் முயற்சியால்தான் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பேச்சை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கவும், அதே நேரத்தில் மற்ற மொழிப் பேச்சுகளை தமிழில் தரவும் வசதி செய்து தரப்பட்டது. இதனால்தான் பிற வடமொழிகளே அறியாத லட்சுமணன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் துணை அவைத்தலைவராகப் பணியாற்ற முடிந்தது.

இன்று நாடாளுமன்றத்தில் தமிழ் மட்டுமே தெரிந்த உறுப்பினர்கள் துணிச்சலாக எழுந்து தமிழில் பேச முடிகிறதென்றால் அந்த வாய்ப்பை, வசதியை ஏற்படுத்தித் தந்த பெருமை சம்பத்துக்கே உண்டு. இமயமலையில் சேரன் செங்குட்டுவன் தமிழ்க் கொடி நாட்டினான் என்பார்கள். அது உண்மையோ பொய்யோ டெல்லி நாடாளுமன்றத்தில் தமிழுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தியவர் சம்பத் என்பது உண்மை.

முதல் முழக்கத்தை முடித்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தி சென்னை திரும்பிய சம்பத், அண்ணாவின் பெரும் பாராட்டினைப் பெற்றார்.!

#சொல்லின்செல்வர் ' அண்ணன் சம்பத்
அவர்களின் 95 வது பிறந்த தினம் இன்று . 5-3-2025


Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...