———————————————————-
பிரனாப் முகர்ஜியின் வாழ்க்கை தொகுப்பின் இறுதி பாகத்தில் தான் குடியரசு தலைவராக இருந்த 2012 முதல் 2017 வரை நடந்த நிகழ்வுகளை சொல்லி செல்கின்றார்.
அதில் 106-வது பக்கத்தில் ஈழப் பிரச்சினைப் பற்றியும் விடுதலைப் புலிகள் பிரபாகரன் குறித்தும் ‘working with srilanka’ என்ற தலைப்பில் பக்கம் 105 முதல்110 வரை எழுதியுள்ளார். தந்தை செல்வா காலத்தில் கடந்த 1976 மே-யில் தனிநாடே தீர்வு என்று நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் படி தமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை இலங்கையில் முன்வைத்தனர்.
அதற்கு பின் நடந்த பிரச்சினைகளிலும் அங்கு நடந்த தமிழ் இன அழிப்பும் நாம் அறிந்ததே. பிரனாப் முகர்ஜி 1995 ல் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபொழுது; பிரதமர் நரசிம்மராவ், இலங்கை அதிபர் குமாரதுங்கா வேலுபிள்ளை பிரபாகரனை நாடு கடத்தி இலங்கையிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறிய விடயங்களை எல்லாம் பிரனாப் முகர்ஜி குறிப்பிடுகிறார். இந்திரா காந்தி காலத்திற்கு பின் நிலைப்பாடுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருந்ததென்று என்று வரலாற்று செய்திகள்.
ராஜீவ் - ஜெயவர்த்னா இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13 வது திருத்தம் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறார். ஓரிடத்தில் பிரனாப் ‘விடுதலைப் புலிகள் tactics’என்று குறிப்பிடுகின்றார் அது ஏற்புடையதல்ல அது தவறான வேதனையான கருத்தாகும். தமிழகத்திலிருந்து ஈழ மக்கள் தன் தொப்புள் கொடி உறவுகள் என்று மனபூவர்மாக உணர்ந்துள்ளார் என்பதை
பிரனாப் மறைத்து விட்டார்.
முள்ளிவாய்க்கால் போரின் போது பிரனாப் முகர்ஜி, சிவசங்கரமேனன், எம்.கே.நாராயணன் ஆகியோர் தான் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் ஒப்புதலோடு இலங்கை அரசுடன் அங்கு சில முறை சென்று பேசினார்கள்.2009ல் முள்ளிக்வாய்க்கால் போர் அப்போது கடுமையாக உக்கரமாக இருந்தது. இந்திய இலங்கைக்கு உதவியாகவும் இருந்தது.
அப்போது, பிரனாப் உள்ளிட்ட இவர்கள் இலங்கை அரசிடம் என்ன பேசினார்கள் என்று இறுதி தொகுப்பில் ஏன் விளக்கமாக இவர் சொல்லவில்லை என்று தெரியவில்லை. ராஜபக்சேவுடன் நள்ளிரவு தாண்டி விடியக்காலை வரை இது குறித்து பேசி என்ன பயனானது என்றும் தெரியவில்லை. 1.50 லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டர்கள். பிரபாகரன், விடுதலைப்புலி தலைவர்களுக்கு முடிவு என்ன ஆனது என்று புலப்படவில்லை. தமிழர்களின் அன்று சிந்திய கண்ணீரையும்,துயரங்களையும் ஏன் பிரனாப் முகர்ஜி சுயசரிதையில் சொல்லவில்லை?. சொல்ல விரும்பவில்லையா?
ராஜபக்சேவுடன் விடிய விடிய பேசியதை சென்னைக்கு வந்து பிரனாப் முதல்வர் கலைஞரை சந்தித்து பேசினார் . தலைவர் கலைஞர்க்கு இலங்கையிலிருந்து என்ன செய்தி கொண்டுவந்தார் என்று பிரனாப் முகர்ஜி இந்நூலில் சொல்லவில்லை.
தன் சுயசரிதையில் பிரனாப் 2009 முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன..? தமிழர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்..? என்பதை எளிதாக கடந்திருப்பது ஏற்புடையதல்ல. கடந்த நான்கு தொகுப்பிலும் நேர்மையான கருத்துக்களை சொன்னவர், முள்ளிவாய்க்கால் போரை மட்டும் பிரனாப் அமைதி காப்பது என்பது வரலாற்றுப் பிழையாகும், ஏறத்தாழ ஆறு பக்கங்களுக்கு இலங்கை பிரச்சினையை எழுதியவர் முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரங்களை ஏன் குறிப்பிடவில்லை என்பது நமது விடயமாகும்.
அவர் மறைவுக்கு பிறகு இறுதித் தொகுப்பு வெளிவந்துள்ளது, இதை சுட்டிக்காட்ட வேண்டியது ஈழத்தமிழர் பிரச்சினையில்களப்பணியாற்றிவர்களின் கடமையும் கூட. முள்ளிவாய்க்கால் போர் நடந்தது 2009-ல், ஆனால் பிரனாப் முகர்ஜி என்ன சொல்கிறார் என்றால் போர் நடந்தது 2010 என்று பக்கம் 108ல் குறிப்பிடுகிறார். அதற்கு அடுத்து இலங்கையில் மறைமுகமாக பயங்கரவாதத்தை முழுமையாக அழித்த சிங்கள அரசுக்கு இந்தியா உதவியும் செய்துள்ளது என்று தெளிவாக சொல்கிறார். அங்கே பயங்கரவாதிகள் என்று தவறாக அழைக்கப்பட்டது. தமிழர்களைத்தானே…
பிரனாப் முகர்ஜி இப்படி குறிப்பிடு இருக்கிறார் என்பது வேதனையான விடயம்…

No comments:
Post a Comment