Thursday, February 4, 2021

#மாதவ_சிங்_சோலான்கி_மறைவு



மத்திய அமைச்சரான இவர்,இந்தியாவில் இருந்து யாரோ கடிதம் கொடுக்கச் சொன்னார் என்று வெளிநாட்டில் முகவரியில் ஒரு தபால்காரரை போல் பட்டுவாடா செய்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
———————————————————-
மாதவ சிங் சோலான்கி மறைவு, அவருக்கு வயது 93. நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் குஜராத் முதல்வர், நரசிம்மராவ் காலத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், இரண்டு முறை மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஒன்றுபட்ட பம்பாய் மாநிலத்தின் 1957ல் முதன்முறையாக் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு குஜராத் பிரிந்தவுடன் அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர். அவசர நிலை காலத்தில் குஜராத் மாநில காங்கிரஸ்தலைவர்என்றபொறுப்புகளில் இருந்தவர். இவர் முதல்வராக இருந்தபொழுது குஜராத்தில் மதிய உணவு திட்டத்தைப் பள்ளிகளில் துவங்கி வைத்தார்.

நல்ல வாசிப்பாளர், ஈழப் பிரச்சினைகள் குறித்து ராஜீவ் படுகொலை நடந்த பின் ஈழ சகோதரர்களை இவர் ஒரு முறை சந்தித்தது உண்டு.
இவர் வழக்கறிஞராகவும் இருந்தார். பத்திரிக்கையாளர், பேராசிரியர் என்ற பணிகளிலும் இருந்தார். இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபொழுது போபர்ஸ் பிரச்சினை, போபால் விஷ வாயு கசிவு போன்ற பிரச்சினைகள் கடுமையாக எதிரொளித்தது. மத்திய அமைச்சரான இவர் இந்தியாவில் இருந்து யாரோ கடிதம் கொடுக்கச் சொன்னார் என்று வெளிநாட்டில் முகவரியில் ஒரு தபால்காரரை போல் பட்டுவாடா செய்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
10-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...