*GST IMPACT ON VARIOUS SECTOR.*
1) *BANKS* - Current service tax 15% now after GST 18% 👉🏽Negative.
2) *CONSUMER STAPLES* current tax rate 22% know after GST it's 18% .
👉🏽Positive for - Asian paints,Dabur,HUL,EMAMI
👉🏽NEGATIVE for ITC & UNITED BEVERIES.
3) *CONSUMER DISCRETIONARY* current 15% after GST 18%
NEGATIVE
4) *MEDIA* - current Tax 15% service tax and 7% entertainment Tax by State's know After GST it will be 18%
POSITIVE
5) *TELECOM* current Tax 15% After GST 18% may see marginal dip in consumption as tax rise from 15% to 18%
NEGATIVE
6) *AUTO INDUSTRIES* current Tax 27% after GST it will be 18% .
POSITIVE
7) *METALS* - current TAX 18% after GST 18% no major impact
8) *CEMENT* - current Tax 27% altogether after GST it will be 18%
POSITIVE.
9) *PHARMA* - current Tax 15% after GST it will be 18% .
NEGATIVE
10) *REAL ESTATE* - 15% to 16% Stamp duty, Current duty approx 7%. NEGATIVE for real estates.
11) *TRANSPORTATION* - majorly benefits to logistics sector no impact of GST
POSITIVE
#GST மசோதா அப்புடின்னா என்ன? இந்த மசோதா வந்தா நமக்கு நல்லதா? ஏன் தமிழ்நாடு மட்டும் இவ்வளவு அழுத்தமா எதிர்க்குது? வாங்க தெரிஞ்சுக்கலாம்...
GST மசோதானா என்ன?
GST என்பதன் விரிவாக்கம் Goods and service Tax. அதாவது இந்தியாவில் உற்பத்தியாகும் மூலப்பொருள்களுக்கும், விற்பனையாகும் பொருள்களுக்கும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விதமான Tax மட்டுமே விதிக்கப்படும், இதன் மூலம் அனைத்து பொருள்களின் விலையும் நாடு முழுமைக்கும் ஒரேமாதிரியாக இருக்கும்.
தற்போது மாநில அரசுகள் விதிக்கும் Taxes (Octroi, VAT, Entry tax and Luxury tax) இந்த மசோதா கொண்டுவரப்பட்டால் தடை செய்யப்படும். வரி விதிக்கும் முழு அதிகாரமும் மத்திய அரசிடம் மட்டுமே இருக்கும்.
GST மசோதாவினால் மக்களுக்கு என்ன பயன்?
GST மசோதா கொண்டுவரப்பட்டால் பொருள்களின் விலை கண்டிப்பாக குறையும். எப்படி என்று கீழே பார்ப்போம்.
ஒரு பொருள் விற்பனை கூடத்திற்கு வருவதற்கு அது மூன்று நிலைகளை கடந்து வரவேண்டும்.
> உற்பத்தியாளர்
> மொத்த கொள்முதல் செய்பவர்
> விற்பனையாளர்
ஒரு பொம்மையின் உற்பத்தி விலை ரூ.100 என்று வைத்துக்கொள்வோம். அதற்கு அவர் அரசுக்கு கொடுக்க வேண்டிய வரி (10%) (எடுத்துக்காட்டு) என்றால் அவர் செலுத்தவேண்டிய வரி ரூ10. எனவே அவர் மொத்த கொள்முதல் செய்பவரிடம் ரூ 110 க்கு விற்பனை செய்வார்.
மொத்த கொள்முதல் செய்பவர் வாங்கிய விலையை விட சற்று லாபம் வைத்து அந்த பொம்மையை ரூ 150 விலை வைத்து விற்கிறார் என்றால் அவர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி (10%) ரூ 15. எனவே அவர் பொம்மையின் விலையை ரூ 165 க்கு விற்பனையாளரிடம் கொடுப்பார்.
ரூ 165 க்கு வாங்கும் பொம்மையை விற்பனையாளர் அதன் விலையில் சிறிது லாபம் சேர்த்து ரூ 200 க்கு விற்பனை செய்தால் அவர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி (10%) ரூ 20. ஆக அந்த பொம்மை நுகர்வோரிடம் விற்பனை செய்யப்படும் விலை ரூ220.
விற்பனையாளர் செலுத்திய வரி : ரு 10
மொத்த கொள்முதல் செய்பவர் வரி : ரூ 15
விற்பனையாளர் செலுத்திய வரி : 20
பொம்மையின் மொத்த வரி : ரூ 45
பொம்மையின் விலை :ரூ 220
இதுவே GST மசோதா கொண்டுவந்தால் எப்படி இருக்கும். ஒரு பொம்மையின் உற்பத்தி விலை ரூ.100 என்று வைத்துக்கொள்வோம். அதற்கு அவர் அரசுக்கு கொடுக்கவேண்டிய வரி (10%)(எடுத்துக்காட்டு) என்றால் அவர் செலுத்தவேண்டிய வரி ரூ10. எனவே அவர் மொத்த கொள்முதல் செய்பவரிடம் ரூ 110 க்கு விற்பனை செய்வார். [இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை]
மொத்த கொள்முதல் செய்பவர் வாங்கிய விலையை விட சற்று லாபம் வைத்து அந்த பொம்மையை ரூ 150 விலை வைத்து விற்கிறார் என்றால் அவர் செலுத்த வேண்டிய வரி பொருளின் மொத்த விலைக்கும் அல்ல. மாறாக அவர் உயர்த்திய விலைக்கு மட்டுமே, அதாவது ரூ50 க்கு மட்டுமே வரி 10% வாரியாக ரூ 5 கட்ட வேண்டும்.
ஆக இந்த நிலையில் பொருளின் விலை : ரூ 155
இதைப்போலவே விற்பனையாளரும் அவர் உயர்த்திய விலை ரூ 35 க்கு மட்டுமே வாரியாக (10%) ரூ3.50 பைசா காட்டுவார்.
இந்த நிலையில் பொருளின் விலை : ரூ190.50
விற்பனையாளர் செலுத்திய வரி : ரூ 10
மொத்த கொள்முதல் செய்பவர் வரி : ரூ5
விற்பனையாளர் செலுத்திய வரி : ரூ 3.50
பொம்மையின் மொத்த வரி : ரூ 18.50
பொம்மையின் விலை :ரூ 190.50 மட்டுமே.
இதன் மூலம் நுகர்வோருக்கு விலை குறைவாக பொருட்கள் கிடைக்கும். அதன் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
[குறிப்பு: உற்பத்தியாளர் தான் செலுத்திய வரிக்கான ரசீதை கண்டிப்பாக மொத்த கொள்முதல் செய்பவரிடம் கொடுக்க வேண்டும். அவர் அந்த ரசீதை காட்டினால் மட்டுமே வரி குறைக்கப்படும். இதைப் போன்றே விற்பனையாளரும் செய்ய வேண்டும்]
நுகர்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த மசோதாவை தமிழக அரசு எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தில் உற்பத்தியாகும் 95% பொருள்களே மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. எனவே அந்த பொருள்களுக்கு கிடைக்கும் வரி வருவாய் அனைத்தும் உற்பத்தியே செய்யாத மற்ற மாநிலங்களுக்கு போய் சேரும். தமிழக அரசுக்கு தற்போது கிடைக்கும் வருவாய் முற்றிலும் பாதிக்கப்படும்.
மத்திய அரசு இந்த இழப்பிற்கு ஈடாக (முதல் ஆண்டு 100% இரண்டாம் ஆண்டு 75% மூன்றாம் ஆண்டு 50%, .....) அந்த அந்த மாநிலங்களுக்கு தருவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் மிகப்பெரிய லாபம் தராத அம்மா உணவகம் போன்ற திட்டங்களை நடத்திட தமிழக அரசுக்கு இது போதாது என்பதே முக்கிய காரணம். மேலும் வரி இழப்பை 100% தொடர்ந்து 5 ஆண்டுகள் தந்தால் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment