Thursday, February 4, 2021

#ஆண்டாள்_பாசுரம்


“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன்வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்!”
ஆண்டாள் பாசுரங்களில் மங்களம் குவிய முத்துமணிகளால் அலங்கரிக்கப்பட்ட மந்திரங்கள் முழங்க கோதை நாச்சியாரின் கைதளம் பற்றுகிறார் மதுசூதனன். தன்னுடைய திருமணக் காட்சிகளை அழகுற பாடுகிறார் தன் தோழிக்கு ஆண்டாள். ஆண்டாள் தமிழுக்கு ஒரு குறியீடு மட்டுமல்லாமல் பெண்மைக்கும் அடையாளமாக திகழ்கிறார். தீந்தமிழில் ஆண்டாளின் பாசுரங்கள் ஏற்ற இரக்கத்தோடு கேட்க இதமாகவும் நயமாகவும் இருக்கின்றது.
தன் மனக்காட்சியில் கண்ட மணக்காட்சிகள் அழகுற தன் தோழிக்கு விவரிக்கிறாள்! இந்த வரிகளை படிக்கும் போதும், கேட்கும் போதும் நமக்கு தித்திக்குறது.

“நாச்சியார் துடிக்கிறார்; நாமும் துடிக்கிறோம்!
நாச்சியார் உருகுகிறார்; நாமும் உருகுகிறோம்!
நாச்சியார் கெஞ்சுகிறார்; நாமும் கெஞ்சுகிறோம்!
நாச்சியார் கொஞ்சுகிறார்; தமிழும் கொஞ்சுகிறது!”
என்று கவிஞர் கண்ணதாசன் சொன்தை போல அரங்கன் நினைவன்றி வேறொன்றும் அறியாத ஆண்டாளின் பக்தி அறிவும் விசால பார்வையும் அளவிடற்கரியது!
ஆண்டாள் தமிழுக்கும் குறியீடு , பெண் குலத்திற்கும், பெருமை!
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
08-01-2021

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…