#கால்நடை_செல்வங்கள் நமக்கானவை. அவை தன்னலம்பாரா உழைப்பாழிகள். அவற்றை பரிவோடும் பாசத்தோடும் பராமரித்து காப்போம். இது நமது கடமை. நம் நன்றியை காட்டுவோம்.
மாட்டுப் பொங்கலை தொழுவத்தில் வைப்பர்கள். விவசாயிகளுக்கு மாடும் ஒரு சாமிதான். மாட்டுக்கு இவர்கள் மனசுக்கு மட்டுமல்ல, வெளியிலும் தரும் இடமும் அதிகம். கிராமங்களில் கோவிலின் மதில்சுவரின் மேல் முக்குகளில் அண்ணாந்து பார்த்தால் சிலைகளாகப்படுத்திருக்கும் கோவிலினுள் நுழைந்தால் முதல் ஆளாக மாடசாமிதான் காட்சி தருவார்.
விவசாயிகள் காலை எழுந்ததும் மாட்டின் முகத்தில் தான் விழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் மாட்டுத் தொழுவை வீட்டின் முன்பக்கமாக அமைக்கிறார்கள்.
எந்திரங்கள் வந்துவிட்ட பிறகும் மாட்டின் காலம் இருந்துகொண்டே இருக்கும்.
மாடும் நமது செல்வங்களே…

No comments:
Post a Comment