Wednesday, August 3, 2016

Central - State relations....

மொழி, இன உரிமைகளையும், போரட்டங்களையும், நிதிதொடர்பான கோரிக்களையும் சந்திப்பதற்கும், உணர்வு பூர்வமான எண்ணங்களை ஏற்பதற்கும் கூட்டாட்சி இயல் மிகவும் நுணுக்கமான முறையில் ஒரு அணுக்கமான பணியினைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
மைய அரசை மேலும் வலிமைப்படுத்துகிற  மைய நோக்கு சக்திகளுக்கும் -"Centripetal   Forces-", மையத்தை விட்டு தனித்து இயங்குகிற சக்திகளுக்கும்-"Centrifugal Forces"-, இடையே ஒருவித மென்மையான சமநிலை அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதுதான் கூட்டாட்சி இயங்கியலின்--"Dialectic Federalism"--அடிப்படையாகும்.  

இன்றைய இந்திய மைய அரசை வலிமைப்படுத்துகிற மைய நோக்கு சக்திகளாக  பன்னாட்டு-உள்நாட்டு பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. 

இவர்கள்தான் மாநில அதிகாரங்களை பறித்து மைய அரசிடம் கொடுப்பதற்கு டெல்லியிடம் தொடர் அழுத்தங்களை கொடுக்கின்றனர். மாநிலத்தின் விற்பனை வரியைப்பறித்தனர். 

வாட் வரியை மைய அரசு விதிக்க தொடங்கியது. மாநிலங்களின் வரிவருவாய் குறைந்தது. வாட் வரியால் ஏற்பப்பட்ட புதிய முதலீடுகள் எவ்வளவு? பெருகிய வேலை வாய்ப்புகள் எவ்வளவு? 
புள்ளிவிபரங்களை நடுவண் அரசு அளிக்கமுடியுமா? 

தற்போது சரக்கு சேவை வரியை நடுவண் அரசு கொண்டுவதற்கு துடியாய் துடிக்கிறது. ஏன்? ஏன்? 

இந்த அவசரத்தை மாநிலங்களுக்கு இடையே  காணப்படுகிற நதி நீர் சிக்கல்களை தீர்ப்பதற்கு நடுவண்அரசு ஏன் காட்டக்கூடாது.  இங்கு விவசாயிகள்! அங்கு முதலாளிகள். ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு! ஒரு கண்ணுக்கு வெண்ணெய்! 

மாநிலங்களையும், மக்களையும் ஏமாற்றி , கூட்டாட்சி இயலையும், ஜனநாயகத்தையும் கேவலப்படுத்தி,  முதலாளித்துவ தரகராக நடுவண் அரசு செயல்படுகிறதோ......

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...