Tuesday, February 9, 2021

#எம்ஜிஆர்


——————-
இன்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள். சற்றுப் பின்னோக்கி பார்க்கின்றேன்.
அப்போது நான் திமுகவில் இல்லை.கடந்த 1982-83 காலகட்டங்களில் பிரபாகரன் பாண்டி பஜார் சம்பவம் நடந்த பின் பிரபாகரனோடு ராமாபுரம் தோட்டத்திற்கு சென்றது. அவரும் ஜானகி அம்மையாரும் அளித்த மதிய விருந்தினை அவரோடு உண்டு களித்தது.
அவர் வக்கீல் என்று என்னை எம்ஜிஆர். அழைப்பார்.
அதே காலகட்டத்தில் 1984-ல் அப்போது ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினர். ஜெயலலிதா பிரபாகரனை சந்திக்க விரும்பிய போது, எம்ஜிஆர் கேட்டுக்கொண்டபடி ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றது. நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் அவையில் இலங்கை பிரச்சினைகள் குறித்து ஜெ பேச, அதைப் பற்றிய குறிப்புகளை தயாரித்து கொடுக்கச் சொன்னது எல்லாம் நீங்கா நினைவுகள்.

அது மட்டுமல்ல 1980 நாடாளுமன்ற தேர்தலில் நெடுமாறன் அவர்களின் தமிழ்நாடு காங்கிரஸ் (கா) அதிமுக கூட்டணியில் சிவகாசி நாடாளுமன்ற தொகுதியினை எனக்கு அளிக்கலாம் என எம்ஜிஆர் அவர்கள் விரும்பியதும், அப்போது கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நிற்கலாம் நாடாளுமன்ற தொகுதியில் நிற்க எனக்கு சற்று அச்சம்.கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சிபிஐ மூத்த தலைவர் சோ அழகிரிசாமி கூட்டணியில் போட்டியிட்டதால் எனக்கு வழங்க இயலாத தொகுதி ஆகிவிட்டது. ஆனால் அந்த தேர்தலில் அன்றைக்கு அதிமுக 40 தொகுதிகளில் சிவகாசி மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஆகிய இரு தொகுதிகளில்தான் அந்த கூட்டணி வெற்றி பெற்றது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின் நான் தி.சு.கிள்ளிவளவனுடன் எம்ஜிஆரை சந்திக்கச் சென்றபோது அவர், “நான் சிவகாசியில நிக்கச் சொன்னேன் இல்லையா? அங்கே சிவகாசியில் ஜெயிச்சிருக்கு இல்லையா” என்று வாஞ்சையோடு சொன்னார். அதுமட்டுமல்ல தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நந்தனத்தில் தனி வீடாக எனக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதெல்லாம் எண்ணிப் பார்க்கின்றேன். இனியும் விடுதலைப்புலிகள் உடன் அவருக்கு இருந்த உறவுகளை சொல்வதற்கு அவகாசம் இங்கு இல்லை. அதை என் நெஞ்சில் பதிந்த நினைவுகளை பதிவு செய்து வருகின்றேன்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
17.01.2021
#ksrposts #ksradhakrishnanposts எம்ஜிஆர்

No comments:

Post a Comment

மூடி மறைக்க முடியாத யதார்த்தம்....

  மூடி மறைக்க முடியாத யதார்த்தம்.... கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும்...