Monday, August 1, 2016

எண்ணூர் கழிமுகத்தை ஆக்கிரமித்து மண் கொட்டி மூடி வருகிற காமராஜர் துறைமுக நிர்வாகம்
-------------------------------------
சுமார் நானூறு ஏக்கர் பரப்பளவில்  விரிந்திரிக்கிறது எண்ணூர் கழிவேலி. நன்னீரும் கடல் நீரும் ஒன்றாக கலக்கிற திணைப்பகுதி கழிவேலி ஆகும்.இப்பகுயானது பிரத்யேக நில அமைப்பும் உயிரின தொகுப்பும் கொண்டவை. உப்பங்கழி ஆறு என்பது நன்னீரும் கடல் நீரும் ஒன்றாக கலந்துள்ள நீரோட்டத்தை கொண்ட நீர்வழித் தடம்.

உயிர்ச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த  எண்ணூர் கழிவேலி அலையாத்திக் காடுகள் இன்று  வேருடன் பிடுங்கப்பட்டு,மண் கொட்டி மூடப்பட்டு வருகிறது.எண்ணூர் துறைமுக விரிவாக்கத்திற்காக ஆழப்படுத்துகிற பணியில் எடுக்கப்படுகிற மண், கழிவேலியை மூட பயன்படுத்தப்படுகிறது.அனல் மின் நிலையங்களின் இருந்து வெளியேற்றப்படுகிற சாம்பல் கழிவுகள்  கழிவேலியின் ஒரு பகுதியை சாம்பல் பாலைவனமாக மாற்றியுள்ளது.ஓர் உயிர்ச்சூழல் மண்டலம் படுகொலை செய்யப்பட்டுவருகிறது.

கொற்றலை ஆற்றிலும் கழிவேலி பகுதியிலும் மீன்,இறால்கள்  பிடித்துவந்த  முகத்துவாரக்குப்பம்,தாழங்குப்பம்,எண்ணூர் குப்பம்,காட்டுக் குப்பம்  மக்கள் இவ்வாக்கிரமிப்பால் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து நிற்கின்றனர்.

கழிவேலியில் மண் கொட்டப்படுவதுபோல,கொற்றலை ஆற்றில் கலக்கிற பக்கிங்காம் கால்வாயும் எண்ணூர் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக மணல் கொட்டி மூடப்பட்ட வருகிறது.

நம் கண்முன் அழிக்கப்பட்டுவருகிற  எண்ணூர் கழிமுகத்தை காக்கவும்,அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவும்,ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடி வருகிற அம்மக்களுக்கு நமது ஆதரவை பல்வேறு வகைகளில் வழங்கிவருகிறோம்.பகுதி மக்களுடன் இணைந்து மக்களின் இயக்கமான தண்ணீருக்காக பொது மேடை சார்பாக நாம் சைக்கிள் பேரணி,படகுப் பயணம்  போன்ற விழுப்புணர்வு பணிகளை  மேற்கொண்டோம்.

இத்தகைய நிலையில் ஊரில் வட்ட செயலாளராகவும்,காமராஜர் துறைமுகத்தின் அதிமுக தொழிலாளர் சங்கத்தின் தலைவருமாக உள்ள அரவிந்தனை பயன்படுத்தி  ஊரை இரண்டாகப் பிரித்து தனது காரியத்தை செய்ய முனைந்து வருகிறது துறைமுக நிர்வாகம்.ஊர்மக்களின் எதிர்ப்பை நசுக்கிட அரவிந்தனுக்கு பெருந்தொகை கைமாறியதாக கூறப்படுகிறது.இத்தகைய சூழலில் துறைமுக நிர்வாகம்,ஊர்மக்களுக்கு தையல் பயிற்சி போன்ற பயிற்சிகள் நடத்தப் போகிறது என்றும், துறைமுக ஆக்கிரமிப்பின் சார்பாகவும்  பத்திரிகை பேட்டியையும் அரவிந்தன் கொடுத்துள்ளார். இதை அறிந்த ஊர்மக்கள் அரவிந்தன் மற்றும் இதர அதிமுக பிரமுகர்களின் பிழைப்புவாத செயலை கண்டித்துள்ளனர்.
இத்தகைய நிலையில் ஊர்மக்கள் முறைகேடாக கூட்டம் போட்டு தன்னை ஊரிலிருந்து ஒதுக்குவதாக நீதிமன்றத்தில் அரவிந்தன் வழக்கும் தொடுத்துள்ளார்.

துறைமுக நிர்வாகத்தின் கழிவேலி ஆக்கிரமிப்பு எதிரான போராட்டத்தில் பிளவை ஏற்படுத்தியும்,ஊர்மக்களின் ஒற்றமையையும்  குலைத்தும்வருகிற  பகுதி அதிமுக பிரமுகர்களை கண்டித்து இன்று எண்ணூர் கழிவேலி ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படுகிற மக்களுக்கு ஆதரவாகவ அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுத்திடவேண்டும்.

No comments:

Post a Comment

நூல்கள்…தன் நிலையில்…..

இணறைய தினமணி 6-1-2025.