———————————————————-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் நிறுவனருமான சேலம் ராசிபுரம் பி.வரதராஜ நாயுடு மதுரையில் 1918-இல் ஹார்வி மில், கோரல் மில் வேலை நிறுத்தத்தை ஆதரித்து வைகை கரையில் பேசிய பேச்சு மதுரை மக்களைச் சிந்திக்க வைத்தது. பி.வரதராஜ நாயுடுவின் பேச்சாற்றல் மட்டுமல்ல அவருடைய எழுத்துக்கள், களப்பணி என்பதெல்லம் முக்கியானவை. அன்றைய ஆங்கில அரசாங்கம் அவருக்கு மதுரையில் பேசியற்காக சிறையில் அடைத்தது, அவருக்காக மதுரைக்கு வந்து இராஜாஜி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடினார். மதுரையிலிருந்து வந்த தமிழ்நாடு தமிழ் இதழையும் வரதராஜ நாயுடு துவங்கினார்,. பின்னால் கருமுத்து தியாகராய செட்டியார் நடத்தினார்.

No comments:
Post a Comment