Thursday, February 4, 2021

#பத்மஸ்ரீ_பானுமதி


——————————
பத்மஸ்ரீ நடிகை பானுமதி திரை நட்சத்திரங்களில் சற்று வித்தியாசப்பட்டவர். எதிலும் நேர்மையான அணுகுமுறை கொண்டவர் நடிகை பானுமதி. அவருக்கு டப்பிங் செய்வதே கிடையாது. அவருடைய திரை கானங்களும் இனிமையாக இருக்கும். வாசிப்பாளர், எழுத்தாளர் என்ற பல முகங்களை கொண்டவர்.
ஒரு முறை விளம்பரப் படத்தில் நடிக்கவேண்டுமென்று குளியல் சோப் நிறுவனம் அவரை அணுகியபோது அந்த சோப்பை நான் பயன்படுத்தியது கிடையாது, அந்த விளம்பரத்தில் நடித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று அந்த நிறுவனத்திடம் முகத்திற்கு நேராக சொல்லிவிட்டார். தனக்கு வருவாய் கிடைக்கும் பணியாக இருந்தாலும் அதிலும் நேர்மை இருக்கவேண்டுமென்று நினைப்பவர் பானுமதி. என் மனைவியின் குடும்பத்திற்கு பானுமதி குடும்பம் அறிமுகம் உண்டு. ஒரு முறையோ இருமுறையோ 1980-களில் தி நகர் வைத்தியராமய்யர் தெருவிலிருந்த அவர் இல்லத்திற்கு சென்று சந்தித்தது உண்டு. பானுமதி நடிப்பில் ஒரு மிடுக்கும் ஒரு தனித்தன்மையும் இருக்கும். அவர் வசனக்குரல் அலாதியாக தெரியும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஏன் இந்தி திரைப்படங்களில் திரைத்தாரகியாக ஜொலித்தார்.

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
10-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...