Monday, August 1, 2016

"வேதாளம் புகுமே வெள்ளரிப் பூ பூக்குமே"

தகுதியற்ற, பொறுப்பற்ற, பொதுவாழ்வில் அனுபவமும், களப்பணியும் - தியாகமும் இல்லாத, மக்கள் அறியாத சில ஜென்மங்கள் அரசியலுக்கு திடீரென்று பிரவேசமாகி உடனே நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு சென்றால் இப்படித்தான் நிலைமை ஏற்படும். "வேதாளம் புகுமே வெள்ளரிப் பூ பூக்குமே" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
குடியாட்சியின் இறையான்மையை பாதுகாக்கும் நாடாளுமன்றத்தில் இப்படியும் சிலர் பங்கு பெறுகின்றனர்.
ஏனெனில், #பொதுவாழ்வில் "தகுதியே தடை" இப்போது.
ரவுடித்தனமாக கையை நீட்டி சக உறுப்பினரையே அடித்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனே திரும்பி அழைத்திருக்க வேண்டும் (recall) இப்படியும் நாடாளுமன்ற உறுப்பினர்களா?
நமது ஜனநாயகமும் கேள்விக்கூத்தாகிவிட்டதே!

1 comment:

  1. யோவ்... "வெள்ளரிப் பூ பூக்குமே" இல்ல "வெள்ளெருக்கு பூக்குமே".. இதுல blog வேற...

    ReplyDelete

#*இலங்கை அதிபரிடம்இந்திய எதை வலியுறுத்த வேண்டும்*? | *Ksr* | @*ksrvoice* |

#*இலங்கை அதிபரிடம்இந்திய எதை வலியுறுத்த வேண்டும்*? | *Ksr* | @*ksrvoice* |  #Srilanka, #IndianOcean, # #AnuraKumaraDissanayake, #china, #Tam...