Monday, February 8, 2021

#நாளை_பொங்கல்_திருநாளுக்கு_தயாராகுதல்.....


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல், கோபியில் கலர் கோலப் பொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.தை பண்டிகை காலங்கள் மற்றும் மார்கழி மாதத்தில் பெண்கள் வீட்டின் முன்பு கலர் கோலப்பொடியால் கோலம்

போடுவது வழக்கம். அதனால் மார்கழி மற்றும் பொங்கல் வரை கலர் கோலப்பொடி விற்பனை ஜோராக நடக்கும். புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் சட்டாம்பிள்ளை சந்தில் கலர் கோலப்பொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடக்கிறது. சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ரோஸ்,

ஆரஞ்ச் என 22 வகை வண்ணங்களில் கோலப் பொடி தயாராகிறது. இங்கிருந்து பல வெளி மாவட்டங்களுக்கும் அதிகம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த விற்பனையும் செய்யப்படுகிறது.

13-1-2021.
Photo Vincent D Souza

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...