Tuesday, February 9, 2021

#இலங்கையில்_அமைதிப்படையுடன்_தினமலர்_அந்துமணியின்_புத்தகம்


இன்றைய (16.01.2021) தினமலரில் ‘அமைதிப்படையுடன் அந்துமணி’ என்ற தினமலர் புத்தகத்திற்கு அரைப் பக்கத்திற்கு நூல் மதிப்புரை வந்துள்ளது.
எல்லாம் சரிதான், இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை அமைதிப்படையா? அமளிப்படையா? அங்குள்ள ஈழத்தமிழர்களை பாதுக்காக்கவேண்டிய அமைதிப்படை எத்தனை தமிழர்களை கொன்றது, தமிழ் பெண்கள் எப்படியெல்லாம் நாசமாகி பாதிக்கப்பட்டார்கள் என்று செய்திகள் வெளிவந்தன. சிங்களப் படையினருக்கு சமமாக அமைதிப்படை தமிழர்களை கொன்றொழித்ததை மறக்கமுடியுமா…?

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி – இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் படி அமைதிப்படை சென்று தமிழர்களை பாதுகாத்ததா…? என்று இப்புத்தகத்தை எழுதிய அந்துமணி சொல்லவேண்டும். அமைதிப்படையால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பட்டபாடுகள் எவ்வளவோ என்று அப்போது செய்திகள் வந்தன. அதை குறித்து என்ன நடந்தது என எழுதியிருந்தால் எழுதியவருக்கும், இப்புத்தகத்திற்கும் ஓர் மதிப்பு இருந்திருக்கும்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
16.01.2021

No comments:

Post a Comment

மூடி மறைக்க முடியாத யதார்த்தம்....

  மூடி மறைக்க முடியாத யதார்த்தம்.... கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும்...