தமிழகம் அறியத் தவறிய திராவிட இயக்கத்தின் பெண்மணியும், கமலாதேவி சட்டோபாத்யாயாவும்
-------------------------------------
திராவிட இயக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் பெண்கள் இணைய யோசித்த நேரத்தில் முதல் பெண்மணியாக அலமேலு மங்கத் தாயாரம்மாள் என்பவர் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் பொது வாழ்வு பணியில் அடியெடுத்து வைத்தவர். அவரைப் பற்றியதான குறிப்புகளும் செய்திகளும் சரியாக தெரியவில்லை. அவரை யாரும் கொண்டாடவும் இல்லை என்பது வருத்தமான செய்தியும் கூட.
கமலா சட்டோபாத்தியாயா (Kamaladevi Chattopadhyay) 3 ஏப்ரல் 1903 – 29 அக்டோபர் 1988). இவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக நினைவு கூறப்படுகிறார். மேலும் இந்திய கைவினைப் பொருள்கள், கைத்தறி வளர்ச்சி, சுதந்திர இந்தியாவில் நாடக மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருந்தார். கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும், இந்திய பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்தவர். சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவர், பாரதீய நாட்டிய சங்கத்தின் தலைவர், அகில இந்திய கைவினைஞர்கள் வாரியத் தலைவர், யுனெஸ்கோவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர்.
இவருக்கு 1917இல், 14 வயதான போது திருமணம் நடந்தது ஆனால் இரண்டாண்டுகளில் கணவர் இறந்தார். மங்களூரில் பிறந்த இவர் விதவையான பின் தீண்டப்படாதவராக ஒதுக்கி வைக்கப்பட்டார். சென்னைக்கு வந்தால் தன் வாழ்க்கையில் புணர்ஜென்மம் கிடைக்கும் என்ற நிலையில் அன்றைய மெட்ராஸுக்கு தைரியமாக தனிமனுஷியாக வந்தார். அப்போது அலமேலுமங்கத் தாயாரம்மாள் இவரை சந்தித்ததுண்டு. இவரிடம் கல்வி பயிலுங்கள், பொது வாழ்க்கையில் ஈடுபடுங்கள், மறுமணம் செய்து கொள்ளுங்கள் என்று அலமேலுமங்கத் தாயாரம்மாள் வலியுறுத்திச் சொன்னது உண்டு.
சென்னை ராணி மேரி கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவரான சுஹாசினி சட்டோபாத்யாவின் இளைய சகோதரி சரோஜினி நாயுடு, அறிமுகமானார். பின்னர் தங்களுடைய சகோதரனான அரிந்திரநாத் சட்டோபாத்யாவை கமலாதேவிக்கு அறிமுகப்படுத்தினார். அவர் நன்கு அறியப்பட்ட ஒரு கவிஞர் - எழுத்தாளர், நடிகர் போன்ற பன்முகத்தன்மை உடையவராக இருந்தார். கலைகளில் ஈடுபாடு உடைய இருவருக்கும் நல்ல புரிதல் உண்டாயிற்று. கமலாதேவிக்கு இருபது வயது இருக்கும்போது அரிந்திரநாத் உடன் திருமணம் நடந்தது. இந்த விதவை திருமணத்திற்கு எதிர்ப்பு சமூகத்தில் கடுமையாக இருந்தது. இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. சென்னை ராஜதாணி சட்டமன்றத்திற்கு 1926ல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது மாறுபட்ட சில சிந்தனைகள் இருந்தாலும் இவர் வெற்றி பெற வேண்டுமென்று அலமேலுமங்கத் தாயாரம்மாள் பணிகளை ஆற்றியதுண்டு.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-08-2019.
No comments:
Post a Comment