Monday, February 8, 2021

#மதுரையின்_அடையாளம்_தங்கம்_தியேட்டர்


———————————————————
மதுரையின் அடையாளமாக திகழ்ந்த தங்கம் தியேட்டர் இன்றைக்கு இல்லை. தங்கம் தியேட்டர் தான் ஆசியாவிலேயே மிகப்பெரியது என்று அப்போது கூறப்பட்டது. 52 ஆயிரம் சதுர அடியில், 2563 நபர்கள் உட்கார்ந்து பார்க்கக்கூடிய வகையில் தங்கம் தியேட்டர் பிச்சைமுத்து என்பவரால் கட்டப்பட்டது. 1952-ல் வெளியான தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ‘மைல்கல்லாகத்’ திகழும் ‘பராசக்தி’ படத்தை திரையிட்டுக்கொண்டே தங்கம் தியேட்டரைக் கட்டி முடித்திருக்கிறார்கள். தங்கம் தியேட்டரில் இருந்த பெரிய திரையில் அமெரிக்கன் புரஜெக்டர் மூலம் திரைப்படங்கள் திரையிடப்பட்டது மதுரை மக்களை வெகுவாக கவர்ந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் திரைப்படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடி வெள்ளிவிழா கண்டன.

மல்டி தியேட்டர்களின் பெருக்கம், தொலைக்காட்சியின் அசுர வளர்ச்சி மற்றும் பிரைவேட் கேபிள்களின் வளர்ச்சியால் தங்கம் தியேட்டர் 1990-ஆம் ஆண்டு திரைப்படக்காட்சியை நிறுத்தியது.
1960, 1970 மற்றும் 1980 காலக்கட்டங்களில் தங்கம் தியேட்டரில் படம் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளன. கால மாற்றத்தால் பல அடையாளங்களை நாம் இழந்து வருகிறோம்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
09-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...