Wednesday, February 10, 2021

#தமிழ்_அறிஞர்_மு_ராகவையங்கார்_நினைவு_நாள்

———————————————————-
இராமநாதபுரத்தில், 1878 ஜூலை, 26-ல் பிறந்தவர் மு.ராகவையங்கார். ராமநாதபுரம் சமஸ்தான புலவராக இருந்த தன் தந்தையிடமே, கல்வி பயின்றார்.
பாண்டித்துரை தேவர் துவக்கிய, நான்காம் தமிழ்ச்சங்கத்தின் சங்கப் பள்ளியில், தமிழாசிரியராக, நியமிக்கப்பட்டார். அவர் துவக்கிய, ‘செந்தமிழ்’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும் செயல்பட்டார். தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். எண்ணற்ற தமிழ் ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார்.

சென்னை பல்கலை தமிழ்ப் பேரகராதி தயாரிப்புக் குழுவின் தலைவராகச் செயல்பட்டு, அதற்கு இறுதி வடிவம் கொடுத்தார். சுவடி, கல்வெட்டு, பண்டைய இலக்கண – இலக்கிய உரை ஆகியவற்றில் காணப்பட்ட பழஞ்செய்யுள்களை முழுமையாகத் தொகுத்து, இவர் உருவாக்கிய, ‘பெருந்தொகை நூல்’ முக்கியமானது.
திருவனந்தபுரம் பல்கலை தமிழ் ஆராய்ச்சி துறை தலைவராகவும், சென்னை லயோலா கல்லூரியில் சிறிது காலம் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1960 பிப்ரவரி 2-ல் தன் 82-வது வயதில் மறைந்தார். முதுபெரும் புலவர் மு.ராகவையங்கார் காலமான தினம் இன்று.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
02.02.2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...