Monday, February 8, 2021


யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கொடுத்த வாக்கு நிறைவேற்றப்பட்டு மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் நிறைவானது...ஆனாலும்....
யாழ் பல்கலைக கழகத்தின் துணைவேந்தருக்குத் தமிழ்மக்களின் நாடித்துடிப்பு தெரியாமல் இருந்தது வியப்பாக இருந்தது.
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரது அழுத்தத்துக்கே துணை வேந்திர் பலியாகினார் என்பது தெரிகிறத.
பல்கலைக் கழகத்தில் 1,500 சிங்கள மாகாணவர்கள் படிக்கிறார்கள் அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் அவலம் அரங்கேறிய போது 9,10,11 அகவைதான் இருக்கும். எனவே அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நெருடலாக இருக்கிறது. அது மீள்நல்லிணக்கத்துக்கு குந்தகமாக இருக்கிறது என்பதாலேயே நினைவுத் தூபி அகற்றப்பட்டது என்று சொன்னார்.
அது சரியென்றால் ஆனையிறவு போன்ற இடங்களில் இராணுவம் நிறுவியுள்ள போர் வெற்றி நினைவிடங்கள் எதைச் சொல்கிறது? எதைக் காட்டுகிறது? அது நல்லிணக்கத்தின் அடையாளமாக இருக்கிறதா? சரி போகட்டும்.
தென்னிலங்கை பல்கலைக்க கழக வளாகங்களில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்ட காலத்தில் இறந்த ஜேவிபி போராளிகளுக்கு நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டு இருக்கின்றனவே அது எப்படி?
சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு இன்னொரு நீதியா? யாழ் பல்கலைக் கழக நினைவுத் தூபி போரில் கொல்லப்பட்ட வி.புலிகள் நினைவாக இல்லை. அது முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு பொதுமக்கள், மாணவர்கள் நினைவாக எழுப்பப்பட்டது.

பல்கலைக் கழக மானியத் தலைவர் இடிக்கச் சொன்னாலும் அதனால் வரும் பின்விளைவுகள் பற்றி துணை வேந்தர் அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.
தீமையிலும் ஒரு நன்மை இருப்பது போல இப்போது சட்டபூர்வமாக முள்னிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்த காரணத்தால் -
ஈழத்தமிழரைஎழுச்சிகொண்டெழுப்பவும்
உதவியது....

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...