The Alchemist – ரசவாதி
-----------------------------
பாலோ கொயலோவின் "The Alchemist" படைப்பை சகோதரி நாகலட்சுமி சண்முகம் "ரசவாதி" என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் 8.5 கோடி பிரதிகள் விற்று சாதனை படைத்த இந்த நூல் செம்மறி ஆடு மேய்க்கும் ஸ்பெயின் சிறுவன் எகிப்துக்கு வந்து பிரமிடுகளில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷத்தை தேடி வருகிறார். எகிப்து சுடுமணல் பாலை வழியாக பயணிக்கின்றார். இந்த பயணத்தில் அவனுக்கு ஏற்படும் தடைகளும், அதை கடந்து செல்வதின் மனிதாபிமானத்தையும், யதார்த்தத்தையும் நம்மை அழைத்து செல்கிறது.
“அவனுடைய செம்மறியாடுகள் அதைவிட அதிக முக்கியமான ஒரு விடயத்தை அவனக்குக் கற்றுக் கொடுத்திருந்தன. எல்லோரும் புரிந்து கொள்ளுகின்ற ஒரு மொழி இவ்வுலகில் இருந்தது என்பது தான் அது. அந்தப் படிகக் கடையில் வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக அவன் முயற்சித்துக் கொண்டிருந்த காலம் நெடுகிலும் அவன் அதைப் பயன்படுத்தியிருந்தான்.
உற்சாகத்தின் மொழி அது. அன்பு மற்றும் குறிக்கோளின் மூலம் சாதிக்க முடிகின்றவற்றைப் பற்றிய மொழி அது. டேஞ்சியர் நகரம் இனியும் அந்நியமானதாக அவனுக்குத் தோன்றவில்லை. தான் இந்நகரத்தை வெற்றி கொண்டிருந்ததைப்போல இவ்வுலகத்தையும் தன்னால் வெற்றி கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான்.
நீ எதையேனும் அடைய விரும்பும்போது, இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் உனக்கு உதவுவதற்காகக் காய்களை உனக்குச் சாதகமாக நகர்த்தும் என்று அந்த முதிய அரசர் கூறியிருந்ததும் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.”
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-08-2019
No comments:
Post a Comment