———————————————————
புத்தாண்டு பிறந்து தினகாலண்டர்களும், மாதகாலண்டர்களும், மேஜை காலண்டர்களும், டைரிகளும் விதவிதமாக வந்தன. இந்த காலத்தில் பல நிறுவனங்கள், சங்கங்கள் நகைக்கடைகளில், ஜவுளிகடைகளில், மளிகைகடைகளில் என அரசியல் கட்சிகளும் காலண்டர்கள் போடுவதை 90லிருந்து படிபடியாக துவங்கின.
முன்பெல்லாம் காலண்டர்கள் கிடைக்காது. விலைக்கு தான் வாங்கவேண்டும். தென்மாவட்டங்களில் குறிப்பாக திண்டுக்கல் அங்கு விலாஸ் புகையிலை கம்பெனி காலண்டர், முக்கூடல் பீடி கம்பெனி காலண்டர்கள் என எனக்கு தெரிந்தவரை மதுரை விவேகானந்தர் அச்சகம் வெளியிடும் விவேகானந்தர் காலண்டர் சிறப்பாக இடம் பிடிக்கும்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து லைட் பச்சை கலரில் 50-களில் விவேகானந்தர் காலண்டர்களைப் பார்த்து வருகிறேன், இன்றைக்கும் பழைய கட்டமைப்பில் ஒரு நீண்ட வடிவமைப்பில் அதற்கான சிறப்பாக வெளிவருகிறது, நெடுமாறன் தந்தையார் கி.பழநியப்பனார் விவேகானந்தர் காலண்டரை கொண்டு வந்தார், 50-ல் இருந்து இன்றைக்கு வரை விவேகானந்தர் காலண்டர் இல்லாமல் எங்கள் வீடு இருந்தது இல்லை. இப்போது பலர் காலண்டர் போடுவது வாடிக்கையாகிவிட்டது. 56, 60 களில் காலண்டர்கள் பெறுவது வருட துவக்கத்தில் ஒரு சாதனையாக நினைப்பார்கள் இப்போது வருடம் பிறந்துவிட்டால் பல காலண்டர்கள் வந்து குவிகின்றன. இதுவும் காலத்தின் மாற்றம்தான். வட மாவட்டங்களில் காஞ்சிபுரம் துரை காலண்டர்கள் முக்கியமாக விற்பனையில் இருக்கும்.

No comments:
Post a Comment