Tuesday, February 9, 2021


—————————-
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இளவட்டக்கல்லை தூக்கி சுமக்கும் பின பக்கமாக அலக்காக வீச வேண்டும். வீரவிளையாட்டு நடந்ததுண்டு. பொங்கல் காலத்தில் நடப்பதுண்டு.இளவட்டக்கல்லை தூக்கும் இளைஞனுக்கே பெண்ணை மணம் முடித்து தரும் வழக்கம் இருந்தது.
அன்று தமிழரின் உடல் பலத்துக்கும், வீரத்திற்கும் சாட்சியாக திகழ்ந்த இந்த இளவட்டக்கற்கள் இன்று பல ஊர்களில் பாதியளவு மண்ணியிலும் சிமெண்ட் ரோட்டு ஓரங்களிலும் புதைந்து கிடக்கின்றன.

இன்று ஆண்களும் பெண்களும் கணினி, செல்போனில் மூழ்கி இருப்பதால் பல ஊர்களில் இளவட்டக்கல்லை கிணறுகளில் வீசிய சம்பவங்களும் நடந்துள்ளது. சிலர் பழங்கால வரலாறுகளை பேசி அந்தக் கற்களை பாதுகாத்து வருகின்றனர்.
இளவட்டக்கல் 50 கிலோ முதல் 100 கிலோ வரை எடை கொண்டதாகவும் முழு உருண்டையாக வழுவழுவென்று எந்த பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவம் கொண்டதாகவும் இருக்கும். இளவட்டக்கல்லுக்கு கல்யாணக்கல் என்ற சிறப்பு பெயரும் உண்டு.புது மாப்பிள்ளை மாமனார் வீட்டில் விருந்துக்கு பின் இந்த கல்லை தூக்க வேண்டும்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
17.01.2021.

No comments:

Post a Comment

மூடி மறைக்க முடியாத யதார்த்தம்....

  மூடி மறைக்க முடியாத யதார்த்தம்.... கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும்...