சீர்காழி;
சீர்காழியின் வரலாறு என்னவென்று கேட்டால் எல்லோரும் சொல்வது திருஞானசம்பந்தர் பால் குடித்த ஊர் .ஆனால் உண்மையில் இந்த ஊர் கழுமலம்(சீர்காழி) சோழர்களின் தலைநகராக விளங்கியது உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆண்ட ஊர் ..பின் #சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கும் நெய்தலங்கானல் (நெய்தல் வாசல்) தலைநகரானது . இந்த ஊரை பற்றி அயல்நாட்டு பயணியான பிளைனியின் குறிப்பு என்ன சொல்கிறதென்றால் "இந்த நாட்டில் மற்றொரு நகரமும் இருக்கிறது. அதன் பெயர் கதுமுலா என்பதாகும். அந்நகரம் கடற்கரையில் உள்ள பட்டினமாக விளங்குவதோடு, பல நாட்டு மக்கள் வணிகம் செய்யும் இடமாகவும் விளங்குகிறது. மற்றும், ஐந்து நதிகள் ஒன்றுகூடிக் கடலில் விழும் இடத்தில் உள்ளது. அதன் அரசினிடம் வலிமை வாய்ந்த 1600 யானைப் படைகள் உள்ளன. 150 ஆயிரம் காலாட்படைகளும், 5000 குதிரைகளும் உள்ளன” பிளைனியின் காலம் கி.பி.23-79 . கதுமலா என்பது கழுமலமாகிய சீர்காழியைக் குறிக்கும்....2000 வருடங்களுக்கு முன்னாடியே 1.5 லட்சம் காலாட்படையை நிறுத்தி வைத்திருந்த ஊர் .
No comments:
Post a Comment