———————————
தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. பொங்கலுக்கு தேவையான வெல்லம் உற்பத்தி இந்த காலக்கட்டங்களில் அதிகரிக்கும். குறிப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில் குன்னூர், கிருஷ்ணன் கோவில், மம்சாபுரம், வலையப்பட்டி, எரிச்சநத்தம் நடையனேரி, செண்பகத்தோப்பு, இடையான்குளம் போன்ற இடங்களில் மட்டுமல்லாமல் மதுரை மாவட்டம் மேலூர் சோழவந்தான் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி கரும்புச் சாற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் 6ஆம் நூற்றாண்டில் இருந்து மார்கழி மாதம் பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாளுக்குப் பிடித்த இந்த சர்க்கரைப் பொங்கல் மரபு ரீதியாக அனைவருக்கும் பிடித்து விட்டது. இதனுடைய நீட்சி தான் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா.
இங்கு தயாரிக்கப்படும் இந்த வெல்லம் ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம். அதேபோல மஞ்சள் செடிகளும் கரும்பு ஈரோடு, ஸ்ரீவில்லிப்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது. மஞ்சள் செடியினைப் பற்றி ஒரு செய்தினை சொல்ல வேண்டும். பாளையங்கோட்டை சிறைவாசிகள் அங்குள்ள நிலத்தில் மஞ்சள் பயிரிட்டு பொங்கல் காலத்தில் விற்பனைக்கு வெளியே அனுப்புவதெல்லாம் அங்குள்ள சிறைக்கைதிகளை சந்திக்கச் செல்லும்போது என்னிடம் கூறுவதுண்டு.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
17.01.2021

No comments:
Post a Comment