Sunday, August 14, 2016

கதைசொல்லி 30வது இதழ்

கதைசொல்லி 30வது இதழ் கிடைக்கப்பெற்ற நண்பர்கள் தொடர்புகொண்டனர். தமிழகம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, கவுஹாத்தி (அஸ்ஸாம்), திருவனந்தபுரம், ஹைதராபாத், திருப்பதி, பெங்களூர் என இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், யாழ்ப்பாணம் போன்ற  பகுதிகளிலிருந்து ஈழ சகோதரர்கள், கதைசொல்லி கிடைத்ததையும் அதை வாசித்ததையும் அகமகிழ்ந்து கூறியது பெருமையாக உள்ளது. கதைசொல்லிக்கு முடிந்தவரை சந்தா வாங்குவது இல்லை. ஏனெனில் அப்பணியை தன்னலம் இல்லாமல் நடத்தவேண்டும் என்று கி.ரா. வலியுறுத்தி சொல்வார். கதைசொல்லி மற்ற இதழை விட வித்தியாசமானது. யார் படைப்பாளிகள் என்பது முக்கியமல்ல. படைப்பின் சிறப்பும், அதனுடைய கனமும், ஏற்படுத்தும் தாக்கம்தான் அடிப்படை. அந்த வகையில் ஏகலைவர்களும் பங்கேற்று, கரம் சேர்த்து நடத்துகின்ற நாட்டுப்புற இதழ்தான் கதைசொல்லி. இதற்கு அக்கறையும் தங்கள் பணிகளையும் வழங்குகின்ற அத்தனைப் பேருக்கும் நன்றி.

No comments:

Post a Comment