காவிரி நீர் :
----------
ஆகஸ்ட்டு மாதம் பிறந்தும் மேட்டூர் அணை திறக்க முடியாத நிலையில், இவ்வாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒருபோக சம்பா சாகுபடியும் செய்ய முடியாத பேராபத்து ஏற்படுமோ என்று அச்சப்படும் நிலை உள்ளது.
ஏற்கெனவே கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்துள்ள மக்கள், சம்பா சாகுபடியையும் இழந்தால், ஊரில் குடியிருப்பதா அல்லது பிழைப்புக்கு வழி தேடி வெளியேறுவதா என்ற கேள்வியை பல இலட்சம் மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பேரிழப்பிற்குக் காரணம் காவிரித் தீர்ப்பாயம் - உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளை செயல்படுத்து மறுத்து கன்னட இனவெறியோடு செயல்படும் கர்நாடக ஆட்சியாளர்கள் மற்றும் கர்நாடகத்திற்கும் - தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தண்ணீர் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்து தமிழ்நாட்டிற்கு பாதகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள் ஆகியோர் ஆவர்.
இன்றைய நிலையில் (02.08.2016) கர்நாடகத்தில், கிருட்டிணராஜசாகர் அணையில் 98.03 அடி தண்ணீர் உள்ளது. (இதன் மொத்த உயரம் 124 அடி). கபினி அணையில் 2274.87 அடி தண்ணீர் உள்ளது (2284 அடி). ஏரங்கியில், 2757.62 அடி தண்ணீர் உள்ளது (2859). ஏமாவதியில், 2896.58 அடி தண்ணீர் உள்ளது(2922). இந்த விவரங்கள், நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 80 விழுக்காட்டு அளவிற்கு தண்ணீர் உள்ளது என்பதையேக் காட்டுகிறது.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, பற்றாக்குறை காலத்தில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதற்கும் வழிகாட்டி இருக்கிறது.
No comments:
Post a Comment