Thursday, August 22, 2024
#சென்னைநாள்
#சென்னைநாள் #Madrasday ————————— இன்றைக்கு சென்னை உருவான நாள். அதற்கு சென்னை தினம் என்று பெயர் வைத்து பலரும் இந்த மெட்ரோபாலிட்டன் நகரத்தை நினைவு கூறுகிறார்கள். பிரிட்டிஷ் ராஜதானியில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த நகரத்திற்கு பல வரலாறுகள் உண்டு. மதராஸ் எனவும் பட்டணம் எனவும் சொல்லப்பட்டது. அக்காலத்தில் விஜயநகர வம்ச ஆட்சியின் பிரதிநிதி சென்னப்ப நாயக்கர் என்பவரிடம் 17,000 ரூபாய்க்கு பிரிட்டிஷ் வணிகத்தார் இந்த துறைமுகப் பகுதியை விலைக்கு வாங்கினார்கள் என்று ஆவணங்கள் கூறுகின்றன. நான் முதன்முதலாக சென்னைக்கு வரும்போது 1959 என்று நினைக்கிறேன் நினைவுகள் சற்று மங்கலாகத்தான் இருக்கின்றன. அப்போது சென்னையில் மூர் மார்க்கெட் அதன் அருகில் மிருகக்காட்சி சாலை அதற்கடுத்து சைனா பஜாரில் இருந்து பாரிஸ் கார்னர் வரை பயணித்த ஞாபகம். அன்றைக்கு அண்ணா நகர் கிடையாது. பெசன்ட் நகர் கிடையாது அடையாறும் அங்கு சில வீடுகளும் இருந்தன. இன்று அண்ணா சாலை என்று வழங்கப்படும் மவுண்ட் ரோடு மற்றும் மெரினா கடற்கரை என நீளும் தொடர் சாலைகளிலும் அதை ஒட்டியபகுதிகளிலும் வாகனங்களும் மக்களும் புழங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு படிப்பு கல்வி முடித்து அரசியல் மற்றும் சட்டப் பணிகள் சம்பந்தமாக சென்னைக்கு வந்து குடியேறி 45 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த வகையில் சென்னையுடன் எனது தொடர்பு நீண்ட தன்மையுடையது. எனது கிராமத்தை விட்டு வந்த பிறகு குறிப்பாக என்னை அரசியலிலும் செய்யும் பணியிலும் அதிகம் அடையாளப்படுத்த சென்னை உதவி இருக்கிறது. சென்னை வாழ்க்கையில் எத்தனையோ பெரிய தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளையும் பெற்றேன். பெருந்தலைவர் காமராஜர் கலைஞர் எம்ஜிஆர் பிரபாகரன் என பல புள்ளிகள்….அதேபோல் இந்தியாவின் வட புலத்துத் தலைவர்கள் ராம்விலாஸ் பஸ்வான் தாரகரேஸ்வரி சின்கா கேபி உன்னிகிருஷ்ணன் சந்திர சித் யாதவ் கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ், அசாம் முன்னாள் முதல்வர் மகந்தா மற்றும் புக்கன் போன்றவர்களோடு அரசியல் காரணங்களுக்காக சென்னையில் அலைந்த நாட்கள்இவர்களோடெல்லாம் நட்பு கொண்டது எல்லாம் நினைவுகள். கடந்த 50 வருடங்களில் சென்னை தன்னை வெகுவான நிலப்பரப்பில் விஸ்தரித்துக் கொண்டு விட்டது. இரண்டு மூன்று மடங்கு மக்கள் தொகை அங்கே பெருகி இருக்கிறது! அன்றைய காலம் போல் இல்லாமல் சென்னைக்கு வந்து குடியேறிய பலராலும் அது பலவகைமையான பண்பு மாற்றங்களை அடைந்திருக்கிறது. தொழிற்சாலைகள் ஐடி வளாகங்கள் என்று அதற்கு ஒரு புதிய முகமும் இருக்கிறது. எழுவது என்பதில் இருந்த மக்கள் பண்பாடு நகரத்தை ஒட்டிய அவர்களுடைய வேலைவாய்ப்புகள் கேளிக்கைகள் சினிமாக்கள் அலுவலகங்கள் எல்லாம் மாறி இன்றைய 2000 களின் கலாச்சாரம் வேரொன்றாக மாறிக்கொண்டு இருக்கிறது என்று தான் என்னால் சொல்ல முடியும். இப்படி சென்னை குறித்த பல வகையான பார்வைகள் என்னிடம் இருக்கிறது அதை நீண்ட விளக்கமாக தான் எழுத முடியும். நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் சென்னை தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியானதொரு சென்னை நாளில் குறிப்பிடத் தகுந்த ஒரு செய்தியும் நிகழ்வும் என்னவென்றால் மக்கள் வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் அவர்கள் தனது கட்சிக்கான கொடியையும் தனது கட்சிக்கான முறையான அறிவிப்பையும் இந்த சென்னை நாளில் வரவேற்புடன் வெளியிட்டு இருக்கிறார். அவருக்கும் இந்த சென்னை தின நாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… வாழ்க சென்னை! #chennaiday #சென்னைநாள் #Madrasday #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 22-8-2024.
பிரான்சிஸ் டே 1638 ல் சென்னையை நிறுவிய தினம் இன்று.
பிரான்சிஸ் டே 1638 ல் சென்னையை நிறுவிய தினம் இன்று.
என்னைப் பொறுத்தவரை தொண்டை மண்டலத்து மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று அழைக்கத் தகுதிவாய்ந்தவரான பூவை அஷ்டாவதானம் கல்யாண சுந்தர முதலியார் அவர்களை சென்னை தினத்தில் நினைவில் கொள்ள வேண்டியவர்.
சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து கோவில்களையும் தரிசித்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் பதிகங்களாக பதிவு செய்தவர்.
திருவான்மியூர், திருவொற்றியூர், குன்றத்தூர், திருப்பாசூர், திருப்பாலை வனம், வேளச்சேரி, திருவலிதாயம்(பாடி), திருமுல்லைவாயில், பொன்னேரி, பூந்தமல்லி, ஆண்டார் குப்பம், காட்டாங்கொளத்தூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு போன்ற இன்னும் பலப்பல சென்னையைச் சுற்றியுள்ள கோவில் தலபுராணங்கள் மூலம் அன்றைய காலத்து சென்னை நிலவியல் அமைப்பினை தனது பதிகங்கள் வழியாக எழுதித் தள்ளியவர்.
1876ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுக்ரவாரம் 11:00 மணியளவில் முதன் முதலாக சென்னையில் இருந்து செங்கல்பட்டு நகருக்கு ரயில் 🚆 விட்ட போது முதன்மையாக பயணித்த போது தனது ரயில் பயணத்தை பதிவு செய்தவர் பூவை அஷ்டாவதான கல்யாண சுந்தர யதீந்திரர்.
சென்னை தினத்தில் இவரை நினைவு கொள்வோம்.
பென்னேஸ்வர மடம் கிராமத்தில் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய
பென்னேஸ்வர மடம் கிராமத்தில் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம் 1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம் பூர்வபட்சம் ரோகிணி நட்சத்திரத்திற்கு நிகரான வரலாற்று ஆண்டு 1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று பொறித்த கல்வெட்டில் மாதரசன் பட்டணம் குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வரிகளில் அமைந்த இக்கல்வெட்டுத் தமிழ் மொழியில் தமிழ் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர் கம்பண உடையார் ஆவார். .
விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்து இப் பகுதியை ஆட்சி செய்த தாமர்ல வெங்கடாத்திரி நாயக்கர், சந்திரகிரிக் கோட்டை இராஜா மகால் தர்பார் மண்டபத்தில் இருந்து, கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தன் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று சதுரமைல் பரப்பளவுள்ள ஒரு நிலத்துண்டினை வர்த்தகத்திற்காகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதியான ஃபிரான்சிஸ் டேக்கு சட்டப்படி குத்தகைக்கு வழங்க ஆகஸ்ட் 22ஆம் தேதி உத்தரவிட்டார். அந்த நாளை. சென்னை
தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது ஜனநாயகம்….⁉️
நமது ஜனநாயகம்….⁉️
151 எம்பி, எம்எல்ஏ க்கள் மீது
பெண்கள் மீது பலாத்கார வழக்குகள் உள்ளன. வாழ்க நாடு!
Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’
கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...


















