Monday, May 8, 2023

திராவிட இயக்கத்தின் முன்னோடி மதுரை முத்து

திராவிட இயக்கத்தின் முன்னோடி 
மதுரை முத்து

‘‘ திராவிடர் கழகமாக இருந்த வேளையில் (1943) தந்தை பெரியார் அவர்களும், நானும் மதுரைக்குச் சென்றோம். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி வெகுநேரம் பெட்டி படுக்கையுடன் காத்திருந்தோம். சங்கத்தலைவர் வைத்தியநாத அய்யரின் உத்தரவுப்படி மதுரையில் ஒரு குதிரை வண்டி கூட கிடைக்காத நிலை எங்களுக்கு  ஏற்படுத்தப்பட்டது. 
மதுரை கருப்புச்சட்டை மாநாட்டுப் பந்தல் கொளுத்தப்பட்டபோது, தலைவர்களைக் காரில் ஏற்றி 30 கல் தொலைவு கொண்டு வந்து ரயிலேற்றிவிட்ட கொந்தளிப்பு மிக்க மதுரையை இன்று கழகத்தின் எழில்கோட்டையாக மாற்றியது மதுரை முத்துவின் பணியாகும். ஒன்றரை வருடம் சிறை வாழ்வு, வீண் வழக்குகள், இடையூறுகள், அவற்றை எல்லாம் தாங்கிடும் உள்ள உறுதி படைத்த மதுரை முத்துவை பாராட்டுகிறேன்’’ அறிஞர் அண்ணாவால்  21.03.1966 இல் நடந்த கூட்டத்தில் பாராட்டப்பட்டவர் மதுரை முத்து.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...