Thursday, February 4, 2021

#பெரியவர்_டி_எம்_காளியண்ணன்_வயது101


———————————————————
கொங்கு வட்டாரத்தில் முக்கிய அரசியல் புள்ளி ஆவார். அவருக்கு இன்று வயது 101, நீண்ட நெடுங்கால சிறப்பான வாழ்வை பெற்ற எளிமையான மனிதர். இந்திய அரசியல் சாசனம் தயாரித்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர். நாடாளுமன்றம், தமிழக சட்டமன்றம் மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்தார். சேலம் மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக இருந்தார்.
அவருடைய பொது வாழ்வில் கொள்ளிமலை சாலை அமைக்கவும், மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு கரை முதல் மேற்கு கரை வரையுள்ள 45 ஆயிரம் ஏக்கர் நீர் பாசானம் வாய்காலை அமைத்து விவசாயிகளுக்கு அர்பணித்தார். இன்றைக்கு பள்ளிப்பாளையம் பவானி பாலத்தை அனைவரும் பார்க்கலாம். அது உருவாக காரணமானவர். மோகனூர் சர்க்கரை ஆலை, சங்ககிரி சிமெண்ட் ஆலை, பள்ளிப்பாளையம் ஷேசாய் காகித ஆலை நிறுவ உதவியாக இருந்தவர். எம்.ஏ., பிகாம்., பட்டம் பெற்றவர்.

இன்றைக்கும் திருச்செங்கோட்டில் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். காங்கிரசில் நாங்கள் எல்லாம் இருந்தபொழுது கொங்கு வட்டாரத்தில் பி.ஜி.கருத்திருமன், காளியண்ணன், பவானி சாகர் அணைக் கட்ட காரணமாக இருந்த ஈஸ்வரன், சர்க்கரை மன்றாடியார்,ஈரோடு செங்கோட்டு வேலன், சேனாதிபதி கவுண்டர் போன்றப் பெரியவர்களுடன் எல்லாம் பழகி அன்பைப் பெற்றது பெரும் பேராகும்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
10-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...