———————————————————-
"Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them."
-William Shakespeare.
ஆனால் இன்றைய நிலை..........
வரலாற்றை அவசரப்பட்டு படைக்கமுடியாது .திட்டமிட்டும் உருவாக்கமுடியாது. ஆனால் தேர்தலில் ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஊடகம், செய்தித்தாள்கள் தான் சார்ந்த சாதி,உறவுகள் நெருக்கத்தினால் மக்கள் கவனத்திற்கும் வேண்டுமானால் வரலாம். அது ஒரு நீர்குமுழி போல அழிக்கப்பட்டுவிடும்.
பேசப்படுகின்ற சரித்திரம் தான் முக்கியம். ஊழல் செய்துவிட்டு பாசாங்கான நேர்மையாக வேடம் போட்டு காசு கொடுத்து பதவிக்கு வருவது, தான் சார்ந்தசாதி, உறவுகள் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் நான்கு காலம் ஐந்து காலம் என செய்திகளில் இடம்பிடிப்பதெல்லாம் மெய்யானது அல்ல வெறும் ஊடக பிம்பங்களே என்பது அனைவருடைய மனசாட்சிக்கும் தெரியும். அவர்களை சில காலம் கொண்டாடபடலாம் நிச்சயமாக சரித்திரப் புருசர்களாக மாறமுடியாது. இதில் என்ன பெருமை இருக்கிறது என்று தெரியாமல் சிலரை உயர்த்திப் பிடிக்கின்றனர். காற்றடித்த பாலுன் போல சில காலம் பறக்கலாம்.
இவை காட்சி பிழைகள்.....
அரசியல் தளத்தில் இருப்பவர் தவறு செய்ய இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று - திருட்டுத்தனமாக பயந்து செய்யும் தவறு. இன்னொன்று - தலைவரே செய்கிறாரே, நாம் செய்தால் என்ன என்று பயமும், வெட்கமும் இல்லாமல் செய்யும் தவறு. நாணயமான தலைவரால் தான் மற்றவர்கள் தவறு செய்வதைத் தடுக்க முடியும். அவருக்கு அஞ்சி, நாணயமற்றவர்கள் கூட நாணயமாக இருப்பார்கள். லஞ்ச லாவண்யம் இவ்வளவு மலிவாக, ஊழல் தலைமைதான் காரணம். வெட்கமில்லாத தலைவர்களால்தான், கூச்சமில்லாமல் ஊழல் செய்வது மலிந்துவிட்டது. சிறையிலிருந்து தலையில் முக்காடு போட்டு வெளிவர வேண்டிய லஞ்ச ஊழல் பேர்வழிகளை, பெருங்கூட்டம் திரண்டு மேளதாளத்துடன் மாலையிட்டு வரவேற்பளிக்கிறது. கூச்சமற்ற தலைமையால் லஞ்சம் மலிவாகி, கூச்சப்படுபவர்கள் கூட வெட்கமற்றவர்களாகிறார்கள். இந்த நாற்றமெடுத்த சூழலில், புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் கூட நாணயமாக இருப்பது கடினம்.
புதிதாக பொது வாழ்வக்கு வருபவர்களும் கூட ‘எதையோ’ தேடித் தான் வருகிறார்கள். இதையெல்லாம் மாற்றப் பயிற்சி தேவை. கல்வியே நாணயத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை. நாட்டுப்பற்று, சாதாரண மக்கள் மீது அன்பு போன்ற நற்குணங்களின் மூலம்தான் அரசியலில் சேவை மனப்பான்மை வரும், வளரும். கேடு கெட்டிருக்கும் அரசியலை தலைகீழாக மாற்றி, போட, நாணயமான தலைமை தேவை.
•••••
பொது வெளியில் நாட்டில் நல்லது நடந்தால் சொந்தம் கொண்டாடுவது , நெடுங்காலமாக தீர்க்கப்படாத பிரச்சனையென்றால் அதற்கு தாங்கள் பொறுப்பு இல்லை என்பது.

No comments:
Post a Comment