Tuesday, August 2, 2016

பாபநாசம் தலையணை

பாபநாசம் தலையணை;
-----------------------
தாமிரபரணி சமவெளி பகுதிக்கு வந்தவுடன் முதலில் கட்டப்பட்ட அணை தலையணை ஆகும் . இந்த அணைக்கு கோடைமேலழகியான் அணை என்று பெயர். இந்த அணைக்கட்டு மூலம் பயன் பெறும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் 325 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட மொத்தம் 2,260 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. இதே அணைக்கட்டில் உள்ள தெற்கு கோடை மேலழகியான் கால்வாயில் குளத்து பாசனம் இல்லாமல் நேரடி பாசனம் மூலம் 870 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது. தலையணையை பற்றி இந்த பகுதியில் பல செவி வழி கதை பேசப்படுகிறது. அதில் ஒன்றுதான் இது.
 20141209_114420_PerfectlyClear
ஒரு காலத்தில் பாண்டிய மன்னனுக்கும், எட்டுவீட்டு பிள்ளைமாருக்கும் சண்டை மூண்டது. அப்போது பாண்டிய மன்னன் தோற்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவன் பயந்து போய் பொதிகை மலையில் உள்ள பாண்டியன் கோட்டையில் ஒழிந்து கொண்டான். ஆனால் எட்டு வீட்டு பிள்ளைமார் அவனை விடவில்லை. எப்படியாவது பாண்டியனை அழித்து விட வேண்டும் என்று முன்னேறினர். இனி நம்மை பிடித்து விடுவார்கள் என்று அச்சம் கொண்ட பாண்டியன் இவர்களிடம் மாட்டக்கூடாது என்று தன் தலையை தானே தனது வாளால் கொய்து கொண்டான்.
அதன்பின் தாமிரபரணியில் விழுந்தான். தலைவேறு, உடல்வேறு பிரிந்த அவனின் தலை ஒதுங்கிய இடம் தலை அணை என்றும். முண்டம் (தலையில்லாத உடல்) ஒதுங்கிய இடம் முண்டந்துறை என்றும் பெயர் பெற்றது என்பர். அதே போல் இந்த பகுதியில் மற்றுமொரு கதை பேசப்படுகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு
அது சுடலை மாடசுவாமி கதை. இந்த கதையை கூறும் போது புலயன் என்னும் கேரள மந்திரவாதி சுடலை மாடனை முண்டமாக சிமிலியில் அடைத்து அனுப்பினான் என்றும். அந்த முண்டத்துடன் சிமிழ் விழுந்த இடம் முண்டந்துறை என்றழைக்கப்பட்டது என்றும் கூறுவர். ஆனால் தாமிரபரணியில் தடுப்பணையில் இது முதல் (தலை) அணை ஆகவே” தலையணை” என்ற அழைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது பலருடைய கணிப்பு. இதை “கோடை மேல் அழகியான் அணை” என்று அழைக்கப்படுவதை வைத்து பார்க்கும் போது கோடை காலத்திலும் கூட இந்த அணை மிக அழகாக தண்ணீர் நிறைந்து இருக்கும் என்பதை வைத்து இந்த அணைக்கு கோடை மேல் அழகியான் என்று பெயர் வந்து இருக்க வேண்டும் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.
About these ads

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...