———————————————————-
இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு மாநிலங்களை இணைத்து தனி பிராந்தியமாக அமைத்து புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்று இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் தமிழ் தேச கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து 21 பக்கங்கள் அடங்கிய திட்ட அறிக்கையோடு இணைத்து மனுவையும் அமைச்சர் ஜெய்சங்கரிடம் வழங்கியுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் வாழ்விடமான வடக்கு கிழக்கு அமைந்தால்தான் தீர்வுக்கு முன்னெடுப்பாக இருக்கும் என்று இவர்கள் கூறியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட இன மக்கள் கூட்டத்திற்குள்ளாக சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுமானால் அவர்கள் சர்தேச சட்டத்தின் படி வெளிப்புற சுயநிர்ணய உரிமை கோர உரிமை படைத்தவர்கள் என்ற நியாயத்தையும் எடுத்துக்காட்டியுள்ளனர், இந்த விடயத்திற்க்கு காலமும் சூழ்நிலையும் தான் பதில் சொல்லவேண்டும்.என்ன சொல்ல?

No comments:
Post a Comment